அந்த மாநாடும், இந்த குழப்பமும்

இதற்கண் , இந்தப் பதிவு

//பாரதிக்கு தாசன்கள் மட்டுமே வர முடியும். ஆனால் பாரதி வர முடியாது. //

இதை அவர்கள் பாவேந்தரைப் நினைத்து கேட்டார்களா எனத் தெரியவில்லை.
ஆனாலும் பெயரில் என்ன இருக்கிறது என்று எண்ணியோ, அல்லது அதன் முழு அர்த்ததையும் உணர்ந்தவர்கள் அடுத்த பத்தியை தவிர்த்துவிடலாம்...

சாதி இந்துக்களின் பெயர் சூட்டும் முறை...

பிராமணனுக்கு மங்களம், சத்ரியனுக்கு பலம், வைசியனுக்கு செல்வம், சூத்திரனுக்கு அவன் அடிமை நிலை தோன்றும் பெயர்களைச் சூட்டவேண்டும்.

பிராமணன் சர்மா எனும் மேன்மையைக் குறிக்கும் (பெயரில் மட்டும்), சத்ரியன் வர்மா எனும் பயத்தைக் குறிக்கும் பெயரையும், வைசியன் பூபதி எனும் வளத்தைக் குறிக்கும் பெயரையும், சூத்திரன் தாஸ் என்னும் தன் அடிமை பணியைக்குறிக்கும் பெயரையும் தன் பெயர்களுடன் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

அவர் சொன்னதின் அர்த்தம் என்ன என்பதை உங்களின் முடிவிற்கே விட்டுவிடுகிறேன்.

//அங்கு 10 வீடுகளுக்குப் போனேன். மூன்று வீடுகளில் பிராமண பெண்கள் மீன் கழுவிக் கொண்டிருந்தார்கள்//


மீன் கழுவுவதை அவர் பார்த்து மிகத் துயர் உற்றார் எனச் சொல்லியிருகிறார். அவர் துன்பத்தில் நானும் பங்குகொள்கிறேன்.
பிராமண உனவு பற்றி ஏற்கனவே தெரிந்தவர்கள் அடுத்த பத்தியை தவிர்த்துவிடலாம்.

பிராமண உனவு:

படைப்புகள் அனைத்தும் உயிர்களுக்கு உண்வாகத் தக்கன, புல் முதலியவை மான் முதலியவற்றிற்கும், மான் முதலியவை புலி போன்றவற்றிற்கும்,யானை முதலியவை சிங்கம் முதலியவற்றிற்கும், மீதும் பிறவும் மனிதருக்கு உணவு ஆகும்.

கொல்லத்தக்கனவும், உண்ணத்தக்கனவும், படைத்தவர் பிரம்மா. ஆகவே நியதிப்படி, அன்றாடம் கொன்று தின்றாலும் பாவம் ஆகாது.
எனினும், யாகத்தில் மீதியான புலாலைஉண்பது தெய்வீகச் செயல். தம் இச்சையாய் கொன்று உண்பது ராட்சசச் செயல்.

இப்போது புரிந்திருக்குமே தெய்வங்கள் யார், ராட்சசர்கள் யார் என்று..
(பின் எப்போது இவர்கள் மரக்கறி உண்ணலானார்கள்? புத்தர் விஷ்னுவின் அவதாரமா என்ற பதிவிலே விளக்கமாகக் காண்போம்)


இப்போது தெரியுமே உரிமை இழந்த அவரின் மன வேதனை நியாயமானதுதானே...


தற்போது சமுதாயத்தில் உண்மையிலேயே சிறந்த பங்களிப்பை செய்து நற்பேறு பெற்றவர்களின் கருத்துகளைப் பற்றி எனது சந்தேகங்கள்.

பாரதி போன்று சிறந்த கவி யாரும் இல்லை. நிச்சயம் அவரும் சிறந்த கவிகளில் ஒருவர். இந்த கருத்தில் நானும் அவர்கள் கட்சி.
ஆனால் அவர் சொன்ன பாரதி இவரா?


