பல்கலை வித்தகர், சொக்கத்தங்கம் அவர்களுக்கு,

நிறைய பேர் பலதரப்பட்ட தலைவர்களுக்கு திறந்த கடிதம் எழுதுகிறார்கள், நாம் ஏன் அதுபோல் ஒன்று எழுதக்கூடாது என்ற எண்ணத்தினால் இக்கடிதம். நிற்க...

முதற்கண், உங்களுடைய குலம், கோத்திரம் நிச்சயமாகத் தெரியாததால், உங்களை குசலம் விசாரிக்க மனமில்லை,

ஆகவே ஆரோக்யம் மட்டும் விசாரித்துக்கொள்கிறேன். "உடல் நலமாயுளதா?"

பெண்ணுரிமையை/பெண்ணியத்தை உயர்த்துவதையே தனது உயிர்மூச்சாகக் கொண்டுள்ள, பெண்களை இழிவுபடுத்தும் படங்களை இதுவரை வெளியிடாத,

(கண்டிப்பாக இதற்கு பெண்கள் அனைவரின் சார்பாக? நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்), அன்றாட மனித வாழ்க்கைக்கு அத்தியாவசியமானவைகளான மகாபாரதம், இராமாயனம் போன்றவற்றில் பாண்டித்யம் பெற்ற,

வெறுக்கத் தக்கதா (Neo?) பிராமணீயம் (பாருங்கள், வர்ணப்பெயரை பொது இடத்தில் பயன்படுத்துகிறேன், கண்டிப்போர் கண்டிக்கலாம்) என்ற சம/தொலை நோக்குப் பார்வையுள்ள நூலை இயற்றிய(இன்னும் படிக்கவில்லை, ஓசியில் கிடைக்குமா?),

யாராயிருந்தாலும் தவறென்றால் கிண்டலடிக்கின்ற, தவறினைச்சுட்டிக்காட்டுகின்ற, கிண்டலடிப்பதில் மகிழ்ச்சியடையாத,

தமிழகப் பத்திரிக்கையுலகிலும், இன்னபிற கலைத்துறைகளிலும் அலாதியான/அசைக்கமுடியாத இடத்தைப்பெற்றிருக்கும்,

உங்களை,
உங்களின் புகழை ஒருசில பதிவுகள் மட்டுமே போட்டு குறைத்துவிடலாம் என மனப்பால் குடித்து, அவ்வாறே பதிவுகளையும் போட்டுள்ளனர் சில அறிவில்லாதவர்கள்.

அதுசரி, கழுதைகளே Male(?) என நினைத்து கழுதைகளின் படத்தைப்போட்டீர்களோ? என்னவோ?
(நகைசுவைக்காக மட்டுமே, ஆண்கள் மனதை அலட்டிக்கொள்ள வேண்டாம்)
இது என்னத் தனமான உத்தி/சிந்தனை எனச் சொல்லவும்.

உங்களின் இந்த ஒட்டுமொத்த சமுதாயத்திற்கான பங்களிப்பு ஒன்றா, இரண்டா?
அப்படிப்பட்ட உங்களை, குற்றம் கண்டுபிடித்தே பெயர் வாங்குபவர் என்று வேறு சொல்கிறார்கள்.

மேலும், எதிர்ப்புக்கடிதமானாலும் குறிப்பிட்டவர்களிடமிருந்து வந்தால் அதை பிரசுரிப்பீர்கள் மற்றவர்களிடம் இருந்து வரும் ஆதரவுக்கடிதமானாலும் அவை போகுமிடம் குப்பைத்தொட்டி எனவும் கேள்விப்பட்டேன்.

(ஆதாரமில்லாத கருத்து இது, தவறென்றால் மன்னித்து ignore செய்யவும்)

குற்றம் கண்டுபிடித்தே பேர் வாங்குபவர் என்ற அவப்பெயரை போக்கும் வகையிலே, மாநிலங்களவை உறுப்பினராக இருந்து பலதிரப்பட்ட நற்செயல்களை செய்துகொண்டு இருக்கிறீர்கள். பாராட்டுக்கள்.

உங்களின் இதுபோன்ற சீரிய பணிகள் மேலும் சிறக்க எல்லாம் வல்ல தேவர்கள் உங்களை ஆசிர்வதிப்பாராக...

