திருக்குறள் சைவமா? - சன் டிவி வணக்கம் தமிழகம்.
ஒரு வேண்டுகோள்.
// நான் விரும்புவது, சைவம் சார்ந்த கருத்துக்களை, திருக்குறளில் இருந்து எடுத்தாண்டு சொல்லும் ஒரு இனிய பதிவையே. //
****இது கண்டிப்பாக முடியக் கூடியதே. நமது தமிழ்மணத்தில் இது தொடர்பான வேண்டுகோளை வையுங்களேன்.
ஏனென்றால் இந்தப் பதிவு வேண்டுகோள் வடிவிலோ, ஆவல் வடிவிலோ இல்லை என்பது என் கருத்து.****
அன்பர் சொல்லியவிதமே இதை வேண்டுகோளாக மாற்றிக்கொண்டேன்.
ஒருபக்கப் பார்வையாக மட்டுமே இல்லாது, விவாதத்தை ஏற்றுக்கொண்டு அதை விளக்கவும் செய்யும் பதிவை வேண்டுகிறேன்.
நன்றி.
இன்றைய வணக்கம் தமிழகம்(02-JAN-2006) நிகழ்ச்சியில்
திரு கு.வைத்யநாதன் ( திருவாடுதுறை சைவசித்தாந்த
நேர்முகப் பயிற்சி மையம்) அவர்கள்
திருக்குறளில் சொல்லியுள்ளது சைவ சித்தாந்தமே என்று
சொல்லி அதற்கு சில குறள்களையும் (குறிப்பாக எண்குணங்களைப்பற்றி)
எடுத்துக்கூறினார்.
அந்நிகழ்ச்சி விவாதத்திற்கு இடம்தராத, ஒருவரே தனது
அனுபவத்தை/தகவல்களை மற்றவருக்கு சொல்லும்படியான
நிகழ்ச்சியாகும்.
ஏற்கனவே, புத்தர் விஷ்னுவின் அவதாரமா? என்ற
எனது குழப்பத்தைத் தெளிய முயலும் வேளையில்
இன்று மேலும் ஒரு குழப்பத்தை சேர்த்துவிட்டார்.
விவாதம் மேற்கொள்ளாது, ஒரு கருத்தினை
ஏற்றுக்கொள்ளுவது சரியான செயல் அல்ல.
ஆகவே தமிழ்மண அன்பர்கள் யாரேனும் குறள்/சைவம்,
சைவர்கள் எப்போது சைவரானார்கள் போன்ற
கருத்தை விவாதப் பொருளாக கருதி, மற்ற தமிழன்பர்கள்
தெளிவுபெற உதவுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
புத்தர்/அவதாரம் பற்றிய செய்திகளுடன், உண்மைக்கருத்துக்களை சொல்லிட விரைவில் வருகிறேன்.
நன்றி.
பூங்குழலி.
25 பின்னூட்டங்கள்:
âíÌÆÄ¢, ¾¢ÕìÌÈû ¨ºÅÁ¡ ±ýÀ¨¾ Å¢¼ «ôÀÊ þÕì¸ì ܼ¡Ð ±ýÚ ¿£í¸û Å¢ÕõÀÐ §À¡Äò ¦¾Ã¢¸¢ýÈÐ. :-)
ºÃ¢. ±ÉìÌò ¦¾Ã¢ó¾ Ũ¸ìÌ Åէšõ. ¾¢ÕÅûÙÅ÷ ±Ø¾¢Â §ÅÚ º¢Ä À¡¼ø¸Ç¢ø Ţ⺨¼ì ¸¼×¨Çô Ò¸úóÐõ ±Ø¾¢ÔûÇ¡÷. þ¾¢ø Å¢Âô§ÀÐõ þø¨Ä. «Ð×Á¢øÄ¡Áø ¨ºÅ º¢ó¾¡ó¾ì ¸Õòиû ¾Á¢Æ¸ò¾¢ü§¸ ¯Ã¢ÂÉ. «ó¾ ¸Õòиû ¾¢ÕìÌÈÇ¢ø þÕôÀ¾¢ø Å¢ÂôÒõ þø¨Ä. ±øÄ¡ «È áø¸Ç¢ý ¦À¡Ðì ¸ÕòÐõ ¸¢ð¼ò¾ð¼ ´ýÈ¡¸ò¾¡ý þÕìÌõ. ¨ºÅ º¢ò¾¡ó¾ì ¸ÕòиÙõ þŠÄ¡Á¢Âì ¸ÕòиÙõ ÀÄ þ¼í¸Ç¢ø ´òÐô §À¡¸¢ýÈÐ ±ýÚ Å¡Ã¢Â¡§Ã ¦º¡øĢ¢Õ츢ýÈ¡÷.