செத்தபிறகு சிவலோகம் வைகுந்தம்
சேர்ந்திடலா மென்றே எண்ணி யிருப்பார்
பித்த மனிதர், அவர் சொலுஞ் சாத்திரம்
பேயுரை யாமென்றிங் கூதேடா சங்கம்..
//சங்க காலத்தில் மிகச் சிறந்த புலவரான கபிலர் பிராமணர்;//
(இதற்கு ஆதாரம் எனக்கு அன்பர்கள் கொடுத்தால் மகிழ்வேன்.)

பார்ப்பன மாந்தர்காள்; பகர்வது கேண்மின்
நால்வகை சாதியை இந்நாட்டினில் நாட்டினீர்
காற்றும் சிலரைக் கடிந்து வீசுமோ?
மாரிதான் சிலரை வரைந்து பெய்யுமோ?


இவர்கள் சொன்ன பாரதி மற்றும் கபிலர் இவர்கள்தானா? அல்லது அடுத்தாத்து அம்பிகளா?


நிச்சயமாக இந்த ஒழுக்கசீலர்கள் சொன்னது சோமபான உளரல் இல்லை.அவர் நன்கு கற்றறிந்தவர் ஆனால் எதைப்படித்துவிட்டு அவர் சொன்னார் என்றால்..

அச்வத்த: ஸர்வவ் ருக்ஷாணாம் தேவர் ஷீணாஞ் ச் நாரத:
கந்தர் வாணாம் சித்ரரத்: ஸித்தானாம் கபிலோ முனி:


"எல்லா மரங்களுக்குள் அரசமரம் நான் (புத்தர் ஞாபகம் வரவில்லை?). தேவரிஷிகளுக்குள் நாரதர் நான், கந்தர்வர்களுக்குள் சித்தரதனென்ற கந்தர்வன் நான், சித்தர்களுக்குள் கபில முனி நான்."

எதிர்த்து அழிக்க முடியாத எதையும் அணைத்தே அழித்துவிடும் மிகப் பெரிய பஞ்ச தந்திரங்களுள் ஒன்றைக் கையாள்வதற்காக அப்படி கூறப்பட்டுள்ளது எனத் தெரியாமல், அவர் சொல்லிவிட்டார் என்றே நினைக்கிறேன்.

இதெல்லாம் பரவாயில்லை விட்டுத்தள்ளுங்கள்..

(இங்கு, மன்னவன் சரியான பாடலுக்கு பரிசளிக்கிறான் என்றால் அதைப் பார்த்து மகிழும் முதல் ஆள் நான்" எனும் நற்கீரனின் உரையாடல்களை மனதில் நினைத்துகொள்ளவும்)

சிலப்பதிகாரம், திருக்குறள் ஆகியவைகளுக்கு உரை எழுதியுள்ள திரு. சுஜாதா அவர்கள் யாரோ,

"அகரமுதல எழுத்தெல்லாம் ஆதி
பிராமணன் முதற்றே உலகு"



என்ற தவறான பாடலை பாடியபோது திருத்தியிருக்கவேண்டாமா?
அவர்தான் சொந்தபந்தம், பங்காளிகள் ஆகியோரைப் பார்த்த மகிழ்ச்சியில் சொல்லிவிட்டார் என்றால், இன்று வரை அதை திருத்தி வெளியிடாதது ஏன்?

சரி பரவாயில்லை ஆசைப்பட்டுவிட்டீர்கள், நானே உங்களுக்கு உதவுகிறேன்.

"அகரமுதல எழுத்தெல்லாம் வேத
பிரம்மா முதற்றே உலகு"


அவன் தேவையில்லை, பிராமணர்களே முக்கியம் என்றால்.

