புதுப்புனலும் பூங்குழையார் நட்பும் இரண்டும்
விதுப்பற நாடின் வேறல்ல - புதுப்புனலும்
மாரி அறவே அறுமே அவரன்பும்
வாரி அறவே அறும்
- நாலடியார்.
மீண்டும் வலியுறுத்திச் சொல்கிறேன் கற்பு என்பதை மனித உறுப்புகளுடன் தொடர்புப்படுத்திப் பார்க்காதீர்கள். அது மனது/ஒழுக்கம் சார்ந்தது.
கற்பு என்பதற்கு
இப்பதிவின் கடைசியில் உள்ள வரையறையைக் காண்க....
ஒரு பெரியவர்(மகா பெரியவாள் அல்ல), ஆண்-பெண் கற்பு நிலையைப்பற்றி முற்போக்காக சிந்திப்பதாக நினைத்து எழுதி, செப்படி வித்தை செய்து மற்றவரை நம்பவைப்பதைப்போல, அதில் அவர் வெற்றியும் பெற்றுவிட்டதாக நினைக்கிறார்.
படிதாண்டாதவள் நிலை.//
சீக்கு வந்தவனுக்கு பத்தியம் சொல்லிகுடுத்தா 'நல்லா இருக்குற உன்புள்ளைக்கு ஏன் இந்த பத்தியம் சொல்லி குடுக்கலை"னு சீக்காளி சண்டைக்கு வர்ர மாதிரியல்ல இருக்கு.
நீங்க சொன்னதெல்லாம் எதுக்கும் துணிஞ்சு வெளில போரவங்களுக்கு தான்,வீட்டுலயே இருக்குற குடும்ப குத்துவிளக்குகளுக்கு கிடையாதுனு புரியர புத்தி அந்த மண்ணாந்தைகளுக்கு கிடையாது.//
நமது கிழவன் ஒரு நாள் வீட்டிற்கு மல்லிகைப்பூ வாங்கிக்கொண்டு செல்கிறார்.கிழவனுக்கும் உடல் இச்சை என்பது பசி, தாகம் மாதிரிதானே..
புணர்வின் உச்சம்.இருவருமே மனம் ஒத்து இன்பம் துய்க்கின்றனர்.திடீரென்று நம் கிழத்திக்கு, கிழவனாரின் முகம் பிடிக்காமல், தமிழர்களின் ஏகோபித்த அன்பைப்பெற்ற தலைவர் ரஜினியை நினைத்துக்கொண்டு கண் மூடி இன்பம் துய்க்க ஆரம்பிக்கின்றார்.
என்ன நெஞ்சு பதறுகின்றதா?.....
அடுத்தமுறை உங்கள் கண்மூடிய மனைவியுடன் புணரும்போது, தயவு செய்து மேற்சொன்ன கருத்துகளை நினைத்துப் பார்க்காதீர்கள். வாழ்க்கை கசந்துவிடும்.
இப்போது கற்பு என்றால் என்ன என்று புரிந்துஎருக்கும் என நம்புகிறேன். ஒருவருக்கொருவர் அன்பு செய்யுங்கள். கற்பை அடுத்தவர் மீது திணிக்காதீர்கள்.
ஆடுகளின்மேல் ஓநாய்களின் கரிசனம்.//
"திருமணத்துக்கு முன்னும் அவன் மண்டையை போட்டதுக்கப்பாலும்
ஏன் இவளுக்கு கட்டுபாடுகள்னு கொஞ்சம் விளாக்க முடியுமா?"
அதுதான் இருந்ததிலேயே ஒரு பெரிய கொடுமை. அவன் மண்டையைப் போட்டால் என்ன? அவனுக்கு அப்புறம் அவளுக்கு வாழ்வேயில்லை என்று காண்பித்தால்தானே மற்ற ஆண்கள் சும்மா இருப்பார்கள்?
கொடுமை, கொடுமை. //
ஆணாதிக்க ஓநாய்களுக்கு பெண்களின் மேல் எத்துனை கரிசனம்...
கொல்லைப்புற வழி.
