ஆண்-பெண் கற்பு நிலை, பகுதி--1


புதுப்புனலும் பூங்குழையார் நட்பும் இரண்டும்
விதுப்பற நாடின் வேறல்ல - புதுப்புனலும்
மாரி அறவே அறுமே அவரன்பும்
வாரி அறவே அறும்
- நாலடியார்.


மீண்டும் வலியுறுத்திச் சொல்கிறேன் கற்பு என்பதை மனித உறுப்புகளுடன் தொடர்புப்படுத்திப் பார்க்காதீர்கள். அது மனது/ஒழுக்கம் சார்ந்தது.
கற்பு என்பதற்கு இப்பதிவின் கடைசியில் உள்ள வரையறையைக் காண்க....
ஒரு பெரியவர்(மகா பெரியவாள் அல்ல), ஆண்-பெண் கற்பு நிலையைப்பற்றி முற்போக்காக சிந்திப்பதாக நினைத்து எழுதி, செப்படி வித்தை செய்து மற்றவரை நம்பவைப்பதைப்போல, அதில் அவர் வெற்றியும் பெற்றுவிட்டதாக நினைக்கிறார்.

படிதாண்டாதவள் நிலை.
//சீக்கு வந்தவனுக்கு பத்தியம் சொல்லிகுடுத்தா 'நல்லா இருக்குற உன்புள்ளைக்கு ஏன் இந்த பத்தியம் சொல்லி குடுக்கலை"னு சீக்காளி சண்டைக்கு வர்ர மாதிரியல்ல இருக்கு.
நீங்க சொன்னதெல்லாம் எதுக்கும் துணிஞ்சு வெளில போரவங்களுக்கு தான்,வீட்டுலயே இருக்குற குடும்ப குத்துவிளக்குகளுக்கு கிடையாதுனு புரியர புத்தி அந்த மண்ணாந்தைகளுக்கு கிடையாது.
//

நமது கிழவன் ஒரு நாள் வீட்டிற்கு மல்லிகைப்பூ வாங்கிக்கொண்டு செல்கிறார்.கிழவனுக்கும் உடல் இச்சை என்பது பசி, தாகம் மாதிரிதானே..

புணர்வின் உச்சம்.இருவருமே மனம் ஒத்து இன்பம் துய்க்கின்றனர்.திடீரென்று நம் கிழத்திக்கு, கிழவனாரின் முகம் பிடிக்காமல், தமிழர்களின் ஏகோபித்த அன்பைப்பெற்ற தலைவர் ரஜினியை நினைத்துக்கொண்டு கண் மூடி இன்பம் துய்க்க ஆரம்பிக்கின்றார்.

என்ன நெஞ்சு பதறுகின்றதா?.....

அடுத்தமுறை உங்கள் கண்மூடிய மனைவியுடன் புணரும்போது, தயவு செய்து மேற்சொன்ன கருத்துகளை நினைத்துப் பார்க்காதீர்கள். வாழ்க்கை கசந்துவிடும்.

இப்போது கற்பு என்றால் என்ன என்று புரிந்துஎருக்கும் என நம்புகிறேன். ஒருவருக்கொருவர் அன்பு செய்யுங்கள். கற்பை அடுத்தவர் மீது திணிக்காதீர்கள்.

ஆடுகளின்மேல் ஓநாய்களின் கரிசனம்.
//"திருமணத்துக்கு முன்னும் அவன் மண்டையை போட்டதுக்கப்பாலும்
ஏன் இவளுக்கு கட்டுபாடுகள்னு கொஞ்சம் விளாக்க முடியுமா?"
அதுதான் இருந்ததிலேயே ஒரு பெரிய கொடுமை. அவன் மண்டையைப் போட்டால் என்ன? அவனுக்கு அப்புறம் அவளுக்கு வாழ்வேயில்லை என்று காண்பித்தால்தானே மற்ற ஆண்கள் சும்மா இருப்பார்கள்?
கொடுமை, கொடுமை.
//
ஆணாதிக்க ஓநாய்களுக்கு பெண்களின் மேல் எத்துனை கரிசனம்...

