இசைத்தமிழ்?

இசையின் சுரங்களை கொண்ட நிறைய சொற்கள் தமிழில் உள்ளன என்றே நினைக்கிறேன்.

இது ஒரு ஆர்வக்கோளாறான பதிப்பாகவும் இருக்கலாம்.



கரிமாரி காப்பா(ள்), பரிதாப பாப்பா
சரிசரி மாமா பதநீ(ர்) சரிக;
தபசணி தாத்தா, சரிசம மாக
கபமறி கா!பத நீ!தா!



"பரிகாச மாமா" என்று போடவும் ஆசை. :-))

நன்றி,
பூங்குழலி

6 பின்னூட்டங்கள்:

Muthu said...

//ஆர்வக்கோளாரான //

ஆர்வக்கோளாறான படைப்பா என்று தெரியவில்லை..ஆனால் மேற்கண்ட வார்த்தையில் "கோளாறு" உள்ளது என்பது மட்டும் புரிகிறது..


பூங்குழலி said...

பதிவை திருத்திக்கொண்டேன்.
நன்றி முத்து.


Suka said...

நிதமொரு கனவினில்
இனியொரு விடுதலை

இதெல்லாம் ஒத்துவருமா? எனக்கு சங்கீத ஞானம் 'சிறிது' குறைவு என மிகைப்படுத்துவானேன் :)

சுகா


G.Ragavan said...

குழலி இன்னொரு குழப்பமா?

தமிழ் சொற்களை அலகிடுவதே ஒரு இலக்கணம் அல்லவா! அதுதானே என்ன பா என்றே முடிவு செய்கின்றது. எல்லாச் சொற்களுமே பண்ணோடு சேர்ந்தவைதான் குழலி.


பூங்குழலி said...

நன்றி சுகா,
இங்கே மட்டும் என்ன நிலைமையாம்?.
:-))


பூங்குழலி said...

விளக்கத்திற்கு நன்றி இராகவன்.
அடிப்படை சுரங்களை மட்டுமே தவறாக கருத்தில் கொண்டுவிட்டேன் என்று நினைக்கிறேன்.