þý¦É¡Õ Å¢„Âõ þÇí§¸¡Åʸ¨Ç ºÁ½÷ ±ýÚõ ¾Á¢ú ¬Ã¡ö¡Ç÷¸û ÀÄ÷ ´òÐì ¦¸¡ûÇÅ¢ø¨Ä. þРܼ ¦¸¡ïº ¿¡ð¸ÙìÌ ÓýÉ÷ ¦¾Ã¢Â Åó¾Ð¾¡ý. º¢ÄôÀ¾¢¸¡Ãõ ÀüÈ¢ô ÀÄ÷ ±Ø¾¢Â Òò¾¸í¸¨Çô ÒÃðÊì ¦¸¡ñÊÕó¾ ¦À¡Øо¡ý ¦¾Ã¢Â Åó¾Ð. þó¾ áø¸Ç¢ø ¿îº¢É¡÷ìÌ þɢ¡âý ¯¨Ãò ¦¾¡ÌôÒõ «¼íÌõ. ÒÄ¢ä÷ì §¸º¢¸ý ¯¨Ã ܼ «ôÀÊò¾¡ý ¦º¡ø¸¢ýÈÐ. ¸¡Ã½õ ÀÄÅü¨È þó¾ ´ôÀ¢Ä츽 ¬ö׸û ±ÎòÐî ¦º¡ø¸¢ýÈÉ. ¸¢¨¼ò¾¡ø ÀÊòÐô À¡Õí¸û.
þ¨¾ ¿¡ý þíÌ Å¢Å¡¾Á¡¸î ¦º¡øÄÅ¢ø¨Ä. ¦ºöÂ×õ Å¢ÕõÀÅ¢ø¨Ä. ´Õ ¦ºö¾¢Â¡¸ò¾¡ý ¦º¡ý§Éý.
பூங்குழலி, திருக்குறள் சைவமா என்பதை விட அப்படி இருக்கக் கூடாது என்று நீங்கள் விரும்புவது போலத் தெரிகின்றது. :-)
சரி. விஷயத்திற்கு வருவோம். திருவள்ளுவர் எழுதியன என்று தொகுக்கப்பட்டுள்ள தமிழ் இலக்கியப் பாடல்களில் திருக்குறளைத் தவிர மற்ற பாடல்கள் விரிசடைக் கடவுளைப் பற்றியே இருக்கக் கண்டிருக்கின்றேன். அந்தப் பாடல்களில் இருந்து அவர் நெசவாளி என்றும் தெரிய வருகின்றது.
அதுவுமில்லாமல் சைவ சித்தாந்தக் கருத்துகள் தமிழுக்கே உரியன. இங்கேயே தோன்றியவை. ஒரு தமிழ் நூல் அவற்றைப் பிரதிபலிப்பதில் வியப்பில்லை என்றே எனக்குத் தோன்றுகின்றது. எல்லா அற நூல்களிலும் பொதுக் கருத்து கிட்டத்தட்ட ஒன்றாகத்தான் இருக்கும். மேலும் சைவ சித்தாந்தக் கருத்துகளும் இஸ்லாமியக் கருத்துகளும் கூட கிட்டத்தட்ட பல இடங்களில் ஒத்துப் போவதாக வாரியார் சுவாமிகளே குறிப்பிட்டுச் சொல்லியிருக்கின்றார்.
இன்னொரு விஷயம். இளங்கோவடிகளையும் சமணர் என்று நான் பல நாள் எண்ணிக் கொண்டிருந்தேன். ஆனால் அது உண்மையல்ல என்று ஆராய்ச்சியாளர்கள் சொல்கின்றார்கள். இது கொஞ்ச நாள் முன்பு எனக்குக் கிடைத்த செய்தி. சிலப்பதிகாரத்தில் ஆர்வம் கொண்டு அது தொடர்பாகப் பல புத்தகங்களை (நச்சினார்க்கினியார் உரையும் அடியார்க்கு நல்லார் உரைகளும் அடக்கம்) வாங்கிப் படிக்கையில் கிடைத்த செய்தி இது. புலியூர்க் கேசிகனும் இதையே சொல்லியிருக்கின்றார். மற்ற ஆராய்ச்சி ஏடுகளும் உறுதி செய்கின்ற தகவல் அது. தமிழ்த்தாத்தாவும் ஒத்துக் கொண்டது. இவர்கள் அனைவரும் ஆதாரங்கள் பல காட்டுகின்றார்கள். நீங்களும் தேடிப் படித்துப் பாருங்கள்.
இதை நான் விவாதமாகவும் சொல்லவில்லை. செய்யவும் விருப்பமில்லை. ஒரு தகவலாகவே இட்டேன்.