கொல்லைப்புற வழி.

////விபசார தடைச் சட்டட்தை வாபஸ் பெற்றால் பாலியல் சம்பந்தமான குற்றங்கள் குறையும்// என்பது மிகவும் உண்மை. consumer என்ற group இருக்கும் வரை, இத்தகைய நிகழ்வுகள் தொடர்கதைதான். அதை ஒரு தொழிலாக அறிவித்து `விபசாரி' என்ற பதத்துக்கு மாறான `பாலியல் தொழிலாளர்கள்' என்ற பதத்தை நடைமுறைப் படுத்தலாம்.//

//பாலியல் உறவுக்கு உடல் தயாராகி பல ஆண்டுகள் கழித்துத்தான் ஆணுக்கும் சரி பெண்ணுக்கும் சரி திருமணம் நடக்கிறது. இடைபட்ட காலத்தில் உடல் இச்சை வரவே வராதா? ஆண் இதில் அதிகம் கஷ்டம் அடைவதில்லை. பெண்தான் அவதிக்குள்ளாகிறாள். பழங்காலத்தில் பால்ய விவாகத்துக்கு இதுவும் ஒரு முக்கிய காரணம். இந்த முறையில் வேறு சிக்கல்கள் எழுந்தன. உதாரணத்துக்கு பால்ய விதவைகள். அதில் மட்டும் சற்றே கருணையுடன் நடந்து, பால்ய விதவைகளுக்கும் மறு திருமணம் செய்து வைத்திருந்தால் பலரது வாழ்க்கை பாழாகாது இருந்திருக்கும்.//

இதுமாதிரி கருத்துகளை சொல்லியிருக்கிற அல்லது மற்றவர்களின் பின்னூட்டத்த மறுக்காத அவர், மேம்போக்காக பெண்களுக்கு நல்லது நினைப்பவராகவே தன்னை காட்டிக் கொள்பவர், கொல்லைப்புற வழியாக

தேவதாசி முறை
குழவித் திருமணம்.(பால்ய விவாகா)

போன்றவற்றை பார்வையாளர்களின் ஆழ்மனதில் புகுத்த முயற்சிக்கின்றார் என்றே நினைக்கின்றேன்.


உடல் பசி
//உடல் இச்சை என்பது பசி, தாகம் போல அடிப்படை உணர்வு. தங்களைப் பொருத்தவரை அதை அடைவதில் எந்த சிரமும் இல்லாதவர்கள், மற்றவர்களுக்கு மட்டும் கட்டுப்பாடு விதிப்பதில் என்ன நியாயம்.//
இதில் நிச்சயமாக யாருக்கும் மாற்று கருத்து இருக்க முடியாது. ஆனால் அரிப்பெடுக்கும்போதெல்லாம் சொறிந்துகொள்ளலாமா?
என்ன நினைக்கின்றார் அவர்?


புராணத்தின் பங்கு.

ஓ, இந்தியத் திருநாட்டில் பிறந்த ஆண் மாக்களே!
மானம் வ்ற்றலுக்கென்றே, பிறப்பால் ஒரு சாதி நமது நாட்டில் மட்டுமே ஏற்படுத்தப்பட்டது.
வேளாளன் பிள்ளை வேளாளன் என்பதுபோல், வேசியின் பெண்னும் வேசியாகக் கருதப்படுகிறாள்.

புராணங்களில், குறிப்பிட்டவர்கள் தெய்வ மூலம் உடையவர்களென்றும், அவ்வினத்தார் ஒவ்வொரு குடுபத்திலிருந்தும் ஒவ்வொரு பெண் தெய்வப்பணிக்கென்று அர்ப்பணிக்கப்படல் வேன்டும்.பிறகு அவர்களுக்கு பொட்டு கட்டிவிட்டார்கள்.தற்போது அவ்வாறு முடியாது ஆகவே பெண்கள் தாங்களே முன்வந்து பொட்டு கட்டிக்கொள்ளாத தாசிகளாய் இருக்கவேன்டும் என விரும்புகின்றனர்.

