பீமாராவும், இராமனும்......
உன்னுடையதை எதை இழந்தாய்?
எதற்காக நீ அழுகிறாய்?
எதை நீ கொண்டுவந்தாய், அதை நீ இழப்பதற்கு?
எதை நீ படைத்திருந்தாய், அது வீணாவதற்கு?
எதை நீ எடுத்துக்கொண்டாயோ,
அது இங்கிருந்தே எடுக்க்கப்பட்டது.
எதை கொடுத்தாயோ,
அது இங்கேயே கொடுக்கப்பட்டது.
எது இன்று உன்னுடையதோ, அது நாளை மற்றொருவருடையதாகிறது.
மற்றொரு நாள், அது வேறொருவருடையதாகும்.
இன்று அயோத்தி இராமன் கோயில் உள்ள இடம் தங்களுடையது என்று முசல்மான் அன்பர்கள் கூறுகின்றனர்.
அவர்கள் படையெடுத்து வந்தபோது இடத்தையும் கொண்டு வந்திருக்க வாய்ப்பில்லை.
அந்த இடத்தை இங்கிருந்தே பறித்திருக்க வேண்டும்.
அப்படிப்பட்ட அந்த இடத்தை இழந்தவர்கள் மீட்டுக்கொண்டனர்.
இதில் தவறேதும் இருப்பதாக நான் நினைக்கவில்லை.
ஆனால் நாம் அதை மீட்டுக்கொண்ட விதம்....
புராணத்தையும், வரலாற்றையும் குழப்பிக்கொள்ளும் நமக்கு, வரலாற்று அறிவோ, வரலாற்று சின்னங்களைப் பற்றிய விழிப்புணர்வோ இல்லை.
அப்படி இருந்தால் 400 வருடங்களுக்கு முந்தைய ஒரு வரலாற்று சின்னத்தை உடைத்திருப்போமா?
அயோத்தியில் இடமா இல்லை?
இராமன் ஓர் அப்பட்டமான கற்பனைப் பாத்திரம். அந்த கற்பனை இராமனுக்கு கோயில் கட்ட நாம் மிகை உணர்ச்சி வயப்படுகிறோமோ என ஐயுறுகிறேன்.
ஆனாலும் திசம்பர் 6ஐ பொறுத்தவரையில், ஒரு ஒடுக்கப்பட்ட சமூகத்தின் தலைவன் என சொல்லக்கூடிய ஒருவரின் நினைவு நாளை ஒட்டுமொத்த இந்தியர்களையும் மறக்கடிக்கவைத்ததில் நமக்கு வெற்றிதான்.
7 பின்னூட்டங்கள்:
தமிழ் மாணவியா நீங்கள்? நன்றாயிருக்கிறாது உங்கள் பதிவு. ஆமாம்... தொளிவாய் இருந்துகொண்டு "குழப்பம்" என பெயர் வைத்திருக்கிறீர்களே உங்கள் பதிவிற்கு?!!!
தங்களுடைய வீடு இருந்த இடத்தில் என்னுடைய முப்பாட்டனார் ஒரு பொட்டிக்கடை வைத்து பிழைப்பு நடத்தி வந்தார். பின்னர் அந்த முப்பாட்டனாரிடமிருந்து யாரோ சிலர் தட்டிபறித்து அந்த பொட்டிக்கடையை பறித்துக்கொண்டனர்.
பின்னர் கைமாறி கைமாறி கடைசியில் தங்களிடம் வந்து விட்டது சகோதரி
ப்ளீஸ் ப்ளீஸ் எங்க முப்பாட்டனார் இடத்தை திருப்பி கொடுப்பீங்களா..?
நன்றி சகோதரி
தங்களுடைய உணர்வுகள் எல்லோருக்கும் வேண்டும்
பலர் சேர்ந்து கைதட்டினால் ஓசை எழும்புவது நியதி..
சிறுபான்மை மக்கள்தானே எதிர்த்து விடலாம் என்று அவர்களின் கடவுள் நம்பிக்கையை இடித்தது அதிகாரத் துஷ்பிரயோகம்.
கறுப்புதினம்
இடிந்து கதறுகிறார்கள் சிலர்
வெற்றிதினம்
இடித்து கத்துகிறார்கள் பலர்
கடவுள்
கண்காணித்துக்கொண்டே இருக்கிறார்..
இடித்தவனை தண்டித்தால்
இடித்தவன் கடவுள்
சண்டைக்கு வந்திடுவாரோ?
இடிந்தவர்களுக்கு
ஆறுதல் தந்தால்
என்ன கடவுள் இது..?
ஏளனமாய் நினைப்பார்களோ..?
என்ன செய்யலாம்..?
கண்காணித்தபடியே
கண் மூடிப்போனர்
கடவுள்!
மறுநாள் காலைப்
பத்திரிக்கையின்
தலைப்புச் செய்தி
கடவுளைக் காணவில்லை..
இதயம் நெகிழ்வுடன்
ரசிகவ் ஞானியார்
கருத்துகளுக்கு நன்றி....
//ப்ளீஸ் ப்ளீஸ் எங்க முப்பாட்டனார் இடத்தை திருப்பி கொடுப்பீங்களா..? //
என் வீடு இருக்கும் இடத்தில் வில்லங்கம் இருந்தால் கண்டிப்பாய் சட்டம் என்ன சொல்கிறதோ அதை பின்பற்றுவேன். அதே சமயம் வலுக்கட்டாயமாக பிடுங்கினால் யாருக்கும் கோபம் வரும்.
//பலர் நம்பிக்கையை இப்படி...... //
சிறு வயதில் என் அப்பாவைத்தவிர பலசாலி/அறிவாளி யாரும் இல்லை என நம்பினேன்.
15 வயதில் என் அப்பாவைப்போலவே பிற பலசாலிகளும்/அறிவாளிகளும் உள்ளனர் என நம்பினேன்.
தற்போது இந்த அரதப் பழசிற்கு ஒன்றுமே தெரியவில்லை என திட்டுகிறேன்.
பிற்காலத்தில் எனது நம்பிக்கை நிச்சயம் மாறலாம்.
நம்பிக்கை என்பது ஆதாரம் இல்லாத, நாம் விரும்பும் கருத்துக்களின் ஒட்டுமொத்தம்.
கவிதைக்கு நன்றி நிலவு நண்பன் அவர்களே..
கடவுளைப்பற்றி யாருக்கும்
கவலையில்லை...
சாத்தான் மனதில்
குடிபுகும் வரை.........
நன்றி.
பெண்களில் பலரும் ஒரு குறுகிய வட்டத்தில் கூட்டு சேராமல் பொது பார்வையில் எழுதுவது இணையத்தில் அதிகரித்து வருவதைப்
பார்த்துக் கொண்டேயிருக்கிறேன். பூங்குழலி வெகு அழகான பெயர், அடிச்சி தூள் கெளப்புங்க பூங்குழலி.
WELL SAID.....KEEP IT UP
ALL THE BEST
Post a Comment