அன்பர் இராகவன் அவர்களே..
மேற்கண்ட உங்களின் பின்னூட்டத்தைப் படிக்க இயலவில்லை.
தயவுசெய்து என்னவென்று மறுமொழியிடுவீரா?
வருகைக்கு நன்றி.
வேண்டுகோளுக்கு முன்பே செவிசாய்த்து பதில் எழுதியதற்கு நன்றி இராகவன்.
மற்றபடி திருக்குறள் சைவமாயிருக்கக்கூடாது என்ற எண்ணமெல்லாம் என்னிடம் இல்லை.
தென்னாட்டுச் சிவனைப்பற்றி தமிழரின் வாழ்வில் பிண்ணிப்பிணைந்த திருவிளையாடள்களைப் பற்றி,
சிவத்தொண்டை மக்களின் தொண்டோடு இயைந்த வாழ்வுமுறைகளை பற்றி எனக்கு எப்போதும் ஒரு அலாதிப் பிரியம் உண்டு.
ஆனால் 8 குணங்களைப் பற்றி, இதுவரை சமணர்களே அப்படி சொல்லி வந்தார்கள் என்றாலும் , இன்று திரு கு. வைத்யநாதன் அவர்கள் சொன்ன சிவனின் 8 குணங்களுடன் பொருந்துமா, அந்த குணங்கள் தான் என்ன? என்பன போன்ற செய்திகள் மிகக்குறைவே.
ஆகையால் தான் இந்தக் குழப்பம் என்று சொன்னேன்.
மேலும், வைத்யநாதன் அவ்ர்களே, வைணவரான பரிமேலழகர் உரையைக் கையாண்டே, சில தெளிவுரைகளைச் சொன்னார்.
நான் பதிவில் கேட்டிருப்பது, சமய சார்பற்ற நூல் என்று பலர் கருதிக்கொண்டிருக்கும் வேலையில் திருக்குறளை சிவக் கோணத்துடன் பார்த்து, மேலும் பல செய்திகளை ஐயமின்றி விளக்கும் ஒரு பதிவையே.
அக்கரைக்கு நன்றி.
பூங்குழலி.
//இதை நான் விவாதமாகவும் சொல்லவில்லை. செய்யவும் விருப்பமில்லை. ஒரு தகவலாகவே இட்டேன்.//
இராகவன் அவர்களே,
மனிதன் ரொம்ப அடக்கமாக இருக்கலாம். ஆனால் அடக்கமே மனிதனாக இருக்கலாமா?
ச்சும்மா தமாசு..
எனிவே நீங்கள் இதற்கு பதில் அளிப்பீர்கள் என்று நினைத்தேன். இந்த
மாதிரியான விசயங்களில் உங்களுக்கு இருக்கும் புலமை எங்களை மாதிரியான பாமரர்களுக்கு வியப்பளிக்கிறது. வாழ்க உங்கள் தொண்டு.
இந்த மாதிரியான விவாதங்கள் வரவேற்கத்தக்கவை என்று பூங்குழலியும் ஒத்துக்கொள்வார் என்று எனக்கு தெரியும்.வாழ்த்துக்கள் பூங்குழலி.
// வேண்டுகோளுக்கு முன்பே செவிசாய்த்து பதில் எழுதியதற்கு நன்றி இராகவன். //
அது alt-3 போட்டு எழுதி விட்டேன் பூங்குழலி. பதித்த பிறகுதான் பிழை தெரிந்தது. மீண்டும் ஒரு முறை தட்டி விட்டேன்.
// ஆனால் 8 குணங்களைப் பற்றி, இதுவரை சமணர்களே அப்படி சொல்லி வந்தார்கள் என்றாலும் , இன்று திரு கு. வைத்யநாதன் அவர்கள் சொன்ன சிவனின் 8 குணங்களுடன் பொருந்துமா, அந்த குணங்கள் தான் என்ன? என்பன போன்ற செய்திகள் மிகக்குறைவே. //
ஓ எட்டு குணங்களைச் சொல்கின்றீர்களா? எட்டு குணங்கள் சைவ சித்தாந்தங்களில் உண்டு. நானும் படித்துள்ளேன். சமணத்தில் அவை எந்த அளவிற்குச் சொல்லப்பட்டுள்ளன என்று தெரியவில்லை. மேலும் ஒரு வேளை இந்த எட்டு குணங்களும் தென்னாட்டுச் சமணத்தில் மட்டுமே காணக் கிடைக்கும் தகவல்களோ என்னவோ! ஆராய்ச்சியாளர்களைத்தான் கேட்க வேண்டும்.