சட்டமியற்றியும் அவர்கள் பெண்களுக்கு உதவ காத்திருக்கின்றனர்.

இழிவு யாருடையது?

ஆண் மக்களிடையே ஒழுக்கம் காக்கப்படின் பெண் உலகில் இழிவேது...


நாடா கொன்றோ; காடா கொன்றோ;
அவலா கொன்றோ; மிசையா கொன்றோ;
எவ்வழி நல்லவர் ஆடவர்
அவ்வழி நல்லை; வாழிய நிலனே
- அவ்வையார்

நிச்சயமாய் பூனூல் போட்ட அவர்களை ஆணென்று கருதி கேட்க முடியாது. ஏனென்றால் அவர்கள் அனைவரும் கற்பனை விபச்சாரகன் கிருஷ்ணனின் கோபியர்கள் அன்றோ...

கைம்மை நிலை.

1921 ம் ஆண்டின் மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் கைம்மை நிலை புள்ளி விவரங்களிது.










1921இருபாலர்பெண்கள்கைம்மை அடைந்தோர்
1 - 15 வ
அனைவரும்318,942,480154,946,92626,834,838396,556
இந்து மதம்216,734,586105,829,12420,218,780329,076












வயது0-11-22-33-44-55-1010-15
இந்துமதம் பிடித்தவர்7596121600347536931,02,29327,79,124
மற்ற மதம் பிடித்தவர்59749412572837670785037232147

ஐயகோ! என் மனம் குமுறுகின்றது. இந்நிலையில் எழுதினால் கனியிருப்ப காய்கவர்ந்து கயவர்கள் மீது வசைமாரி பொழிந்துவிடுவேனோ என அஞ்சுகிறேன்.

மீண்டும் சந்திக்கிறேன்.

நன்றி

17 பின்னூட்டங்கள்:

doondu said...
This comment has been removed by a blog administrator.

dondu(#11168674346665545885) said...

First thing first. இதற்கு முந்தையப் பின்னூட்டம் இட்டது நானில்லை. அது போலி டோண்டு என்ற இழிபிறவி செய்த வேலை. தயவு செய்து அதை அழிக்கவும்.

"//உடல் இச்சை என்பது பசி, தாகம் போல அடிப்படை உணர்வு. தங்களைப் பொருத்தவரை அதை அடைவதில் எந்த சிரமும் இல்லாதவர்கள், மற்றவர்களுக்கு மட்டும் கட்டுப்பாடு விதிப்பதில் என்ன நியாயம்.//
இதில் நிச்சயமாக யாருக்கும் மாற்று கருத்து இருக்க முடியாது. ஆனால் அரிப்பெடுக்கும்போதெல்லாம் சொறிந்துகொள்ளலாமா?
என்ன நினைக்கின்றார் அவர்?"
அரிப்பெடுக்கும்போதெல்லாம் சொரிந்து கொள்வதோ அல்லது தள்ளிப்போடுவதோ சம்பந்தப்பட்டவ்ர் பிரச்சினை. நான் யார் அதை பற்றிக் கூற?