"அகரமுதல எழுத்தெல்லாம் வேத/ஆதி
பனவன் முதற்றே உலகு"



கலிங்கத்துப் பரணி படிக்காத காரிருள் இல்லை நீங்கள்.
உங்களுக்கு பனவன் என்றால் பிராமணன் என்று தெரியும் என்று நம்புகிறேன்.

மற்றபடி அந்த பாரதி, கபிலர் ஆகியோர் நான் சொன்னவர்களா அல்லது வேறு மனிதர்களா என்று சொன்னால் மகிழ்வேன்.

இப்படிக்கு,
நிரம்பிய சந்தேகங்களுடன்,
பூங்குழலி

19 பின்னூட்டங்கள்:

Muthu said...

you are in full form...naan ethuvum solrathukku illai....i will give feedback after sometime


Unknown said...

நல்ல உள்ளங்களுக்கு சாதி தேவை இல்லை. சாதிப் பேயை அழிக்க நல்லவர்கள் தேவை. உங்களின் மேற்கோள்களும் விளக்கங்களும் இந்த நேரத்தில் தேவையானவையே.


Unknown said...

நல்ல உள்ளங்களுக்கு சாதி தேவை இல்லை. சாதிப் பேயை அழிக்க நல்லவர்கள் தேவை. உங்களின் மேற்கோள்களும் விளக்கங்களும் இந்த நேரத்தில் தேவையானவையே.


நியோ / neo said...

பார்ப்பனர்களுக்கு(பார்ப்பனீயவாதிகளுக்கு) இன்னும் எத்தனை செருப்படி வாங்கினாலும் அது உறைக்கப் போவதில்லை. ஏனெனில், அடுத்தவன் சொத்தை பிச்சை எடுத்தோ அல்லது நீங்கள் சொல்வது போல 'நேரடியாக அழிக்க முடியாவிட்டால், அணைத்து அழித்து விட்டோ' ஒழித்து விடுவார்கள் (If you cant usurp it, amalgamate with it)

thodarnthu ezuthungkaL vaazthukkal :)


Amar said...

//அங்கு 10 வீடுகளுக்குப் போனேன். மூன்று வீடுகளில் பிராமண பெண்கள் மீன் கழுவிக் கொண்டிருந்தார்கள்////

meh..
What could be so bad about this fish cleaning buisness!

Afterall if the caste is decided based on the Occupation of the person concerned then the lady folk cleaning the fish are no Brahmin women anymore!

That being said, I'd say our approaches to eradicating the Caste evil from the society is wrong.

As Vivekananda put it, lets "level UP" and not "level DOWN".


SnackDragon said...

நல்ல கேள்விகளை எழுப்பியுள்ளீர்கள். நன்றி.


சிறில் அலெக்ஸ் said...

பூங்குழலி,
உங்கள் பதிவுகள் அருமை. இந்தப்பதிவும் சேர்த்து. எனினும் பிராமணர்களை மட்டுமே நம்மால் வசைபாடமுடிகிறது. இதுபோன்ற கருத்துக்களை வேறெந்த ஜாதிக்கெதிராகவும், உங்களாலும் என்னாலும் எழுத முடியவில்லையே ஏன்?
இன்றும் பிராமணர்களா ஜாதி பேரில் அநியாயம் செய்கிறார்கள்?


பூங்குழலி said...

கருத்துகளுக்கு
நன்றி முத்து, கல்வெட்டு, neo, karthikramas and manakkumural.

சரியாகச் சொன்னீர் neo.


பூங்குழலி said...

/////அங்கு 10 வீடுகளுக்குப் போனேன். மூன்று வீடுகளில் பிராமண பெண்கள் மீன் கழுவிக் கொண்டிருந்தார்கள்////

meh..
What could be so bad about this fish cleaning buisness!
///

சமுத்ரா நீங்கள், என்னைக் கேள்வி கேட்கிறீர்களா? இல்லை அதைப்பார்த்து மனம் வருந்தியவரை கேட்கிறீர்களா? எனக்கு விளங்கவில்லை..