எனது வயதைவிட பத்திரிக்கைதுறையில் அதிக அனுபவம் உடைய உங்களின் அருமை பெருமை எனக்கே இவ்வளவு தெரியும்போது,

உங்களின் சமவயதினர்கள், ஆரம்பத்திலிருந்தே உங்களின் சமுதாயப் பங்களிப்பை, கண்ணால் கண்ட சாட்சியாய் இருப்பவர்கள் உங்களின் ஆதரவுப் பதிவுகள் போட்டது தவறில்லையென்றே நினைகிறேன்.

ஆனால் சிலர் இத்தகைய பதிவுகளைத் தவறாய் திரிக்கின்றனர்.


ஆயிரம் கைகள் மறைத்தாலும் ஆதவனை மறைத்துவிட முடியாது.போற்றுவோர் போற்றட்டும், தூற்றுவோர் தூற்றட்டும், நீங்கள் உங்கள் கடமையைச் செய்யுங்கள்.
உங்களின் சமுதாயத்திற்கான பங்களிப்பை இந்த எல்லைகளுடன் நிறுத்திக் கொண்டுவிடாதீர்கள்.

தற்போதைக்கு இங்கே காட்டாட்சி நடைபெறுகிறதோ என எண்ணத்தோன்றுகிறது.

ஒரு குல ஒழுக்கமற்ற பிராமணன் கூட மன்னனுக்குரிய இடத்தில் இருந்து நீதி உரைக்கலாம்.ஆனால் நான்காம் வருணத்துச் சூத்திரன் மட்டும் நீதி வழங்கக் கூடாது.

இதை மீறி சூத்திரன் நீதி செய்தால் , அந்நாடு சேற்றிலகப்பட்ட பசுவைப்போல் நம் கண்முன்னே துயறுற்றழியும்.

சூத்திரரும், நாத்திகரும் மிகுந்து, பிராமணர் நலியும் நாடு, வறுமை நோயால் அழிந்துபோகும்.

இடஒதுக்கீடு என்ற பெயரிலே 7 ஆண்டுகள் படித்துவிட்டு இப்பதவிக்கு அவர்கள் வந்துவிடுகிறார்கள்.

நேற்றுகூட தன் சொந்த முதலை? போட்டு கல்லூரி நடத்தும், தனியார் கல்லூரிகளிலும் இடஓதுக்கீடு வாங்கிவிட்டார்கள். இப்படி அவர்கள் நீதியுரைப்பதால் நம் முன்னோர்கள் வகுத்த அத்தனையும் பாழாகிவிடுகின்றன.

பிரம்மா முதலில் பிராமணர்களைப் படைத்ததினால் இவ்வுலகில் அனைத்தும் நமக்கே சொந்தம்(அடுத்தவன் உயிரையும் சேர்த்து).

அதுமட்டுமா, இரு பிராமணர்களுக்கிடையே வழக்கு வந்தால் அதை அரசனால் கூட தீர்க்கமுடியாது.

இரு தரப்பினரையும் வருவித்து, அவர்களையே ஒரு முடிவுக்கு வரவிடவேண்டும்.

செய்தார்களா இந்தக் கயவர்கள்?மாநிலத்திற்கு மாநிலம் அல்லவா இழுத்தடிக்கிறார்கள்?

ஆகவே இடஒதுக்கீட்டை மறுக்கும் வகையிலே நீதித்துறையையும் நாம் தனியாராக்க வேண்டும்.

நாம் அரசாட்சி செய்தாலொழிய நாம் இதை அடையமுடியாது. மற்ற கட்சிகளின்மேல் எனக்கு நம்பிக்கையில்லை.

நீங்கள் பிரதமராக எந்தக்கட்சி அறிவிக்கின்றதோ, அக்கட்சிக்கு, அவர்கள் கழுதைகளை மட்டுமே நிறுத்தினால் கூட (பெண்களுக்கு இட ஒதுக்கீடு தேவையில்லை),

அவைகளுக்கே இந்திய துனைக்கண்டத்திலுள்ள அனைத்துப் பெண்களும் ஓட்டுப்போடுவோம் என அனைத்துப் பெண்களின் சார்பாக நான் உறுதிகூறுகின்றேன்.