"அடுத்தமுறை உங்கள் கண்மூடிய மனைவியுடன் புணரும்போது, தயவு செய்து மேற்சொன்ன கருத்துகளை நினைத்துப் பார்க்காதீர்கள். வாழ்க்கை கசந்துவிடும்."நிச்சயமாக. அதனால்தான் மற்றவர்களின் மனத்தை படிக்க முடியாமல் இருப்பது கடவுள் நமக்கு தந்த ஒரு வரம் என்றே கொள்ள வேண்டும். மேலும் தன் துணையைத் தவிர வேறொருவரை மனதில் நினைத்து இவருடன் உறவு கொள்வது காலம் காலமாக நடந்து வருவதுதான். இதில் ஆணென்ன, பெண்ணென்ன? பார்க்க:
Sex and Relationships - Sex - 4Health from Channel 4 - [ Diese Seite übersetzen ]
Nancy Friday's books on women's sexual fantasies (My Secret Garden) and men's (Men
in Love) include a wide range of case histories compiled from letters and ...
www.channel4.com/health/microsites/ 0-9/4health/sex/sar_fantasy.html - 32k - Im Cache - Ähnliche Seiten

"அதுதான் இருந்ததிலேயே ஒரு பெரிய கொடுமை. அவன் மண்டையைப் போட்டால் என்ன? அவனுக்கு அப்புறம் அவளுக்கு வாழ்வேயில்லை என்று காண்பித்தால்தானே மற்ற ஆண்கள் சும்மா இருப்பார்கள்?
கொடுமை, கொடுமை." இதற்கு உங்கள் எதிர் வினை:
"ஆணாதிக்க ஓநாய்களுக்கு பெண்களின் மேல் எத்துனை கரிசனம்..."
வாய் புளித்ததோ மாங்காய் புளித்ததோ என்றெல்லாம் எழுதக் கூடாது. நீங்கள் கூறியது எனக்கு எப்படி பொருந்தும் என்பதை தெளிவாக நிரூபிக்க வேண்டும். ஏனெனில் நான் கூறியதற்குத்தான் நீங்கள் எதிர்வினை கொடுத்துள்ளீர்கள்.

ஏதோ எழுதவேண்டும் என்று நினைத்து விட்டீர்கள். ஆனால் எப்படி எழுதுவது என்பதை யோசித்து எழுதவும். இல்லாவிட்டால் உங்கள் வலைப்பூவின் பெயர் ஜஸ்டிஃபை செய்தவராவீர்கள்.

இப்பின்னூட்டத்தின் நகல் என்னுடை தனிப்பதிவிலும் பின்னூட்டமாக இடப்படும். பார்க்க: http://dondu.blogspot.com/2005/12/2.html#comments

அன்புடன்,
டோண்டு ராகவன்


பூங்குழலி said...

உங்களின் அன்புக் கட்டளையின்படி முந்தய போலி பின்னூட்டம் அழிக்கப்பட்டது.

ஓநாய்கள் என்ற பன்மையை தார்மீகப் பொறுப்பேற்று பதில் கேட்டுக்கொன்டுள்ளீர்கள்.நன்றி.

பாட்டன், பூட்டன் சொத்துக்கள் வேண்டும். கர்மா வேண்டும். அவர்களின் ஏற்றத்தாழ்வு நிறைந்த மதம் வேன்டும். பொதுவில் தன் சாதியை வெளிப்படுத்தும் அடையாளங்கள் வேண்டும். 1000 வருடங்களுக்குமேல் ஏமாந்த ஆதங்கத்தில் வெளிப்படும் வசை மட்டும் வேண்டாம்... அப்படித்தானே.

பழங்கதைகளை படித்துவிட்டு தற்போதுள்ளவர்களின் மீது வசை பாடாதே என்கிறீர்களா?
என்னைப் பொறுத்தவரையில்,
ஓநாய்களுக்கென்று சில அடையாளங்கள் உண்டு.
அந்த அடையாளங்களை வைத்துக்கொண்டு, அதை வெட்கமில்லாமல், பெருமையுடன் வெளிப்படுத்தும்போது. அந்த ஓநாய் நானல்ல என்று சொன்னால் யார்தான் நம்புவார்கள்.

ஒருவேளை நீங்கள் திருந்தியிருக்கலாம். அதை
சந்தேகத்திற்கு இடமின்றி நிருபிக்கவேண்டிய பொறுப்பு உங்கள் சமூகத்திற்கு உள்ளது.

