மனதிற் பட்டவை.
பிரசவத்தையும் , காந்தி பார்க்கும், கலாச்சார 'காவலர்களும்' என்ற பதிவுகளைப்
பார்த்து மனதில் எழுந்த எண்ணங்கள்.
மற்ற விலங்கினங்களைவிட மனிதனுக்கே பிறக்கும்போது
தலை/உடல் அளவு விகிதாச்சாரம் அதிகம்.
அறிவு வளர்ச்சிக்கு நாம் கொடுக்கும் விலை இது.
அதனாலேயே மற்ற விலங்குகள் போலல்லாமல்,
மற்றவர் உதவியின்றி மனிதரால் பிரசவிக்க முடியவில்லை.
கரு தாங்கி, உடல்வருந்தி, பிரசவத்தின்போது
பெண்கள் மறுபிறவியெடுத்தாலும்,
கலாச்சார காவலர்கள்/சமூகம் நம்மை
இழிவுப்படுத்தி இன்பங்காணும்.
அறிவின் வளர்ச்சித் தலையி னளவுச்
செறிவின் பயனா லிடைஞ்சல் - பசிதோய்
மெய்ப்பை பிதுக்கின் குழவியு மன்றித்
தாய்க்கும் மறுபிறவி யன்றோ!
நிதமு மறுவிறவி யெடுத்தாலும் நன்
மதலைப் பேறுகளை ஈந்தாலும் - வண்காம
வலையும் வீசுமோகினி யென்றே இழிவாய்
உலகமும் சொல்லிப் போகும்.
குற்றம் மட்டுமே சொல்லிக் கொண்டிருந்தால் எப்படி?
பெண்களுக்கேன் செலவுச் செய்யவேண்டும்? என்று எண்ணாமல் கல்விக்கண் கொடுத்து, பெண்களையும் இந்நாட்டின் குடிமக்களாக ஆக்கும் தெய்வங்களுக்கு நன்றி.
3 பின்னூட்டங்கள்:
பூங்குழலி தங்கள் கருத்து வரவேற்கத்தக்கதே! இருப்பினும் மனதில் எழுந்ததை எழுதி விடுகிறேன்.
ஆரம்ப கால சமூகத்தில் பெண்கள்தான் இச்சமூகத்தை வழிநடத்தியதாக எங்கே படித்தது ஞாபகத்திற்கு வருகிறது. ஆனால், பின் ஏன் பெண் இச்சமூகத்தில் பின் தங்கினாள் என்ற விபரம் அறிய விரும்புகிறேன். தெரிந்தால் பதியுங்களேன்....
நன்றி
வருகைக்கு நன்றி.
நிச்சயம் தகவல்களைத் திரட்டிவிட்டு பிறகு பதிவுப் போடுகின்றேன்.
நன்றி.
பூங்குழலி
so everybody into research..good..
Post a Comment