இப்படிக்கு,
உங்களை பிரதமராக்கி அழகுபார்த்திடத் துடிக்கும்,
பூங்குழலி.

8 பின்னூட்டங்கள்:

Muthu said...

ஹி ஹி என்னை அறிவில்லாதவன் என்று சொல்லிவிட்டீர்கள்.. ஓகே..ஏற்றுக்கொள்கிறேன்....(அறிவில் ஆதவன்)

பல்கலைவித்தகர் என்று பார்த்துவுடன் என்னடா இது புது வம்பு என்று எட்டிப்பார்த்தேன். ஐய்யோ

ஐய்யகோ..டோண்டு வருகிறார் பாய்ந்தோடி வருகிறார்....நான் இங்கு நின்றுக்கொண்டு இருப்பதை பார்த்தால் என்னை கிழித்துவிடுவார்...இன்னொரு சமயம் பார்ப்போம்.


Boston Bala said...

Good pun :-))


பூங்குழலி said...

வருகைக்கு நன்றி திரு. முத்து அவர்களே,

ஒத்துக்கொள்வதற்கு நீங்கள் ஒருவராவது இருக்கிறீர்களே, நன்றி.

மற்றபடி, தனிப்பட்ட ஒருவரை தாக்குவதோ/அடிவருடுவதோ தவறென நினைக்கிறேன். :)

அவரைக்கண்டு ஏணிப்படி அஞ்சுகிறீர்கள். அவரும் நம்மைப்போன்ற சக மனிதர்தானே.

பூங்குழலி


பூங்குழலி said...

வருகைக்கு நன்றி திரு. பாலா அவர்களே,

எனது நீண்ட நாள் உள்ளக்கிடக்கையை நீங்கள் திரிக்க முயற்சிக்கிறீர்களோ? என சந்தேகப்படுகிறேன்.

:))

நன்றி.
பூங்குழலி


முத்துகுமரன் said...

பூங்குழலி,

ஆண்களின் சார்பாக உங்கள் பரிந்துரையை வழி மொழிகிறேன்.
கூடவே துணைப்பிரதமராக யாரைப் போடலம் என்றும் சொல்லுங்களேன். நம் தமிழ்மணத்தில் அதற்கு தகுதியான பலர் இருக்கிறார்கள் என்பது எனது அபிப்பிராயம்


பூங்குழலி said...

முத்துக்குமரன், அப்டியே 2 பேரை போட்டு குடுத்து ஆரம்பிச்சு வைக்கிறது...

வருகைக்கு நன்றி.
பூங்குழலி.


பூங்குழலி said...

வருகைக்கு நன்றி திரு. மத்தளராயன் அவர்களே..


துனைப்பிரதமரையும், இணைப்பிரதமரையும் விட்டுத்தள்ளுங்கள்.

நம் பிரதம வேட்பாளரின் நிலையை நினைத்தால் கவலையாய் இருக்கிறது.

மாநாட்டுக்கு வருவார் என்று எதிர்பார்த்திருந்தவர்களுக்கு பெருத்த ஏமாற்றமே மிஞ்சியது.

"நான் மகான் அல்ல" படத்திலே, செட்டியார் வேடம் போட்டவரை(அவர் இடிச்சபுளி செல்வராஜ் தானே), ஆளனுப்பி அடிக்க முயற்சித்ததற்காக இழிவாய் பேசிவிட்டு, "நீயெல்லாம் அரசியல்வாதியாய் போகத்தான் லாயக்கு" என்று சொல்வார். (நன்றி ராஜ் டிவி)

இன்று அவருக்கே இந்நிலை ஏற்பட்டுவிட்டதே என்று கவலையடந்துள்ளார் என நம்பத்தகாத வட்டாரங்கள் மூலம் கேள்விப்பட்டேன்.

இத்தகைய செய்திகளால் நானும் மன சஞ்சலம் அடைந்துள்ளேன்.


பூங்குழலி said...

வருகைக்கு நன்றி தேசி ரோபோ.

//yerkanave appdithan iruku.//
அப்படியா?

:-))


நன்றி,