குறைந்தபட்சம்
உங்கள் மதத்தலைவரை
பெண்கள்/பாவயோனி இதெல்லாம் சும்மா.
இந்நாள் வரை அடிமைப்படுத்தியதற்கு மன்னியுங்கள் என்று பகிரங்கமாக அறிவிக்கச் சொல்லுங்கள்.


உங்கள் சமூகம் விழித்துக்கொண்டது.
பெண்களில் பெரும்பாலோர் கல்வியறிவு பெற்றுள்ளனர்.இந்த அறிக்கை நீங்கள் அன்று சொன்னதை
இன்றும் நம்பிக்கொன்டிருக்கும் மற்ற அரைவேக்காடுகளை திருத்துமா என்று பார்ப்போம்.

நீங்கள் கொடுத்த சுட்டி ஆங்கிலத்தில் உள்ளது.
தயவுசெய்து மற்ற தமிழர்களுக்கு பயன்பட முக்கியமான பகுதிகளை தமிழில் வெளியிடுங்களேன்.

எனது வலைப்பூவின் பெயரை நியாப்படுத்த என்ன வேண்டி இருக்கிறது.

ஒரு சாரரரிடம் ஏமாந்து, அவர்களுக்கு ஜால்ரா தட்டி,மற்ற சாரரை ஏமாற்றி மீதிக்காலத்தை உஞ்சவிருத்தி செய்து கடக்கலாமா.
அல்லது இந்த ஏற்றத்தாழ்வுகளை எதிர்க்கலாமா என்ற குழப்பம் இன்னும் உள்ளது.

மற்றபடி இப்பதிவின் மற்ற கருத்துக்களை நீங்கள் ஏற்றுக்கொண்டீர்கள் என்று நம்புகிறேன்.
நன்றி.


பூங்குழலி said...

கருத்துக்களுக்கு நன்றி தமாஷ் பாண்டி.
தான் ஒரு தீராத விளையாட்டுப் பிள்ளை என நீங்கள் மீண்டும் நிருபிக்கிறீர்.

நன்றி.


பூங்குழலி said...

கருத்துக்களுக்கு நன்றி முகமூடி.
அசந்தார்போல் "same side goal" போட்டுவிட்டீர்கள் பார்த்தீர்கள?

திருவாளர் டோண்டு அவர்களின் கருத்தை விமர்ச்சிக்கிறார்போல, உங்கள் ஆணாதிக்க உணர்வினை காட்டிவிட்டீர்கள்.

அவருடைய கருத்துக்களுக்கும், அவருடைய மகளின் புகைப்படத்திற்கும் என்ன சம்பந்தம்? என் புகைப்படத்தையும் கேட்பீர்களோ?
இதை நான் வண்மையாகக் கண்டிக்கிறேன்.

தயவு செய்து உங்களின் இத்தகைய மனநிலையை மாற்றிக் கொள்ளுங்கள்.

பெருகும் அன்புடன்,
பூங்குழலி.


பூங்குழலி said...

தன் நிலை விளக்கம்.

எனக்கு ழெர்மன்,பிரெஞ்ச் தெரியாது.
ஆனால் உங்கள் அனைவருக்கும் தமிழ் தெரியும் என்று நினைக்கிறேன்.

கிழவன், கிழத்தி என்ற சொற்பிரயோகங்களை நான் ஒருவரை மட்டும் குறிவைத்துக் கேட்டதாக நினைத்து எனக்கு சில அன்புக் கண்டணங்கள், கட்டளைகள், வசைகள் சில வந்துள்ளன.

அனைவரின் அக்கரைக்கும் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

எனக்குத் தெரிந்த தமிழில்
கிழவன் = தலைவன்(Hero) = கதா நாயகன் = ஆண்.
கிழத்தி = தலைவி(heroine) = கதா நாயகி = பெண்.