// மேலும், வைத்யநாதன் அவ்ர்களே, வைணவரான பரிமேலழகர் உரையைக் கையாண்டே, சில தெளிவுரைகளைச் சொன்னார். //
பரிமேலழகரின் உரையே திருக்குறளுக்கான மிகப் பழைய உரை என்று தெரிய வருகின்றது. நச்சினார்க்கு இனியாரும் ஒன்று எழுதியிருப்பதாகக் கேள்வி. தமிழறிஞர்கள்தான் விளக்க வேண்டும்.
// நான் பதிவில் கேட்டிருப்பது, சமய சார்பற்ற நூல் என்று பலர் கருதிக்கொண்டிருக்கும் வேலையில் திருக்குறளை சிவக் கோணத்துடன் பார்த்து, மேலும் பல செய்திகளை ஐயமின்றி விளக்கும் ஒரு பதிவையே. //
திருக்குறள் சமயச் சார்பற்ற நூல் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை. எந்தச் சமயத்தையும் எதிர்த்தும் தாழ்த்தியும் காழ்ப்போடும் எதுவும் சொல்லவில்லையே. அந்த சமயத்திலே வந்த சமண நூல்களில் வெளிப்படையான சமணத்தைக் காணலாம். மணிமேகலையில் வெளிப்படையான பவுத்தத்தைக் காணலாம். ஆனால் சிலப்பதிகாரத்தில் அப்படிப் பார்க்க முடியாது.
கவுந்தியடிகள் நடுவில் சமணம் பேசுகின்றார் என்பதால் இளங்கோ சமணர் என்று ஒரு வாதம் உண்டு. ஆனால் எந்தக் கடவுளையும் தொடும் முன்னரே கந்தக் கடவுளைத் தொட்டிருக்கின்றார் அடிகளார். கொற்றவையும் விரிசடையனும் கண்ணனும் ஆங்காங்கு எட்டிப் பார்க்கின்றார்கள். வஞ்சிக் காண்டம் தொடங்குவதே குமரன் மீதான குன்றக் குரவையில்தான். அத்தனை பாட்டுகளும் தேன்.
ஒரு காட்சியில் மதுரைக்குப் போகும் வழியில் சரவணப் பொய்கையில் நீராடினால் கோவலனும் கண்ணகியும் இழந்தன எல்லாம் பெறலாம் என்று சொல்கின்றார்கள். ஆனால் கவுந்தியடிகள் அதை மறுத்து கருத்துச் சொல்கின்றார். இதைக் கொண்டு இளங்கோ சமணர் என்பார்கள். ஆனால் கோவலன் மாண்டு கண்ணகி மதுரையை எரித்ததும் தன்னால் பிழை நேர்ந்ததே என்று புலம்புகின்றார் கவுந்தியடிகள். இதை என்னவென்று சொல்வது? ஒருவிதத்தில் பார்க்கப் போனால் சிலப்பதிகாரமும் சமயச் சார்பற்ற நூல்தான்.
பூங்குழலி. திருக்குறள் போன்ற சிறந்த நூலை எல்லா சமயத்தாரும் உரிமை கொண்டாட விழைவது ஆச்சரியமில்லை. திருக்குறள் வைணவத்தைப் பேசுகிறது, சைவத்தைப் பேசுகிறது, சமணத்தைப் பேசுகிறது, பௌத்தத்தைப் பேசுகிறது, கிறித்துவத்தைப் பேசுகிறது, இஸ்லாமியத்தைப் பேசுகிறது என்று அந்தந்த சமய அறிஞர்கள் அவர்களுக்குத் தோன்றிய ஆதாரங்களை வைத்து எழுதியவற்றை நான் ஒரு பத்து வருடங்களுக்கு முன்பு படித்திருக்கிறேன். அந்தந்த சமயங்களின் மேல் அபிமானம் வைத்திருப்பவர்கள் அந்தந்த சமய அறிஞர்கள் தரும் ஆதாரங்களைக் கொண்டு திருக்குறள் தம் சமயத்தைத் தான் சொல்கிறது என்று நம்ப விழைவர். அதனால் இந்த விவாதம் எந்த முடிவிற்கும் எப்போதும் வந்து சேராது. யானையை குருடர்கள் தடவி அறிய முயலும் கதைதான். யாராலும் திருவள்ளுவர் எந்த சமயத்தைச் சார்ந்தவர் என்பதையோ அவர் எந்த சமயத்தையும் சாராதவர் என்பதையோ அறுதியிட்டுக் கூற முடியாது.
