காதுகேளாச் சாமி?

தமிழ்நாட்டுக் கோயில்கள் பெரும்பாலனவற்றில் மூலவரின் இடப்பக்கத்தில் காது கேட்காத சாமிக்கென்று ஓர் இடம் இருக்கும்.

(அடுத்த மாநிலக்கோயில்கள் பற்றி எனக்கு தெரியவில்லை, இச்செய்தியைப் பொறுத்தவரையில் நான் ஒரு கிணற்றுத்தவளை).

கோயில் பிரகாரத்தைச் சுற்றிவரும்போது அங்குமட்டும் கையினால் சொடக்குப்போட்டு பிறகு வேண்டிக்கொள்வோம்.

(மனதிற்குள் வேண்டும்போது மட்டும் சாமிக்கு கேட்குமா என்று தெரியவில்லை)

இதற்கு ஆகம விதிப்படி ஏதேனும் காரணம் உள்ளதா?
அல்லது பொதுப்படையான காரணம் ஏதேனும் உள்ளதா?

தயவு செய்து தெரிந்தவர்கள் உங்கள் கருத்துக்களை சொல்லுங்கள்.

நன்றி,
பூங்குழலி.

8 பின்னூட்டங்கள்:

G.Ragavan said...

பூங்குழலி, சண்டிகேசுவர் சந்நிதி தமிழ் ஆகம முறைக் கோயில்களில், அதிலும் சைவக் கோயில்களில் மட்டுமே காணப்படும். பெங்களூரிலும் ஓரிரு கோயில்களில் பார்த்திருந்தாலும் அவைகளும் தமிழர் எழுப்பியவையே.

ஒரு தகவல் இங்கே. எனக்குத் தெரிந்து வடக்கிலுள்ள ஒரு சிவன் கோயிலில் சண்டிகேசுவரரைப் பார்த்திருக்கின்றேன். இன்றைக்குக் கும்பிடுவார் யாருமின்றி சுற்றுலாத்தலமாகப் பாதுகாக்கப்படும் சிற்பக்கலைநயம் மிகுந்து தென்னாட்டு கட்டடக்கலைப்படி அமைந்த எல்லோராவின் விஸ்வநாதர் கோயில். பார்த்ததுமே தமிழ்நாட்டுக் கோயிலைப் பார்த்த உணர்வு வரும். அமைப்பும் சிற்பங்களும்....அடடா! அற்புதமான இடம்.


பூங்குழலி said...

தகவலுக்கு நன்றி இராகவன் அவர்களே..

இம்மாதிரி சந்நிதி ஏன் சைவக்கோயில்களில் மட்டும் வைத்திருக்கிறார்கள்.

சண்டிகேசுவர் காதுகேட்கும் சாமியென்றே நினைக்கிறேன்.
அவரிடம் நாம் கைசொடுக்கும் அர்த்தமென்ன?

கண்டிப்பாக ஏதேனும் காரணமிருக்கும்.
இராகவன் = இராமன், சரியா?
நன்றி.


Suka said...

எனக்குத் தோன்றியதை சொல்கிறேன்..

கடவுளில் கூட ஊனமுற்றோர் உண்டு என உனமுற்றோரை உற்சாகப்படுத்துவதற்காக இருக்குமோ என எண்ணுகிறேன்.

இது குறித்து ஓர் உண்மைச் சம்பவமொன்று நினைவிற்கு வருகிறது. விரைவில் எழுதுகிறேன்.

சுகா


குமரன் (Kumaran) said...

பூங்குழலி. சண்டிகேசுவரர் காது கேக்காத சாமி இல்லை. அவர் ஒரு பெரிய சிவபக்தர். எப்போதும் சிவ தியானத்தில் இருப்பவர். அதனால் தான் சைவ கோவில்களில் மட்டும் அவருக்கு சன்னிதி இருக்கிறது. சிவன் கோவிலுக்கு வருபவர்கள் சிவபெருமானை தரிசித்தப் பிறகு, சண்டிகேசுவரரையும் தரிசித்துப் போனால் தான் கோவிலுக்கு வந்த பலன் கிடைக்கும் என்பது நம்பிக்கை. அவர் தியானத்தில் இருப்பதால் அவர் கவனத்தைப் பெற அதிகம் சத்தம் கேட்காத படி கையால் சொடுக்கி வணங்குகிறார்கள். அவருக்கு காது கேளாது என்பதால் அல்ல.