இதில் வேறெந்த உள்ளுரை உவமமும்(உள்குத்து?) இல்லை.
தனிமனித மனம் புண்பட்டிருந்தால், வருந்துகிறேன்.

அனைவரின் அக்கரைக்கு நன்றி.
பூங்குழலி.


dondu(#11168674346665545885) said...

First thing first. It is not Mukamuudi who commented. It is Poli Dondu coming in here as Poli Mukamuudi.
Real Mukamuudi will not write such degenerate words.

Check with mouseover technique the blogger number. Take care. If you follow the link here it will take you to a blog having the appearance as if it is Mukamuudi's but it is not.

Regards,
Dondu Raghavan


aathirai said...

விபசார தடைச் சட்டட்தை வாபஸ் பெற்றால் பாலியல் சம்பந்தமான குற்றங்கள் குறையும்// என்பது மிகவும் உண்மை. consumer என்ற group இருக்கும் வரை, இத்தகைய நிகழ்வுகள் தொடர்கதைதான். அதை ஒரு தொழிலாக அறிவித்து `விபசாரி' என்ற பதத்துக்கு மாறான `பாலியல் தொழிலாளர்கள்' என்ற பதத்தை நடைமுறைப் படுத்தலாம்.//

decent aa paer koduthal kodumai veliyil theriyadho.


indha voluntary devadasi muraiyil paadhikapaduvathu yezhai penngal dhaane.

oo.naaigal engavadhu thangalina pengalai samuga nalanukku (?) bali kodukumaa? manidhanal mattume idhu saathiyam.


பூங்குழலி said...

ஆதிரை மற்றும் Babble அவர்களின் கருத்துக்கு நன்றி.
ஓநாய்களின் பெயரை பயன்படுத்தி அவைகளை இழிவுப்படுத்திவிட்டேனோ?
மன்னிப்புக் கோருகிறேன்.

உங்களின் கசப்பான் அனுபவத்தைப் பகிர்ந்துகொண்டதற்காக நன்றி திரு. Babble அவர்களே.
(தமிழில் உங்கள் பெயரை உச்சரிப்பதெப்படி?)

என்னைப்பொறுத்தவரையில் யாராவது அறிமுகமாகும்போது அவர்களின் சாதியையும் வெளிப்படுத்தினால் அவர்கள் என்மீது வாந்தியெடுத்த அறுவருப்பையே அடைகிறேன்.
யார்மீதும் வாந்தியெடுக்க நானும் விரும்பவில்லை.

மற்றபடி சாதி சம்பந்தப்பட்ட எந்த மோதலானாலும்/காதலானாலும் ஒருவரை பழித்து மற்றவரை உயர்த்தமாட்டேன்.
மற்றவர் அன்று சொன்னதை இன்றும் நம்பிக்கொண்டிருக்கும் அவர்களை அரைவேக்காடுகள் என்றே சொல்வேன்.

நான் இவை அனைத்திற்கும் காரணமான மூலத்தையே உடைக்க முயலுகிறேன்.நான் குறிப்பிட்ட சமூகத்தை தாக்குகிறேன் என்று நீங்கள் நினைத்தால், அச்சமூகமே மூலக்குற்றவாளி என்பதால்தான்.

திருந்தியவர்களும்/திருந்தாதவர்களும் ஒரே அடையாளத்தைக் கொண்டிருப்பதால் சிலநேரம் நல்லவர்களும் மனம்வருத்தக்கூடும். அதற்கு நான் பொறுப்பில்லையென்றே நம்புகிறேன்.

வேண்டுமானால் அவர்கள் அத்தகைய அடையாளத்தை விட்டு வெளியே வரட்டும்.


மற்றபடி ஒருவரை ஆதரித்துப்பேச நீங்கள் அச்சமூகத்தைசார்ந்தவராக இருக்கவேண்டிய அவசியமில்லை.பிறகு பெண்களுக்கும், உரிமையிழத்தவர்க்கும் யார் குரல்கொடுப்பதாம்?.
நன்றி
பூங்குழலி


கசி said...
This comment has been removed by a blog administrator.