இன்னொரு விவாதத்தைப் பற்றிக் கேட்டிருக்கிறீர்களா? திருக்குறளை எழுதியது ஒரு திருவள்ளுவர் அன்று. திருவள்ளுவர்கள் பலர் இருந்திருக்கின்றனர் என்ற கருத்தும் உள்ளது. ஒருவர் மதுரையில் வசித்தவர். இன்னொருவர் மயிலையில் வசித்தவர் என்றும் அதற்குச் சான்றுகளில் ஒன்றாகக் கூறுகின்றனர். சங்கராசாரியர்கள் பலர் இருப்பதைப் போன்றது அது என்கின்றனர். அதே போல் பல ஒளவையார்களும் இருந்ததாகச் சொல்வர்.
//திருக்குறள் சமயச் சார்பற்ற நூல் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை. எந்தச் சமயத்தையும் எதிர்த்தும் தாழ்த்தியும் காழ்ப்போடும் எதுவும் சொல்லவில்லையே.//
நிச்சயம் திருக்குறள் எந்த சமயத்தையும் காழ்ப்போடு பார்க்கவில்லை. எந்த சமயமாவது திருக்குறளை சொந்தம்
கொண்டாடினாலும், திருக்குறளை யாரும் வெறுத்துவிடப் போவதில்லை.
தமிழ் என்ற பார்வையில் பார்க்கும்போது, வேற்று மொழிக்கு அரியாசனமும், பெயர் சொல்ல விரும்பாத மொழிக்கு
சரியாசனமும் கொடுத்து தமிழை சாதாரண மக்கள் மட்டுமே பேசிவந்தபோது ,
இத்தகைய சமயப் புலவர்களின் நாவிலே அமர்ந்து, சமயங்களை உண்டு உயிர் வாழ்ந்து வந்திருக்கின்றது தமிழ்.
உண்மையில் அனைத்து சமயப் பாடல்களுமே தேன்.
ஆகவே தமிழ் மொழிப்பற்றுள்ள எவரும் மற்ற சமய நூல்களின் மீது எள்ளளவும் காழ்ப்பு காட்டமாட்டார்கள்.
நான் விரும்புவது, சைவம் சார்ந்த கருத்துக்களை, திருக்குறளில் இருந்து எடுத்தாண்டு சொல்லும் ஒரு இனிய பதிவையே.
//திருக்குறள் போன்ற சிறந்த நூலை எல்லா சமயத்தாரும் உரிமை கொண்டாட விழைவது ஆச்சரியமில்லை.//
உண்மைதான் குமரன்.
ஒவ்வொருமுறை திருக்குறள் படிக்கும்போதும் எனக்கு புதுப்புது நுண்ணிய செய்திகள், அர்த்தங்கள், கருத்துக்கள் கிடைக்கின்றன.
திருக்குறள் ஒரு கிடைத்தற்கரிய பொக்கிஷம்.
அவ்வையார் என்பவர் ஒன்றுக்கும் மேற்பட்டவர்கள் என்றே நானும் நம்புகிறேன்.
திருக்குறளில் கூட தளைதட்டும் பாடல்கள் இருப்பதாக எனக்கும் சொல்லக் கேள்வி.
// இன்னொரு விவாதத்தைப் பற்றிக் கேட்டிருக்கிறீர்களா? திருக்குறளை எழுதியது ஒரு திருவள்ளுவர் அன்று. திருவள்ளுவர்கள் பலர் இருந்திருக்கின்றனர் என்ற கருத்தும் உள்ளது. ஒருவர் மதுரையில் வசித்தவர். இன்னொருவர் மயிலையில் வசித்தவர் என்றும் அதற்குச் சான்றுகளில் ஒன்றாகக் கூறுகின்றனர். சங்கராசாரியர்கள் பலர் இருப்பதைப் போன்றது அது என்கின்றனர். அதே போல் பல ஒளவையார்களும் இருந்ததாகச் சொல்வர். //
குமரன், ஔவையார் என்று எழுத வேண்டும். அவ்வையார் என்று எழுதக் கூடாது. அவ்வைப்பாட்டி என்றால் என்ன பொருள் என்று உங்களுக்குத் தெரியும்தானே.
ஔவையார் பலர் இருந்ததை ஆதாரத்தோடு சொல்லலாம். காரணம் அவர்களது செய்யுட்களில் இருக்கும் மொழிக்கையாடல் தெள்ளத் தெளிவாக வேறுபட்டிருக்கின்றது. ஆனால் வள்ளுவரை அப்படிச் சொல்ல முடியுமா என்று தோன்றவில்லை. காரணம் வள்ளுவரின் திருக்குறளும் வேறு சில தனிப்பாடல்களுமே காணக் கிடைக்கின்றன. அதுவும் ஓரளவுக்குப் பொருந்தும் மொழிக்கையாடலோடு.
