உங்கள் மனைவிக்கு நீங்கள் எத்தனையாவது கணவன் -- பதில்

பதிவுக்கு மிக்க (நன்றிக்கு எதிர்பதத்தைப் போட்டுக்கொள்ளவும்) முத்துக்குமரன்.

முதலில், தலைப்பை பற்றி ஒரு கருத்து.
நீங்கள் இதை கணக்குப் பாடம் என்று நினைத்து விட்டீர்களா?

நீங்கள் அப்படி எண்ண முயன்றால் அது ஒரு முடிவிலி.

///அந்தக் காலத்தில் பெண் குழந்தைகளுக்கு வயதுக்கு வந்தவுடன் திருமணம் செய்துவிடும் வழக்கம் இருந்தது. அந்த வழக்கத்திற்கும் காரணங்கள் இருந்தன. அதைக் "குழந்தைத் திருமணம்" என்று எப்படியெப்படியோ திரித்து எதிர்த்து அக்காலத்தில் பெண்குழந்தை பிறந்ததும் திருமணம் செய்துவைத்து விடுவார்கள் என்ற அளவிற்குக்
கொண்டுபோனார்கள்.///



குழந்தைத் திருமணம் என்பதை தற்போதுள்ளவர்கள் திரித்துக் கூறுகிறார்கள்.
உண்மைதான் இப்பதிவைப் பார்க்கவும்.

(இது ஏதோ வரலாறு என நினைத்துவிடவேண்டாம்.
நீங்கள் அகவை 60 க்கு மேல் இருந்தால் அது உங்கள் அப்பாவின் காலம்.
அதற்கு கீழே என்றால் உங்கள் பாட்டனார், முப்பாட்டனார் காலம்.)


//ஏன் வயதுவந்தவுடன் திருமணம் செய்துவிடும் பழக்கம் வந்தது என்ற காரணங்களுக்குள் போகவேண்டாம் (இன்னும் சில விவகாரங்களுக்குள் போகவேண்டி வரும் என்பதால்). //

தயவு செய்து காரணங்களுக்குள் போகவேண்டாம்.
எனது வாயை பிடுங்கவேண்டாம்.


மிகக் குறுகிய வட்டத்திற்குள் கிணற்றுத்தவளையாய் இருக்காதீர்கள் முத்துக்குமரன்.

முன்காலத்தில் இந்தக் கடவுளர்+ கணக்கிலடங்கா கிண்ணர்கள், கிம்புருடர்கள் + கோடானு கோடி தேவர்கள் இவர்கள் மட்டுமன்றி மணமகனுக்கு முன்பே புரோகிதரும் தன் பங்குக்கு ஒரு தாலி கட்டிக் கொள்வார்.

கடைசியில் தான் மணமகன்.

பிறகு தாலிக்குப் பதில் காப்பு என்ற பெயரிலே கட்டினார்கள், தற்போது பரவாயில்லை மணமகனை விட்டு கட்டச்சொல்கிறார்கள்.

இவர்கள் அனைவரையும் எத்தனை என்று உங்களால் சொல்ல முடியுமா?

//இதில் வரும் தெய்வங்களும் அவர்களுடன் பெண்ணுக்குச் சொல்லப்படும் உறவும் உருவகம் தான். அது உடல் உறவு அல்ல. அதனை இந்தக் காலத்தில் நாம் 'அடைந்தேன்' என்னும் சொல்லுக்கு கூறும் 'தாம்பத்ய உறவு' என்று பொருள் கொண்டு விதண்டாவாதம் புரிவது பொருத்தமற்றது. ////

நிச்சயம் இவர்களில் யாரும் பெண்ணுடன் உடல் ரீதியாக தொடர்பு கொள்ளவில்லை.

முத்துக்குமரன் உங்களுக்குக் கூட மாற்றான் மனைவியை உங்களுக்குப் பிடித்தமாதிரி உருவகப்படுத்திக்கொண்டு அதை அவள் கனவனிடமும் சொல்லிக் கொள்ள முழு உரிமை உண்டு.

(பாருங்கள் இதில் எந்த இடத்திலும் பெண்கள் சம்பந்தப்படவில்லை.)

//For your age, you might not have seen enough to talk about these mantra. Focus your energies in getting your professional skills up. You are in the prime time in your career//

மற்றபடி, இந்த வயது முக்கியமான காரியங்களைச் செய்யும் வயது. ஆகவே நேரத்தை வீணடிக்காமல் ஏதாவது ஒரு வங்கியில் போட்டு சேமிக்கவும்.