//
//விபசார தடைச் சட்டட்தை வாபஸ் பெற்றால் பாலியல் சம்பந்தமான குற்றங்கள் குறையும்// என்பது மிகவும் உண்மை. consumer என்ற group இருக்கும் வரை, இத்தகைய நிகழ்வுகள் தொடர்கதைதான். அதை ஒரு தொழிலாக அறிவித்து `விபசாரி' என்ற பதத்துக்கு மாறான `பாலியல் தொழிலாளர்கள்' என்ற பதத்தை நடைமுறைப் படுத்தலாம்.//
//
பாலியல் உறவுக்கு உடல் தயாராகி பல ஆண்டுகள் கழித்துத்தான் ஆணுக்கும் சரி பெண்ணுக்கும் சரி திருமணம் நடக்கிறது. இடைபட்ட காலத்தில் உடல் இச்சை வரவே வராதா? ஆண் இதில் அதிகம் கஷ்டம் அடைவதில்லை. பெண்தான் அவதிக்குள்ளாகிறாள். பழங்காலத்தில் பால்ய விவாகத்துக்கு இதுவும் ஒரு முக்கிய காரணம். இந்த முறையில் வேறு சிக்கல்கள் எழுந்தன. உதாரணத்துக்கு பால்ய விதவைகள். அதில் மட்டும் சற்றே கருணையுடன் நடந்து, பால்ய விதவைகளுக்கும் மறு திருமணம் செய்து வைத்திருந்தால் பலரது வாழ்க்கை பாழாகாது இருந்திருக்கும்.//
இதுமாதிரி கருத்துகளை சொல்லியிருக்கிற அல்லது மற்றவர்களின் பின்னூட்டத்த மறுக்காத அவர், மேம்போக்காக பெண்களுக்கு நல்லது நினைப்பவராகவே தன்னை காட்டிக் கொள்பவர், கொல்லைப்புற வழியாக
தேவதாசி முறை
குழவித் திருமணம்.(பால்ய விவாகா)
போன்றவற்றை பார்வையாளர்களின் ஆழ்மனதில் புகுத்த முயற்சிக்கின்றார் என்றே நினைக்கின்றேன்.
உடல் பசி //
உடல் இச்சை என்பது பசி, தாகம் போல அடிப்படை உணர்வு. தங்களைப் பொருத்தவரை அதை அடைவதில் எந்த சிரமும் இல்லாதவர்கள், மற்றவர்களுக்கு மட்டும் கட்டுப்பாடு விதிப்பதில் என்ன நியாயம்.//
இதில் நிச்சயமாக யாருக்கும் மாற்று கருத்து இருக்க முடியாது. ஆனால் அரிப்பெடுக்கும்போதெல்லாம் சொறிந்துகொள்ளலாமா?
என்ன நினைக்கின்றார் அவர்?
புராணத்தின் பங்கு.ஓ, இந்தியத் திருநாட்டில் பிறந்த ஆண் மாக்களே!
மானம் வ்ற்றலுக்கென்றே, பிறப்பால் ஒரு சாதி நமது நாட்டில் மட்டுமே ஏற்படுத்தப்பட்டது.
வேளாளன் பிள்ளை வேளாளன் என்பதுபோல், வேசியின் பெண்னும் வேசியாகக் கருதப்படுகிறாள்.
புராணங்களில், குறிப்பிட்டவர்கள் தெய்வ மூலம் உடையவர்களென்றும், அவ்வினத்தார் ஒவ்வொரு குடுபத்திலிருந்தும் ஒவ்வொரு பெண் தெய்வப்பணிக்கென்று அர்ப்பணிக்கப்படல் வேன்டும்.பிறகு அவர்களுக்கு பொட்டு கட்டிவிட்டார்கள்.தற்போது அவ்வாறு முடியாது ஆகவே பெண்கள் தாங்களே முன்வந்து பொட்டு கட்டிக்கொள்ளாத தாசிகளாய் இருக்கவேன்டும் என விரும்புகின்றனர்.
சட்டமியற்றியும் அவர்கள் பெண்களுக்கு உதவ காத்திருக்கின்றனர்.
இழிவு யாருடையது?ஆண் மக்களிடையே ஒழுக்கம் காக்கப்படின் பெண் உலகில் இழிவேது...
நாடா கொன்றோ; காடா கொன்றோ;
அவலா கொன்றோ; மிசையா கொன்றோ;
எவ்வழி நல்லவர் ஆடவர்
அவ்வழி நல்லை; வாழிய நிலனே
- அவ்வையார்
நிச்சயமாய் பூனூல் போட்ட அவர்களை ஆணென்று கருதி கேட்க முடியாது. ஏனென்றால் அவர்கள் அனைவரும் கற்பனை விபச்சாரகன் கிருஷ்ணனின் கோபியர்கள் அன்றோ...
கைம்மை நிலை.1921 ம் ஆண்டின் மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் கைம்மை நிலை புள்ளி விவரங்களிது.
1921 | இருபாலர் | பெண்கள் | கைம்மை அடைந்தோர்
| 1 - 15 வ |
---|
அனைவரும் | 318,942,480 | 154,946,926 | 26,834,838 | 396,556 |
இந்து மதம் | 216,734,586 | 105,829,124 | 20,218,780 | 329,076 |
வயது | 0-1 | 1-2 | 2-3 | 3-4 | 4-5 | 5-10 | 10-15 |
---|
இந்துமதம் பிடித்தவர் | 759 | 612 | 1600 | 3475 | 3693 | 1,02,293 | 27,79,124 |
மற்ற மதம் பிடித்தவர் | 597 | 494 | 1257 | 2837 | 6707 | 85037 | 232147 |
ஐயகோ! என் மனம் குமுறுகின்றது. இந்நிலையில் எழுதினால் கனியிருப்ப காய்கவர்ந்து கயவர்கள் மீது வசைமாரி பொழிந்துவிடுவேனோ என அஞ்சுகிறேன்.
மீண்டும் சந்திக்கிறேன்.
நன்றி