தமிழ் குடிதாங்கிகளின் கவனத்திற்கு...

(அவ்வையார் - அதியமான் நட்பின் நெருக்கம்)


சிறியகட் பெறினே, எமக்கீயும்; மன்னே!
பெரிய கட் பெறினே,
யாம் பாடத், தான்மகிழ்ந்து உண்ணும்; மன்னே!

....................................
....................................

--------------------------------, என்அரை
முதுநீர்ப் பாசி அன்ன உடைகளைந்து,
திருமலர் அன்ன புதுமடிக் கொளீஇ,
மகிழ்தரல் மரபின் மட்டே அன்றியும்,
அமிழ்தன மரபின் ஊன்துவை அடிசில்
வெள்ளி வெண்கலத்து ஊட்டல் அன்றி


"சிறிது கள் கிடைக்கும் போது எனக்கு கொடுத்து, நிறைய கிடைக்கும் போது, நான் பாட நீ குடித்து மகிழ்வாயே.
பழைய உடுக்கை களைந்து, உடுக்க புதிய உடுக்கை தருவாயே! மாமிசம் கலந்த சோறை வெள்ளிக் கிண்ணத்திலே தருவாயே!"
(பி. கு.. அவ்வையாரை பெருமைப்படுத்தவே வெள்ளிக்கிண்ணம், வெள்ளிக்கிண்ணத்திற்கு தீட்டு கிடையாது என்பதற்காக அல்ல)

தமிழின் காலச்சுவட்டில் பெண்களின் நிலைக்கு ஓர் எடுத்துக்காட்டு இது.

தமிழ் குடிதாங்கிகள் என கூறிக்கொள்பவர்கள், முதலில், தமிழரின் காலச்சுவடை முழுவதும் தெரிந்துகொள்ளட்டும்.

தூயதமிழ்ச் சொற்களை தட்டியில் மூலைக்கு மூலை கட்டி, அனைவரும் தூய தமிழில் பேசுங்கள் என்று கூறிக்கொண்டும், தங்களின் பெயர்த்திகளை ஆங்கிலம் மட்டுமே படிக்கவைத்தும், காலத்தை போக்குவதை நிறுத்திவிட்டு,

தமிழ் பெண்களின் முந்தைய நிலை, இப்போதைய இழிவு நிலை, அதற்கு எந்த தந்திர நரிகள் காரணம் என விழிப்புணர்வை வளர்க்க வேண்டும்.

அஃதன்றி "சோ" போன்ற ஆணாதிக்க நரிகளையும் மீறி, "பெண்கள் பாவயோனியில் பிறந்தவர்கள்" எனும் அச்சமூகத்திலிந்து தளை உடைக்க முயலும் சுஹாசினியை பாராட்டாமல், அவரை எதிர்க்கும் உங்களை "அரைவேக்காடுகள்" என்று நினைக்காமல் இருக்க முடியவில்லை.

நன்றி,
-பூங்குழலி

1 பின்னூட்டங்கள்:

Thangamani said...

நல்ல பாடலைக் குறிப்பிட்டு 'தமிழ்ப் பண்பாட்டு' காவலர்களின் கனவைக் கேள்வி எழுப்பியுள்ளீர்கள். நன்றி.