நீங்கள் சொன்னபடி மனதில் வேண்டினாலே சாமிக்குக் கேட்கும். அதனால் நான் கை சொடுக்காமலேயே சண்டிகேசுவரரைப் பார்த்து வருவது வழக்கம்.


பூங்குழலி said...

சங்கர்குமார் என்றொரு அன்பர் மின்னஞ்சல் மூலம் அவருடைய கருத்தை அனுப்பியிருந்தார்.
இதோ உங்களின் பார்வைக்கு அப்படியே தருகிறேன்.
-பூங்குழலி

Dear Ms. Puunkuzhali,
Since I don't have a blog a/c, I am sending this amil! Hope you enable people like me also to post in your blog! Thanks.

சண்டிகேசுவரர் சிவபெருமானின் 'சேவகர்' போன்றவர்.
சிவ சந்நிதிகளில் சுற்றி வரும்போது இடப்பக்கம் அமர்ந்திருப்பார்.
'சிவன் சொத்து குலநாசம்' என்று சொல்லுவார்கள்.
ஆகவே, கோயிலைச் சுற்றி முடிந்ததும், கடைசியாக, சண்டிகேசுவரரிடம் வந்து, கைகளைத் தட்டி 'நான் ஒன்றும் இங்கிருந்து எடுத்துச் செல்லவில்லை' என்னும் விதமாக சொல்லிச் செல்வர்.
இப்போது, அது சுருங்கி, சிட்டா போடும்படி ஆகியிருக்கிறது!!
நன்றி.

[saNdikEsuvarar sivaperumaanin 'sEvakar' pOnRavar.
siva sa-n-nidhikaLil suRRi varumpOdhu idappakkam amar-ndhiruppaar.
'sivan soththu kula-naasam' enRu solluvaarkaL.
aagavE, kOyilaich chuRRi mudi-ndhadhum, kadaisiyaaga, saNdikEsuvararidam va-ndhu, kaikaLaith thatti '-naan onRum inggiru-ndhu eduththuch chellavillai' ennum vidhamaaga sollich chelvar.
ippOdhu, adhu surunggi, chittaa pOdumpadi aagiyirukkiRadhu!!
-nanRi. ]


anbudan,
Sankarkumar
"LOVE ALL; SERVE ALL; BE HAPPY!!"


பூங்குழலி said...

சிந்தனையைத்தூண்டும் கேள்வியை கேட்டதற்கு நன்றி திரு தமாஷ் பாண்டி.
ஆதாரங்களைத்திரட்டிவிட்டுத் தனிப்பதிவுபோட்டுக் கேட்கலாம் என்றிருந்தேன், நீங்களே கேட்டுவிட்டீர்கள்.

நன்றி.

நீங்கள் வரலாற்று/இலக்கிய ஆதாரங்களைப் பற்றி சற்றே சுட்டி/அதுபற்றிய தகவல் கொடுத்தால் ஆணித்தரமாக கேட்கமுடியும் என்றே நினைக்கிறேன்.
மற்ற யாருக்காவது தெரிந்தாலும் கொடுத்து உதவுங்களேன்.

-பூங்குழலி


பூங்குழலி said...

புரிதலின் பின்னூட்டம் பெரிதாகிவிட்டபடியால் தனிப்பதிவாக போட்டுவிட்டேன்.
இப்பதிவைப் பார்க்கவும்

நன்றி.


பூங்குழலி said...

புதிய பதிவு பதிந்து வெகுநேரமாகியும் இன்னும் தமிழ்மணப் பட்டியலில், காணப்படவில்லை.

ஏதேனும் காரணமிருக்குமா?
முன்பு அன்பர்களிட்ட பரிந்துரைகள் என்னவாயிற்று?
தெரிந்தால் சொல்லுங்களேன்.
நன்றி
பூங்குழலி