விளக்கினால் பதில் சொல்வேன்..

வருகைக்கு நன்றி.
புங்குழலி


பூங்குழலி said...

//Afterall if the caste is decided based on the Occupation of the person concerned then the lady folk cleaning the fish are no Brahmin women anymore!//

உலகிலேயே மிகவும் நாகரிகம் அடைந்தவர்கள் எனச் சொல்லி அவர்களில், யார் நல்ல செயல்களைச் செய்தாலும், அவர்களை தன் குழுமத்தைச் சார்ந்தவர்கள் என்று சொல்லிக் கொன்டிருந்தவர்கள்,

ஜாலியன் வாலாபாக் படுகொலைக்கு காரணமானவரை மட்டும் தனித்து பிரித்து அவன் ஒரு காட்டுமிராண்டி என்று சொல்லி நழுவப்பார்த்தவர்களின் செயலுக்கும் இந்த கருத்துக்கும் 6 வித்தியாசங்கள் கண்டுபிடியுங்கள் பார்ப்போம்.

இதை உங்களை மட்டுமல்லாமல் அனைத்து அன்பர்களையும் கேட்டுக்கொள்கிறேன்.
ஆனாலும் சாதியை விட்டு வெளியே வந்து உங்களால் சிந்திக்க முடியவில்லை பாருங்கள்.


பூங்குழலி said...

//That being said, I'd say our approaches to eradicating the Caste evil from the society is wrong.

As Vivekananda put it, lets "level UP" and not "level DOWN".//


இதற்குக் கூட விவேகானந்தர் போன்றோரை இழுக்கவேண்டியிருக்கிறது பாருங்கள்.

ஐயா, படிப்பு வாசனைகூட இல்லாமல் ஆயிரமாயிரமாண்டுகள் இல்லாமல் இருந்து அது எங்கள் ஜீன்களில் இருந்தே காணாமல் போய்விட்டது என்று நினைக்கிறேன்.

தற்போதைக்கு எங்களால் முடிந்த அளவு சிந்திக்க (மூக்கை அல்ல) முயற்சிக்கிறோம்.
ஏதேனும் குறை இருந்தால் மன்னித்து அருளவும்.

இல்லையென்றால், நீங்களே முன்னின்று இந்த சாதிப்பேயை விரட்ட உதவினீர்கள் என்றால் மகிழ்வேன்.

உங்கள் பக்க கருத்துக்களை சொன்னதற்கு மனமார்ந்த நன்றி சமுத்ரா அவர்களே.
அன்பர்களுக்கு இனிய, மனமார்ந்த
தமிழ் புத்தாண்டு மற்றும் பொங்கல் வாழ்த்துக்கள்.


பூங்குழலி said...

//எனினும் பிராமணர்களை மட்டுமே நம்மால் வசைபாடமுடிகிறது. இதுபோன்ற கருத்துக்களை வேறெந்த ஜாதிக்கெதிராகவும், உங்களாலும் என்னாலும் எழுத முடியவில்லையே ஏன்?
இன்றும் பிராமணர்களா ஜாதி பேரில் அநியாயம் செய்கிறார்கள்?//


வருகைக்கு நன்றி திரு. சிறில் அலெக்ஸ் அவர்களே...

அடித்தளத்தை மிகச் சரியாக திட்டமிட்டு, பலப்படுத்திக்கொண்டு, அதன் உச்சாணியிலே உட்கார்ந்து கொண்டு, கீழே மற்றவர்கள் தமக்குள் அடித்துக்கொள்வதை பார்த்து உள்ளூர மகிழ்ந்து, பாருங்கள் நாங்கள் ஒன்றும் சாதிச்சண்டை போட்டுக்கொள்வதில்லை என்று பசப்புகாட்டும் பேர்வழிகளை மிகக் கடுமையாக சாடவேன்டும். அதற்காக மற்றவர்களை அப்படியே விட்டுவிடுவது தவறு.