// தமிழ் என்ற பார்வையில் பார்க்கும்போது, வேற்று மொழிக்கு அரியாசனமும், பெயர் சொல்ல விரும்பாத மொழிக்கு
சரியாசனமும் கொடுத்து தமிழை சாதாரண மக்கள் மட்டுமே பேசிவந்தபோது ,
இத்தகைய சமயப் புலவர்களின் நாவிலே அமர்ந்து, சமயங்களை உண்டு உயிர் வாழ்ந்து வந்திருக்கின்றது தமிழ்.
உண்மையில் அனைத்து சமயப் பாடல்களுமே தேன். //
பூங்குழலி, உண்மை தெரியுமா, தமிழுக்குத் துன்பம் வருகையில் எல்லாம் தமிழ்ப் புலவர்கள் வந்து அதை ஒவ்வொரு பொழுதிலும் காப்பாற்றியிருக்கின்றார்கள். வடக்கிலிருந்து வந்த சமணமும் பவுத்தமும் கூட தமிழில் எழுதினால்தான் நிலைக்க முடியுமென்று நான்கு காப்பியங்கள் கிடைத்துள்ளன.
அப்பரும் சம்பந்தரும் சுந்தரரும் கோயில் கோயிலாகச் சென்று தமிழ்ப் பாக்களைப் பாடி தமிழுக்கு மீண்டும் ஆன்மீக ஒளியேற்றினர். அந்தப் பாக்களும் தில்லையில் ஒளிந்த போது நம்பியாண்டார் நம்பியும் ராஜராஜனும் வெளிக்கொணர்ந்தனர்.
அதே போல் வைணவத்தில் தமிழ் வேதமே உண்டு. தமிழ் முன்னால் போகும். வடமொழி பின்னால் வரும் என்று கூட வைணவத்தில் ஒரு வழக்குண்டு. தெரிந்தவர்கள் விளக்கமாக அழகாகச் சொல்லலாம்.
பிற்காலத்தில் கன்னடம் வலுப்பெற்ற காலத்திலும் தமிழையும் தமிழ்கடவுளையும் ஆயிரமாயிரம் பாக்கள் பாடி தமிழைக் காத்தார் அருணகிரியார். அவருடைய பாடல்களில் வடமொழிச் சொல்லாடல் உண்டு என்றும் சொல்வார்கள். அது முதலில் தமிழை ஆலயத்துக்குள் நுழைக்கச் சேர்க்கப் பட்டது. போகப் போக அவர் எழுதிய கந்தரலங்காரம், அநுபூதி, வேல் மயில் விருத்தங்கள் எல்லாம் படித்தால்....அடடா!
// நான் விரும்புவது, சைவம் சார்ந்த கருத்துக்களை, திருக்குறளில் இருந்து எடுத்தாண்டு சொல்லும் ஒரு இனிய பதிவையே. //
இது கண்டிப்பாக முடியக் கூடியதே. நமது தமிழ்மணத்தில் இது தொடர்பான வேண்டுகோளை வையுங்களேன். ஏனென்றால் இந்தப் பதிவு வேண்டுகோள் வடிவிலோ, ஆவல் வடிவிலோ இல்லை என்பது என் கருத்து.
// திருக்குறளில் கூட தளைதட்டும் பாடல்கள் இருப்பதாக எனக்கும் சொல்லக் கேள்வி. //
இதை நிரூபித்தவர் யாருமில்லை பூங்குழலி. ஔவை நடராசனை நீங்கள் அறிவீர்கள் என நினைக்கின்றேன். வைரமுத்து இப்பொழுது நீங்கள் சொன்னதையே சொன்னதிற்கு, வைரமுத்துவையே பதம் பிரித்துப் பார்க்கச் சொன்னாராம். வைரமுத்துவும் ஒவ்வொரு குறளாக எடுத்து அலகிட்டும் பார்த்திருக்கின்றார். கடைசியில் வள்ளுவரே வென்றார் என்று வைரமுத்துவே தொலைக்காட்சியில் சொல்லக் கேட்டேன். திருக்குறள் குறள்வெண்பாவின் இலக்கணப்படி எந்தக் குறையுமின்றி அமைந்த நூல். என்னைக் கேட்டால் இதெல்லாம் இறையருள் என்றுதான் சொல்வேன்.
// மனிதன் ரொம்ப அடக்கமாக இருக்கலாம். ஆனால் அடக்கமே மனிதனாக இருக்கலாமா?
ச்சும்மா தமாசு..
எனிவே நீங்கள் இதற்கு பதில் அளிப்பீர்கள் என்று நினைத்தேன். இந்த
மாதிரியான விசயங்களில் உங்களுக்கு இருக்கும் புலமை எங்களை மாதிரியான பாமரர்களுக்கு வியப்பளிக்கிறது. வாழ்க உங்கள் தொண்டு. //
முத்து, மொதல் பேராவுல நகைச்சுவைக் கிண்டல். ரெண்டாவது பேராவுல சீரியஸ் கிண்டலா? :-))
//குமரன், ஔவையார் என்று எழுத வேண்டும். அவ்வையார் என்று எழுதக் கூடாது. அவ்வைப்பாட்டி என்றால் என்ன பொருள் என்று உங்களுக்குத் தெரியும்தானே.