(பி.கு: இந்த பதிவு ஒரு அவசரப் பதிவு, தற்போதைக்கு ஆதாரம் கொடுக்க என்னிடம் எந்த உரலும் இல்லை. ஆகவே வீடு(வூடு? நன்றி:முத்து) கட்டிக்கொள்ள விரும்புவர்கள் கட்டிக்கொள்ளலாம். ஆதாரத்துடன் நான் மீண்டும் சந்திக்கிறேன்.)


தமிழ்மணத்தில் இருக்கும் ஒரு சாக்கடை கும்பலில்? இருந்து,
பூங்குழலி

29 பின்னூட்டங்கள்:

மரத் தடி said...

kulanthai thirumanangalai aatharippavarkal paarppanarkalthaan! uthaaranam dondu. Sorry for Taminglish typing.


நண்பன் said...

//For your age, you might not have seen enough to talk about these mantra. Focus your energies in getting your professional skills up. You are in the prime time in your career//

இந்து மதம், வேதங்கள், புராணங்கள், தேசபக்தி என எல்லாவற்றையும் தங்களைத் தவிர வேறு யாரும் பேசக் கூடாது என்ற ஆணவம் தான் இவர்களின் முதல் எதிரி.

பூங்குழலியின் அங்கதத்திற்கு நன்றி. தொடருங்கள் -- ஆதாரத்துடன்.

(யாரும் கேட்காவிட்டாலும் பரவாயில்லை. இருக்கிற ஆதாரங்களைக் கொடுத்தீர்களானால், எல்லோருக்கும் ஒரு தெளிவு கிடைக்குமல்லவா? )

புத்தாண்டு வாழ்த்துகள்,

அன்புடன்,
நண்பன்.


பூங்குழலி said...

அன்பின் மரத் தடி,

குழவித் திருமணத்தை ஆதரிப்பவர்கள், அவர்கள் மட்டுமே என்பதை நான் ஒத்துக்கொள்ளமாட்டேன்.

அவர்களால் மூளைச்சலவை செய்யப்பட்டவர்களும், மற்ற மதம் பிடித்தவர்களும் இதற்கு விதிவிலக்கல்ல.

முன்பதிவில் கொடுத்துள்ள சுட்டியைப் பார்த்து அறிந்துகொள்ளவும்.

மற்றபடி, குறிப்பிட்ட ஒருவரை சொல்லி பொதுமைப்படுத்தல் தகாது.

மனம் மாறியவரை மறுபடி மறுபடி, முன்பு செய்தவைகளைச் சொல்லிக்கொண்டிருந்தால் நேர்மறையான விளைவுகளே ஏற்படும்

வருகைக்கு நன்றி.
பூங்குழலி

பி.கு..உங்கள் பக்கத்தைப் பார்க்க முடியவில்லை, வேறு நபர் எழுதியிருந்தால் சொல்லவும், நீக்கிவிடுகிறேன்.


பூங்குழலி said...

//(யாரும் கேட்காவிட்டாலும் பரவாயில்லை. இருக்கிற ஆதாரங்களைக் கொடுத்தீர்களானால், எல்லோருக்கும் ஒரு தெளிவு
கிடைக்குமல்லவா? )//

எதைக் கொடுத்து எதை விடுவது என்ற குழப்பம் உள்ளது.

ஒரு கோர்வையாகக் கொடுக்கலாம் என்ற எண்ணத்தில் இருக்கிறேன்.

நீங்கள் எனக்கு நன்றி சொல்லி, எனது வாயைப் பிடுங்கப் பார்க்கின்றீர்களோ என்ற சந்தேகமும் உள்ளது.

(முதல் சம்பாத்தியத்தில் நிறைய புத்தகங்களை வாங்க வேண்டி ஒரு பட்டியலே உள்ளது. அந்நாள் எப்போதோ?)

புத்தாண்டு வாழ்த்துக்கள் நண்பன்.
நன்றி.
பூங்குழலி.


பூங்குழலி said...

வணக்கம் Tamil Comments,

நான் கொடுத்த தகவலில் எங்கோ கோளாறு உள்ளது.

கடமை கண்ணியம் கட்டுப்பாடு இவைகளை ஞாபகப்படுத்தியதற்கு நன்றி.