எரிவதை நிறுத்தினால், அடுப்பில் கொதிப்பது தானாக அடங்கும்.

நன்றி,
பூங்குழலி.


Anonymous said...

நாய்க்கு நாலு கால் இருந்தாலும்., அது கால் மீது, கால் போட்டு அமர முடியுமா?., இது யாரோ சொன்னது இங்கு சம்பந்தமில்லாமல் நினைவுக்கு வருகிறது. நல்ல பதிவு. நன்றி பூங்குழலி.


NoMad said...

ஏதோ கோமாளிகள் கூட்டம் கூடி தமாசு காட்டுகிறார்கள், அதை இவ்வளவு
உன்னிப்பாகவெல்லாம் ஆராய்ச்சி செய்ய வேண்டுமா என்ன? ஆதியில் திருந்தாத சென்மங்கள் பாதியிலெயா திருந்தும் ?
தமாசு காட்டும் வரை சிரித்துவிட்டு , ந்ம்மை மிதிக்க கால் தூக்கினால் அப்படியே கழுவேற்றிவிடவேண்டியதுதான்.
கிருமி பரவுவதற்கு முன்பே கட்டியை அக்ற்றி வீசியிருக்க வேண்டும் , நாம் தான் தவறிழைத்துவிட்டோம்


நியோ / neo said...

பூங்குழலி,

தொடர்ந்து இந்த 'முகத்திரை' கிழிக்கும் பணி செய்யுங்கள். செத்த பிறகு 'கர்மா' செய்வதற்கென்று பார்ப்பனர்கள் சொல்லுகிற மந்திரம் இருக்கே - அது இன்னும் கேவலம்!

செத்த அப்பனுக்கு 'நீத்தார் கடமை' செய்யும் பிள்ளை(களை) சொல்லச் சொல்லும் மந்திரம் இப்படிப் போகிறது :

"இந்தத் தகப்பனுக்குத்தான் உன் தாய் உன்னைப் பெற்றிருந்தால் இவர் ஆன்மா அமைதியட்டும் (இந்தக் கர்மாவால்) - இல்லாவிட்டால் வேறு ஒருவர் உன் தகப்பனென்றால் - அவர் இரந்திருந்தால் - நீ செய்யும் இந்தக் 'கர்மா' மூலம் அந்த உன் (உண்மையான) தகப்பனின் ஆன்மா சாந்தி அடைய....."

இந்தப் பார்ப்பன சாத்தான்களை எதால் அடிப்பது?


siva gnanamji(#18100882083107547329) said...

enna achu?
ezudharadhai niruthittenga


பூங்குழலி said...

சொந்த வேலையாய் சொந்த? ஊர் சென்றிருப்பதால் கணினி எட்டாக் கனியாகிவிட்டது.
சேமித்த பதிவுகளையே வெளியிட முடியவில்லை.

விரைவில் மீள முயல்கிறேன்.

நன்றி,
பூங்குழலி


பூங்குழலி said...

வருகைக்கு நன்றி Lazy desi...
நான் எங்கே பிராமணர்களை வசை பாடினேன்.

பார்ப்பனர்களை அல்லவா வசைத்தேன்.
சரி, தெரியாத்தனமாக சாதியத்தை உருவாக்கிவிட்டனர்.
ஆனால் அதை ஒழித்துக்கட்ட என்ன செயல்கள் செய்தனர்?
இன்னும் மற்றவர்கள் மட்டம் என்ற கருத்துடன் பூனூல் அல்லவா அணிந்துகொள்கிறார்கள்?
எந்த பார்ப்பன தலைவராவது அனைவரும் சமம் என்று அறிக்கை விட்டுள்ளனரா?


பூங்குழலி said...

வருகைக்கும், தங்களின் அனுபவப் பகிர்தலுக்கும் நன்றி, Sylvia அவர்களே..