Anonymous said...

கற்பு என்பதை மனித உறுப்புகளுடன் தொடர்புப்படுத்திப் பார்க்காதீர்கள். அது மனது/ஒழுக்கம் சார்ந்தது.

அன்பு பூங்குழலி,

மிக நன்றாக எழுதுகிறீர்கள். முதன் முறையாக உங்கள் பக்கத்தை பார்வையிடுகிறேன். வந்த வரவிலேயே எம் சமூகத்தை கைபர், போலன் கணவாய் வழி (படையெடுத்து)வந்த வந்தேறிகள் காலம் காலமாக அடிமைப் படுத்தி வைத்திருந்ததையும், எம் சகோதரிகளை மேலாடை இட விடாமல் அரை நிர்வாணமாய் அலையவிட்டு(இப்பொழுதும் கேரள மண்ணின் சில இடங்களில் உண்டு) தனது வக்கிர கழிசடை சிந்தனைக்கு வடிகால் தேடியதையும் குறித்து எழுத விரும்பவில்லை.

இப்பொழுது தான் முதலில் இங்கு வருவதால் உங்கள் மனு(அ)தர்மத்திற்கு எதிரான எழுத்துக்களுக்கு வாழ்த்து சொல்வதோடு நிறுத்திக் கொள்கிறேன்.

அன்புடன்,

இறை நேசன்.


Kasi Arumugam said...

Please remove the comment appearing in my name. It was written by a criminal, who is going to go behind bars soon. For the readers, please check the profile, and only if the profile takes you to the blogs like 'Whats happening in thamizmanam...' it is me. Also my profile id is 2206982. I am not scared of my name being tarnished here. I cannot go to every blog and say this. But I recommend bloggers to enable comment moderation and make sure it was from the right person, before publishing the same.


Kasi Arumugam said...

thanks pUngkuzali.


கசி said...
This comment has been removed by a blog administrator.

பூங்குழலி said...

வாழ்த்துகளுக்கு நன்றி திரு. இறை நேசன் அவர்களே.


பூங்குழலி said...

Babble - நீங்கள் உங்களின் முந்தைய, பிரதிநிதியாக இருக்கிறேன் என்ற கருத்தைத்தவிர, மற்ற
கருத்திற்கு வருந்தவேண்டிய அவசியமில்லை.

மேல் அடுக்கு இட்ட எச்சங்களை கீழ் அடுக்கில் உள்ளவர்கள் பிரசாதமாக சாப்பிட்டனர்.

தற்போது நடு அடுக்கில் உள்ளவர்கள் "சீ சீ இது எச்சம்" என்று சொன்னாலும் அவர்களுக்குக் கீழ் அடுக்கில் உள்ளவர்கள் தங்களின் எச்சச்தினை பிரசாதமாக கருத வேண்டும் என்ற போக்கு தமிழ் குடிதாங்கிகளில் ஒரு சாரருக்கு இன்னும் உள்ளது.

இவர்கள் திருந்தாமல் மற்றவர்களின் முதுகு அழுக்கைக் காட்டிக் கொண்டிருப்பது வேடிக்கையாக உள்ளது.

உங்களின் வாழ்த்துக்கு நன்றி.
பூங்குழலி.


பூங்குழலி said...

வருகைக்கு நன்றி பாலாஜி...
வேதம் உயர்ந்ததென்று வேதமே சொல்கிறது..
இதை மட்டும் யாராவது சொல்லி பின்பற்றுகிறீரா?
அல்லது நீங்களே நேரில் பார்த்தீகளா?

அம்புக்கும், எய்தவனுக்கும் உள்ள வித்தியாசம் உங்களுக்கு புரியும் என்று நினைக்கிறேன்.