சற்றே முத்துக்குமரனின் பின்னூட்டங்களை சற்று கவனமாகப் பார்க்கவும்.

// நீங்களும் தமிழ்மணத்தில் இருக்கும் ஒரு சாக்கடை கும்பலில் விழுந்து வீட்டீர்களோ என்று எண்ண தோன்றுகிறது. //

அக்கரைக்கு நன்றி.
பூங்குழலி


பூங்குழலி said...

உங்களின் அக்கரைக்கு நன்றி.

தனிப்பதிவெல்லாம் தேவையில்லை.
பிறகு நானும் உங்களை பற்றி எழுதி, நன்றிக்கடனை, தீர்க்க வேண்டியிருக்கும். :)

ஆதரவு தெரிவிப்பதாயிருந்தால் முத்துக்குமரன் அவர்களின் பதிவுக்கு ஆதரவு தெரிவிக்கவும்.


SnackDragon said...

உருவகங்கள் உருவகங்களாக மட்டும் இருந்தால் யாருக்கும் எந்தக் கெடுதலும் இல்லை.
அந்த உருவகங்கள் சமூகத்தில் ஏற்படுத்தும் பிரச்சினைகளால்தான் எதிர்க்கப்படுகின்றன.
பூங்குழலி, உங்களுக்கு என்ன ஆதாரம் வேண்டும், குழந்தை மணம் நடைமுறையில் இருந்தது என்பதற்கா?

http://timesfoundation.indiatimes.com/articleshow/64123.cms


பூங்குழலி said...

சுட்டிக்கு நன்றி திரு. karthikramas

இப்பதிவிலே கொடுத்த சுட்டியிலும் நான் சிறுபிள்ளைத்தன திருமணங்களால். கைம்பெண் ஆனவர்களின் புள்ளிவிவரங்களைக் கொடுத்துள்ளேன்.

பார்க்க பதிவின் கடைசி பகுதி


பூங்குழலி said...

வருகைக்கு நன்றி திரு. வாய்ச்சொல்வீரன் அவர்களே..

அங்கதம் = வசை, வசைக்கவி, அங்கதச்செய்யுள் என்று ஒரு பிரிவே உண்டு.


பூங்குழலி said...

//இது மட்டும் புரிஞ்ச மாதிரி இருக்கு. முத்துகுமரன் இப்படி தானே தன்னோட பதிவுல சொல்லியிருக்காரு. //

வாய்ச்சொல்வீரன் அவர்களே..

நீங்களும் என்னைபோன்றே சரியான அன்னம் போங்கள். உங்களுக்குப் பிடித்ததை அப்படியே எடுத்துக்கொள்கிறீர்.


பூங்குழலி said...

//உங்களுடைய இந்தக் கட்டுரைக்கு வாக்குகள் நெகட்டிவ்ஸ்ல இருக்கிறதைப் பார்த்தா ... எனக்கு அழுகை அழுகையா வருது.//

அதனால் என்ன?

அதிக அடிவாங்கி முகம் வீங்கிய பதிவுகள் பட்டியலில் சேர்த்தால் ஆயிற்று....

என்ன நான் சொல்வது சரிதானே...


பூங்குழலி said...

ஐயா, இந்த வஞ்சப் புகழ்ச்சியெல்லாம் வேண்டாம்.
நீங்கள் நினைக்கும் அளவுக்கு நான் ஒன்றும் மூளைவீங்கி? அல்ல....

+ வாக்குகளைக் காட்டி எனது கவனத்தை திசைதிருப்ப நினைக்கிறீர்களோ? என சந்தேகிக்கிறேன்.

யாரையும் மின்னஞ்சலில் தொடர்புகொள்ள நான் விரும்பவில்லை.

எதையாயினும் நேரடியாகவே செய்ய முயல்வேன்.
ஆதரவாயிருந்தால் அவர்களின் பதிவிலேயும், விமர்சனமாயிருந்தால் என்பதிவிலே அதற்கான பதிலையும் தெரிவிப்பேன்.

அக்கரைக்கு நன்றி.
பூங்குழலி


ramachandranusha(உஷா) said...

