யாகாவாராயினும் நாகாக்க...

முட்டாள்களே!
- ஆ, இதுதானே கருத்து சுதந்திரம் ;)) -

"கிழித்திருப்பேன்" என்பது மறைமுகமாக கன்னித்திரையை குறிக்கும் ஆணாதிக்க சிந்தனையே, அதை பரமகுடி அம்மையாரும் கூறியதால் எனக்கு மகிழ்ச்சியே.
(வேறென்ன சொல்ல...பெண்ணியம் வளர்கின்றது...)

ஒன்றை அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும்."முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்",தங்கர் பச்சானின் கருத்து சுதந்திரத்திற்கு குஷ்பு எவ்வளவு மரியாதை கொடுத்தார்.
இன்றைக்கு அவருக்கே அது நடக்கின்றது.

ஓர் ஆணும் பெண்னும் அவர்களிடையே உறவு கொண்டால் AIDS வந்துவிடாது.(உடல்களுக்கு திருமணம் ஆனது எப்படி தெரியும்?).
பாதுகாப்பற்ற ஊர்மேயலால்தான் AIDS வரும்.

மைக் கிடைத்த ஆர்வக்கோளாறில் அவர்களின் கருத்துச் சுதந்திரத்தை பொறுப்பில்லாமல் பாழடித்துவிட்டார்கள்.

பிழைத்துப் போகட்டும் விடுங்கள்.
காலத்தை வீணடிக்காமல் அவரவரின் வேலைவெட்டியை பாருங்கள்.

வணக்கம்.
-பூங்குழலி.

கற்பெனப்படுவது.......


இதுகாறும் அமைதிப் பூங்காவாய் இருந்த தமிழ் கூறும் நல்லுலகம் இன்றைக்கு ஏன் கொந்தளித்துப் போயிருக்கின்றது?.

திருமணத்திற்கு முன் புணர்ச்சி தவறில்லை, ஆனால் பாதுகாப்பு முக்கியம்......" - இது ஆய்வுக் கட்டுரைக்கு ஊடான கருத்து, ஏற்றுக்கொள்ள வேண்டியதே... ஆனால் சொன்னவிதம்....

"தமிழ் நாட்டில் எத்தனை பேர் ஒழுக்கமானவர்கள்?..." - இது கிணற்றுத்தவளையின் வாய்க்கொழுப்பு.

"திருமனத்திற்கு முன் புணர்ச்சி தவறில்லை" என்ற கருத்தை, "எங்கிருந்தோ வந்த...." என்ற பேச்சுக்கு ஆளாகக்கூடிய குஷ்பு தமிழர்களைப் பார்த்து சொல்லவேண்டிய அவசியமில்லை.

"கொக்கும் உண்டே யாம் கலந்த ஞான்றே..." என்று காலச் சுவடுகளை கொண்டது இத்தமிழ் நாடு.களவுப்புணர்ச்சியும் ( Pre Marital Sex), பெற்றோரைப் பிரிந்து தலைவனுடன் உடன் போக்கும் தமிழினத்திற்கு புதிதல்ல.

பின் ஏனிந்த கொந்தளிப்பு?.

தற்காலத்தில் கற்பு என்ற பதத்தை பார்க்க வரும்போது அது புணர்ச்சியுடன் சம்பந்தப்படுத்தபட்டு அதில் தகாத உறவு (Extra Marital Sex) தவிர்க்க வேண்டியதாகிறது.
ஒரு தலைவி தலைவனுடன் கலந்து பின் அவனையே மணந்துகொண்டுவிட்டால், அப்பொழுதும் அவள் கற்புடையவளே..

ஆனால் சந்தர்ப்பவசத்தால் வேறொருவனை மணந்துகொண்டுவிட்டால்..... இங்குதான் இடிக்கின்றது.

ஆகவே கற்பை சரியாக புரிந்து கொள்ளாமல் அரை வேக்காட்டுத்தனமாக, கலந்து கட்டி குழப்பியதால் வந்தது வினை.

தலைவன் தலைவி என்று முகம் தெரியாதவர்களைப் பற்றி பேசிக்கொன்டு இருந்தால் அதன் பாதிப்பு தெரியாது.

ஒரு தாய் தனது மகளிடம் , தான் களவுப் புணர்ச்சி கொண்ட ஒருவரை அறிமுகப்படுத்த நேரிடும்போது தாயை பற்றி மகளுக்கு என்ன அபிப்பிராயம் ஏற்படும்?

தனிமனிதனாக(இருபாலருக்கும்) செய்யும்போது தவறு மாதிரி தெரியாத பல செயல்கள், உறவு முறைகளுடன் பார்க்கும்போது, பூதாகரமாகின்றன.

உறவுகளின் மதிப்பு, உடல் புணர்ச்சி. இவற்றில் இனத்திற்கு இனம் அதன் முக்கியத்துவம் மாறுபடுகின்றது.

இதனால் தான் குழப்பம்.

தலைப்புக்கு பதில்தான் என்ன?

கற்பெனப்படுவது.......

1. சொல்திறம்பாமை.( இது இரு பாலருக்கும் பொது).
2. புரிசை(Fort wall)

3. Vow, decision, determination
நிறுத்துவனென்னுங் கற்பினான் ( கம்பரா. கும்ப.307)

4. களவுக்கூட்டத்துக்குப் பின் தலைவன் தலைவியை விதிப்படி மணந்து இல்லறம் புரியும் ஒழுக்கம் (நம்பியகப். 26)
(Life of a house holder after his union with a bride of his choice had been ratified by marriage ceremonies )


- பூங்குழலி.

அடுத்து சுகாசினியின் கருத்தைப் பற்றி.....