திருவாளர் போலிடோண்டு அவர்களுக்கு..(மீட்புப்பதிவு)
மன்னிக்கவும், இவ்வுரலில் பார்க்கக்கிடைக்கும் இப்பதிவை எனது பதிவுப்பட்டியலில் காணப்படவில்லை. பின்னூட்டமும் இட இயலவில்லை.ஆகவே இந்த மீட்புப்பதிவு.தலைப்பு பெரிதாகியதால் இந்த பிரச்சினைகள் என நினைத்து தலைப்பை மட்டும் சுருக்கியுள்ளேன்.
நன்றி.
சென்ற பதிவில் பின்னூட்டமிட்ட நீங்கள் யார்?
சமுதாயத்தின் சாணக்கியத்தனத்தால்
விதை நெல் தொலைத்த
விவசாயியா?
குட்டுப்பட்டே குனிந்த தலையுடைய
சமூகத்தின் முகம்
இழந்த மனிதரா?
தம் சகோதரர்களுக்கு ஈழத்தில் நடக்கும்
கொடுமைக்கு, வெளிப்படையாய்
குரல் கொடுக்க உரிமையிழந்த
தமிழருள் ஒருவரா?
தனது நியாயமான கோரிக்கைகூட
ஏற்கப்படாத குழந்தை
தன் வீட்டுப் பொருள்களையே
உடைத்து அடம்பிடித்ததால்
அதிகாரம் செல்லுபடியாகும் பெற்றோர்களால்
தீவிரவாதி என அடையாளம்
காட்டப்பட்டவரா?
தோல் பட்டையை தட்டிக்கொடுத்து
வேலை கொடுக்கும்
நிறுவனத்தினால் நிராகரிக்கப்பட்டவரா?
திருவாளர் டோண்டு அவர்களின்
நாவண்மையின்கண் தீக்காயம் பட்டவரா?
அல்லது எதிராளிகளின் மதிப்பை
அடுத்துக் கெடுக்க வந்த
அமிர்தம் சாப்பிடுபவரா?
எப்படியாகிலும் தங்களின் நோக்கம்தான் என்ன?
தங்களின் இதுபோன்ற நடவடிக்கைகளால் ஒட்டுமொத்த தமிழ் வலைப்பூவர்களின் கண்ணியம் அல்லவா காற்றில் பறக்கிறது?
தங்களின் கருத்து கூற ஏனிந்த குறுக்கு வழி?
திருவாளர் டோண்டு போன்றவர்களைப் பொறுத்தவரையில், அவர்களின் சூழல் அப்படி.
சிறுவயதிலேயே மூளைச்சலவை செய்து குழந்தைகளை வளர்ப்பது, அச்சமூகத்தின் கைவந்த கலை.
அதற்காக அவர்களின்மேல் பரிதாபப்படவேண்டுமே தவிர, "வலைப்பூ கண்கானிப்பாளர்" அளவுக்கு அவரை உள்ளாக்கக்கூடாது.
அவர்களிடம் நாம் எதிர்பார்ப்பது மனமாற்றமே தவிர, அமிர்தம் சாப்பிடும் அனைவரையும் காலி செய்வது அல்ல.
அவர்களும் நமது சமுதாயத்திற்கு பங்களிப்புச் செய்துள்ளனர்.(இது பற்றி தனியாக பதிவுபோடலாம் என்றிருக்கிறேன்).
அவராவது பரவாயில்லை, விவாதத்திற்கு தயாராய் இருக்கின்றார். ஆனால் இன்றும் பசுமாட்டு சாணிக்குழியை தொட்டுக்கும்பிட்டு சக மனிதனை தொட மறுக்கும்/அடிமையாய் பார்க்கும் ஆண், பெண் இருக்கவே செய்கிறார்கள்.(அல்லது அத்தகைய சூழலை அறவே விலக்கி விடுகிறார்கள், இதில் மற்றவர்களும் விதிவிலக்கல்ல)
வாழைப்பழத்தில் ஊசி ஏற்றும் கலை சிலருக்கு கைவந்திருக்கின்றது.உங்களுக்கு அது கைவரவில்லை என்பதற்காக திருவாளர் டோண்டுவின் மேல் ஏனிந்த கஷ்மிலம்.(கஷ்மிலம்=கசுமாலம்=பொறாமை).
எடுத்தோம் கவிழ்த்தோம் என்ற உங்கள் நடவடிக்கை யை என்னால் சகிக்க முடியவில்லை.
பொத்தாம் பொதுவாக சிலர் உங்களை இழிபிறவி என்று விளிக்கிறார்கள்.
எனக்குத் தெரிந்தவரையில், பிறவி எனும்போது உங்கள் பெற்றோரை குறிப்பாக உங்கள் தாயாரின் ஒழுக்கத்தை தாக்குகின்றர்கள்.
(தனிமனிதனின் செயலுக்கு, ஒன்றுமறியா பெண்மையை இழிவுபடுத்தும், பெருந்தகையாளர்களுக்கு என் கண்டணங்கள் உரித்தாகுக...)
இத்தகைய உங்கள் செயல்களால் சில எதிர்மறையான விளைவுகள் ஏற்படக்கூடும்.
1.நீங்கள் கூறும் நல்ல கருத்துகள்கூட, முற்றிலும் உதாசினப்படுத்தக் கூடிய அபாயம் இருக்கின்றது.
2.திருவாளர் டோண்டு அவர்களின் மேல் அனைவருக்கும் ஒரு கரிசனம் உண்டாகி, அவர் கூறக்கூடிய (வாய்ப்பு மட்டுமே) விவாதத்திற்கு உரிய கருத்திற்கு சரியான அளவில், கண்டணமோ அல்லது எதிர் குரல்களோ எழாமல் போகக்கூடும்.
3.பிறகு பெரும்பாலான பதிவுகள் அடியார்களின் பின்னூட்டங்கள் மட்டுமே இருக்கும் அபாயம் உள்ளது.
இது ஆரோக்கியமான சூழல் இல்லை.
டோண்டு அவர்களாவது இணையத்தை வெகுநேரம் பயன்படுத்தும் வசதியை பெற்றிருக்கிறார்.
அவரால் உடனே மறுப்புப் பின்னூட்டம் இட முடிகிறது. மின்னஞ்சல் மூலமாகவும், காசு கொடுத்து இணைய உலா நடுவங்கள் மூலமாகவும், பூவேற்றும் என் போன்றவர்களுக்கு இது போன்ற நிலை ஏற்பட்டால்?
சக வலைப்பூ உறுப்பினராய் கேட்கிறேன். புது வலைப்பூ தொடங்குங்கள். ஆதிக்க சமுதாயத்தின் பிடியில் இருக்கின்றீரா? முகமூடி போட்டுக்கொள்ளுங்கள்.விவாதியுங்கள்.
ஆளையே வலைபதிவில் இருந்து ஓடச்செய்யும் செய்கையை கைவிடுங்கள். தேவை சிறு மனமாற்றம் மட்டுமே...
பெருகும் அன்புடன்.
பூங்குழலி.