என்னமோ போங்க, நான் கூட அமீரகத்துல தான் இருக்கிறேன்.என்னுடைய பதிவுக்கு வருவாங்க, பின்னூட்டம் போடுவாங்க.
ஆனா மறந்தும் + குத்திடமாட்டாங்க. இதுவரை இரண்டே இரண்டு பதிவுகள் "நட்சத்திர அந்தஸ்து" பெற்றிருக்கின்றன. அதுல ஒண்ணு அல்பாயிசு. மறுநாள் பார்த்தால் காணவில்லை. அடுத்த ஒன்று வெற்றிக்கரமான நாலாவது நாள். இருங்க இன்றைக்கு இருக்கிறதா என்று இன்னும் பார்க்கவில்லை :-)


பூங்குழலி said...

//என்னமோ போங்க, நான் கூட அமீரகத்துல தான் இருக்கிறேன்.என்னுடைய பதிவுக்கு வருவாங்க, பின்னூட்டம் போடுவாங்க//

சொல்லிவிட்டீர்கள் அல்லவா?
இனியெல்லாம் சுகமே..

பட்டியலில் பார்த்தேன். உங்கள் பதிவு இன்னும் உள்ளது.

மன்னிக்கவும் உஷா..
என்னால் உங்களில் பதிவுகளைப் படித்து பின்னூட்டமிட முடியவில்லை(மனது வைத்தால் வழியுண்டு)

இந்த சின்ன வயசிலே இந்த அளவு குருதி அழுத்தம் இருக்கக்கூடாது என்று மருத்துவரிடம் திட்டு வாங்கினேன்.

இனிமேல் கதை, கவிதை என மனதை திருப்பலாமா எனவும் சிந்தனை.

வருகைக்கு நன்றி உஷா..

பூங்குழலி


முத்துகுமரன் said...

வாய்ச்சொல்வீரன்

ஆடத்தெரியாத நாட்டியகாரி மேடை கோணல்ன்னு சொன்னாளாம்.

அதுமாதிரிதான் இருக்கு.உங்க புலம்பல்....

முகமுடி இல்லாம வந்து நேரடியா கேளுங்க, பதில் சொல்றேன்....

நன்றி...

அன்புடன்
முத்துகுமரன்


பூங்குழலி said...

அன்பின் முத்துக்குமரன்..

//ஆடத்தெரியாத நாட்டியகாரி மேடை கோணல்ன்னு சொன்னாளாம்.
அதுமாதிரிதான் இருக்கு.உங்க புலம்பல்....//


நாட்டியக்காரி என்று சொல்லாதீர்கள்,
நாட்டியக்காரன் என்று சொல்லுங்கள்.

:))


பூங்குழலி said...
This comment has been removed by a blog administrator.

பூங்குழலி said...

மேலே உள்ள கருத்து போலியினுடையது.
அது என்னை மட்டும் குறிப்பதாக இருப்பதால் கருத்து சுதந்திரத்தைக் காக்க நினைக்கிறேன்.

மற்றபடி அன்பர்களை,பின்னூட்டமிட்டது போலி என்று மட்டும் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்.
நன்றி.
பூங்குழலி.


பூனைக்குட்டி said...

//Maharashtra, Pune, India
punexc04.kanbay.com (203.197.90.136)

9th January 2006 12:28:47 PM//

பூங்குழலி, Just now I came to your site and saw the about mentioned statements.

That particular IP or whatever you are mentioning is a IP address of a particular company(which is containing more than 4000 employees in pune) which I am working now. And from this particular company 2 persons are blogging here in tamil(as per what I know), and tamilmanam.

one is me, Mohandoss Ilangovan

http://www.imohandoss.blogspot.com

other one is Gnanasekar.

http://jssekar.blogspot.com/

And I talked to that person also. He also told me that he didnt posted those comments. And actually I am reading your post for sometime now. But in this period of something I didnt posted any comments.

Please clarify our doubt. How did you got to know that, those comments are coming from that particular IP.

Once again I am clarifying here that I dont have any idea or whatsoever to do something like this.

Please clarify.

Thanks and Regards
Mohandoss Ilangovan.


பூங்குழலி said...

Dear Mohandas,

Thanks for your visit.

(sorry for my english, if there is any grammer mistake)

I am giving this information what i have currently.

i could not match the yesterdays visits because of the log size limitation.
(you know my site gets lots of hits per day :) )

yesterday also the person(i am not pointing you) has come from thenkoodu.com at 4.32 PM

today by 4.26 PM the person visited the blog_post_07(asivakkural) post. then
entered to the current post i.e blog_post_06(eththanai) .

by 4.31 he came directly to this post two times
then saw my profile.

before this comment at 4.44.52 ther has been 3 visits after the profile page visit.

This may not be 100% foolproof but we can narrow down to some extent.

Please correct me if im wrong.

confused,
poonguzhali.

(p.s. i appreciate if you write your comments in tamizh, in which i am more comfortable, thanks)


J S Gnanasekar said...

பூங்குழலி அவர்களே, மோகன்தாஸ் என்னிடம் இந்த IP address பிரச்சனை பற்றி சொன்னபிறகு, இப்போதுதான் முதல்முறையாக உங்கள் தளத்திற்கு வருகிறேன். இதற்கு முன்பு நான் எந்த கருத்தும் உங்கள் பதிவுபற்றி இட்டது இல்லை.

பொய்ப் பின்னூட்டம் இடும் அளவிற்கு நான் ஒன்றும் கோழை இல்லை. எனது மற்ற பின்னூட்டங்களைப் பார்த்திருந்தாலே இதெல்லாம் புரியும். தயவுசெய்து எனக்கும், மோகன் தாஸீக்கும் சரியான விளக்கம் தரவும்.

-ஞானசேகர்
(http://www.jssekar.blogspot.com/)


பூனைக்குட்டி said...

பூங்குழலி நான் ஒருவாறு ஊகித்ததுதான் இது. உங்களிடம் இருக்கும் ஐபி டிராக்கரை வைத்து நீங்கள் சொல்கிறீர்கள். ஆனால் இது முற்றிலும் தவறான அணுகுமுறை, டைம் இன்டர்வெல்லை வைத்தெல்லாம் கணக்கிடாதீர்கள். மற்றபடிக்கு உங்களின் இந்த கருத்தைப்பற்றி என்ன சொல்ல, சிறுபிள்ளைத்தனமானது.

100% சதவீதம் சரியாக தெரியாத பட்சத்தில் ஊகத்தின் அடிப்படையில் ஒரு ஐபி முகவரியை நீங்கள் எப்படி சொல்லலாம் என்று தெரியவில்லை. நான் கடந்த எட்டு மாதங்களாக இந்த ஐபியில் இருந்துதான் செயல்படுகிறேன்.

மற்றபடிக்கு, நீங்கள் குறிப்பிட்ட ஐபியில் இருந்து இணையத்தை உபயோகிப்பவன் என்ற முறையில் என்பங்கையும் என் அலுவலக நண்பர் என்ற முறையில் ஞானசேகரையும் இதைப்பற்றி எழுதச்சொல்லியிருந்தேன்.

100% தெரியாத பட்சத்தில் நீங்கள் இப்படி குறிப்பிட்டது தவறே. வேறென்ன சொல்ல. உங்களால் 100% சொல்லமுடியாவிட்டால் அந்த முகவரியின் மீது எழுப்பிய கேள்வியை என்ன செய்யப்போகிறீர்கள் என்று தெரியவில்லை.

வேலைப்பளுவின் மத்தியிலும் இந்த கேள்விக்கு நான் பதிலளித்திருப்பதற்கு ஒரே காரணம். அந்த கேள்வி எழுப்பக்கூடிய சந்தேகத்தை நிவர்த்திசெய்யவே. தமிழில் எழுதும் அளவிற்கு வேலை அனுமதித்தால் தமிழிலேயே எழுதுவேன்.


பூங்குழலி said...

அக்கரைக்கு நன்றி திரு. ஞானசேகர் அவர்களே..

நான் குறிப்பிட்ட ஐபி முகவரி நீண்ட நாட்களாகவே எனது பக்கங்களை கண்டுகொள்கிறது.

நீங்கள் இருவரும் இப்போதுதான் எனது குழப்பங்களை பார்க்க வந்திருப்பதால்,உங்கள் இருவரைத்தவிர வேறு யாரேனும் கூட இருக்கலாம்.

மேலே குறிப்பிட்ட செய்திகள் உண்மையா அல்லது பொய்யா என்பதல்ல எனது நோக்கம்.

ஒவ்வொரு வருகையின் கால்தடமும் இங்கு குறித்துக்கொள்ளப்படுகிறது என்று எச்சரிக்கவே அந்தப் பின்னூட்டம்.

நன்றி.
பூங்குழலி.


பூங்குழலி said...

ஐயா நான் கற்றது கை மண்ணளவு,

எனக்குத் தெரிந்ததைத் தானே சொல்லமுடியும்.
தவறென்றால் அதை திருத்திக்கொள்ள வாய்ப்பு தருவீர்கள் தானே?


100% சம்பந்தமாக கணினி வித்தகர்களின் கருத்தை எதிபார்க்கிறேன்.

//உங்களால் 100% சொல்லமுடியாவிட்டால் அந்த முகவரியின் மீது எழுப்பிய கேள்வியை என்ன செய்யப்போகிறீர்கள் என்று தெரியவில்லை. //

இதன்மூலம் அனைத்து தமிழ் வலைப்பதிவர்களுக்கும் தெரிவித்துக்கொள்வது என்னவென்றால்,

4000 பேர் உழைக்கும் அலுவலகத்தில் இருந்து 2 பேர் தன்னுடைய கருத்துக்களை கொடுத்துவிட்டார்கள்.
ஆகவே என்னுடைய பின்னூட்ட கேள்வியை திருப்பப்பெறுகிறேன்.

குறிப்பிட்ட பின்னூட்டத்தை அழித்தால், அது சம்பந்தமான பின்னூட்டம் புரியாது என அழிக்கவில்லை. கேட்டுக்கொண்டால் அழிக்கப்படும்.

சிறுபிள்ளைத்தனமான,
பூங்குழலி


பூங்குழலி said...

மோகன்தாஸ் அவர்களின் பதிவிலே போட்டது....

//வாத பிரதிவாதங்களை பார்த்தபிறகு,

தவறு எனது பக்கம் இருப்பதாக கருதுகிறேன்.

தவறை திருத்திக்கொள்ளாவிட்டால் மிகப்பெருந்தவறு
செய்தவளாவேன்.

இரண்டு அன்பர்களும் என்னை மன்னிக்க...

தொடர்ந்து உங்கள் நல்லாதரவை நாடும்..

பூங்குழலி
//


பூனைக்குட்டி said...

http://imohandoss.blogspot.com/2006/01/blog-post_10.html

please look at once.

Thanks


J S Gnanasekar said...

//தவறு எனது பக்கம் இருப்பதாக கருதுகிறேன்.

தவறை திருத்திக்கொள்ளாவிட்டால் மிகப்பெருந்தவறு
செய்தவளாவேன்.

இரண்டு அன்பர்களும் என்னை மன்னிக்க...//

//என்னுடைய பின்னூட்ட கேள்வியை திருப்பப்பெறுகிறேன்.

குறிப்பிட்ட பின்னூட்டத்தை அழித்தால், அது சம்பந்தமான பின்னூட்டம் புரியாது என அழிக்கவில்லை. கேட்டுக்கொண்டால் அழிக்கப்படும்//

யாரையாவது குறை சொல்வது, தவறு என வருந்துவது, மன்னிப்பு கேட்பது - என்ன எதிர்பார்த்து இப்படி எல்லாம் செய்கிறீர்கள்?

தவறு என்று தெரிந்தும், கேட்டுக் கொண்டால்தான் அழிக்கப்படுமாம். தவறான பின்னூட்டம் அழிக்கப்பட்டால், பின்வரும் பின்னூட்டங்கள் புரியாதாம். பிறரைக் கேவளப்படுத்திவிட்டு இப்படி பின்னூட்டங்கள் பெறுவதில் ஒரு சந்தோஷமோ?

-ஞானசேகர்


பூங்குழலி said...

ஐயா,

உங்களின் நிலை புரிகிறது...

ஆணையிட்டபடியே குறிப்பிட்ட பின்னூட்டத்தை நீக்கிவிட்டேன்.

அதை மேற்கோள் காட்டி போடப்பட்ட புன்னூட்டங்களும், பதிவும் அப்படியே தொக்கி நிற்கின்றன.

அதற்கும் ஏதாவது வழி சொல்வீர்கள் என்ற நம்பிக்கையுடன்,
பூங்குழலி


Muthu said...

//உங்களின் அக்கரைக்கு நன்றி.

தனிப்பதிவெல்லாம் தேவையில்லை.
பிறகு நானும் உங்களை பற்றி எழுதி, நன்றிக்கடனை, தீர்க்க வேண்டியிருக்கும். :)//

பூங்குழலி,

நக்கல் எல்லாம் நல்லா பண்றீங்க...கலக்குங்க..மேற்கண்ட பத்தியை ரசித்து சிரித்தேன்..

//அதனால் என்ன?

அதிக அடிவாங்கி முகம் வீங்கிய பதிவுகள் பட்டியலில் சேர்த்தால் ஆயிற்று....//

above sentence is example 2