//
இராகவன், நான் சரியாக ஒளவையார் என்று தானே எழுதியிருக்கிறேன். அவ்வையார் என்று எழுதவில்லையே. அது சரி. அவ்வைப்பாட்டி என்றால் என்ன பொருள் என்று சொன்னால் தானே மற்றவர் அடுத்தமுறை தவறாகப் பயன்படுத்தாமல் இருப்பார்கள்.
//ஆனால் வள்ளுவரை அப்படிச் சொல்ல முடியுமா என்று தோன்றவில்லை.// இராகவன், அதே காரணம் தான் சொல்லப்படுகிறது. திருக்குறளில் பல இடங்களில் சில அதிகாரங்களில் சொல்லப்பட்ட கருத்துக்கு ஒவ்வாததாய் பின்னோரிடத்தில் சில கருத்துகள் வருவதாய் சில ஆராய்ச்சியாளர்கள் கருதுகிறார்கள். படித்திருக்கிறேன். ஆனால் இப்போது எடுத்துக்காட்டுகள் நினைவுக்கு வரவில்லை. மன்னிக்கவும்.
//தமிழ் முன்னால் போகும். வடமொழி பின்னால் வரும் என்று கூட வைணவத்தில் ஒரு வழக்குண்டு. தெரிந்தவர்கள் விளக்கமாக அழகாகச் சொல்லலாம்.
//
கூடலில் அடுத்தப் பதிவாக இதைப் போட்டுவிடுகிறேன். :-)
பூங்குழலி,
திருக்குறள் சைவ நூல் அல்ல; மற்ற எந்த சமயத்தையும் அது சேர்ந்தது அல்ல; அப்படியான எந்த அடையாளமும் உண்மையான தேடலுக்கு அவசியமற்றது என்ற ஞானம் திருவள்ளுவருக்கு இயல்பாக இருந்திருக்கிறது. சமய அடையாளம் மட்டுமல்ல, நாடு, பண்பாடு, மொழி, இனம் இப்படி எந்த அடையாளமும் இல்லாத மிகச்சில நூல்களில் அதுவும் ஒன்று. அது தமிழில் எழுதப்பட்டிருக்கிறது அவ்வளவுதான் அதற்கும் தமிழுக்கும் உள்ள தொடர்பு கூட. திருவள்ளுவர் காலத்தால் மாறாத விதயங்களைப்பற்றியே பேசுகிறார். அதுவே இன்றும் அது நிலைபெறக் காரணம். வ.செ.குழந்தைசாமி எழுதிய 'வாழும் வள்ளுவம்' என்ற சிறு நூல் இந்த வகையில் பயனளிக்கலாம்.
தவிர குறள் வைதீக எதிர்ப்பு நூல் என்று வாதிடுவோரும் உண்டு. பிறப்பொக்கும் எல்லா உயிரும்..
என்ற குறள், மற்றும் விவசாயத்தை கீழான தொழிலாக கருத்துகிற வைதீகத்துக்கு மாற்றாக உழவை தலையான தொழிலாகச் சொல்வது, ஊழை கட்ந்து செல்ல முடியும் என்பது போன்றவை இந்த விவாதத்துக்கு வலு சேர்ப்பவை.
நிகழ்ச்சியில் அவர் சைவமாக சொந்தம் கொண்டாடியவுடன், எங்கே ஒரு சாரருக்கு சொந்தமாகிவிட்டால் மற்றவர் வெறுத்துவிடுவார்களோ என்ற ஆதங்கத்தில் வந்தப் பதிவு இது.
குமரன், இராகவன் போன்றோரின் கருத்துக்களைப் பார்க்கும்போது நான் நம்பியவிதமாய் ஆனால் ஆபத்தில்லை என தெளிந்தேன்.
தங்கமணி அவர்களின் கருத்தும் ஏற்புடையவைகளே.
நிச்சயம் அப்புத்தகத்தை படித்துவிட முயற்சிக்கிறேன்.
இராகவன், ஒளவையார் என்பதை வேறுமாதிரி எழுதினால் என்ன பொருள் என்பதை, பொது இடத்தில் சொல்ல தகாது என்றால் தனி மின்னஞ்சல் மூலம் சொல்லவும்.
நன்றி.
தங்கமணி அருமையான குறள்களை எடுத்து காட்டியுள்ளார்.
1) பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்
2) உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்
3) ஊழையும் உப்பக்கம் காண்பர்
இது தவிர அந்தணன் என்பவன் அந்தணனாகப் பிறந்தவன் என்று கூறாமல்,
4) அந்தணன் என்போன் அறவோன்
எனக் கூறுகிறார் வள்ளுவர்.
பலர் வள்ளுவரை தன்னுடைய இனத்தவராகக் காட்ட முயல்கின்றனர் என்பது உண்மையே.
மடியிலா மன்னவன் .. என ஆரம்பிக்கும் குறளுக்கு சுஜாதா போன்றவர்கள் வைணவமாக்கப் பட்ட பொருளைத்தருகின்றனர்.
கமல்ஹாசன், அன்பே சிவம் படத்தில், திருவள்ளுவரை 'மைலாப்பூர் man' என்கிறார்.
இது தவிர சிலர் திருவள்ளுவர் படத்திற்கு பூனூலையும் அனுவித்து மகிழ்கின்றனர்.
மூட்டைத் தூக்கும் உழைப்பாளிகளின் சங்கத்தினர் திருவள்ளுவரின் கையில் குத்தூசி யிருப்பது போல் காட்டுகின்றனர்.
விளக்கத்திற்கு, தங்கமணி மற்றும் மு.மாலிக் அவர்களுக்கு எனது நன்றி உரித்தாகுக...
//அந்தணன் என்போன் அறவோன்
எனக் கூறுகிறார் வள்ளுவர். //
ஐயா, அந்தணன் என்பவர் வேறு, பிராமணன் என்பது வேறு.
இருவருக்கும் நிறைய வேறுபாடு உள்ளது.
//இது தவிர சிலர் திருவள்ளுவர் படத்திற்கு பூனூலையும் அனுவித்து மகிழ்கின்றனர். //
பூனூல் பிராமணர்களுக்கு மட்டுமே உரியது என்று யார் சொன்னது?
சூத்திரன்?/பெண்கள் தவிர அனைவரும் அணியலாம்.
சம்பந்தப்பட்டவர்கள் கேட்டுக்கொண்டால் இதுபற்றி ஒரு தனிப்பதிவே போட உத்தேசமாயுள்ளேன்.
//மடியிலா மன்னவன் .. என ஆரம்பிக்கும் குறளுக்கு சுஜாதா போன்றவர்கள் வைணவமாக்கப் பட்ட
பொருளைத்தருகின்றனர்.//
மடி என்பது சோம்பல் என்றே நினைக்கிறேன்.
சுஜாதா என்ன சொன்னார்?
// ஐயா, அந்தணன் என்பவர் வேறு, பிராமணன் என்பது வேறு. //
பூங்குழலியின் இந்தக் கருத்தை நானும் ஏற்றுக் கொள்கின்றேன். அந்தணன் என்பதற்குத் தமிழ் நூல்கள் சொல்லும் விளக்கமே பிறப்பினால் இல்லை. ஒருவனுடைய நடவடிக்கைகளாலும் செயற்கரிய செயல்களாலும் மட்டுமே. இது தொடர்பாக பல பழைய நூல்களில் காணலாம். பிறப்பொக்கும் எவ்வுயிர்க்கும் என்பதில் வள்ளுவர் மட்டுமல்ல பல தமிழ்ப் புலவர்களும் உறுதியாக இருந்துள்ளனர்.
// இராகவன், ஒளவையார் என்பதை வேறுமாதிரி எழுதினால் என்ன பொருள் என்பதை, பொது இடத்தில் சொல்ல தகாது என்றால் தனி மின்னஞ்சல் மூலம் சொல்லவும். //
சொல்வதில் தயக்கமில்லை. எல்லோருக்கும் தெரியத்தான் வேண்டும்.
அவ்வைப்பாட்டி = அவ் வைப்பாட்டி
ராகவன் மற்றும் பூங்குழலியுடன் நான் ஒத்தே கூறுகிறேன். அந்தணன் எனும் சொல்லுக்கு 'பிராமணர்' என்று பொருள் கொள்ளமுடியாதுதான். மக்கள் பேச்சு வழக்கில் (சில சமயங்களில் பிராமணர்களாலும்) இவ்வாறு பொருள் கொள்ளப்படுகிறது. சில சமயங்களில் 'இந்த மன்னன் இந்த யாகத்தின் போது இத்தனை நூறு அந்தணர்களுக்கு தானம் வழங்கினார்' என்று கூறும் போது அந்தணர் என்றால் புரோகிதர் என்றே பொருள் கொள்ளப்படுகிறது. புரோகிதர் எனும் பதவிக்கு பிறப்பின் அடிப்படையில் தகுதியுடையவராக வேண்டும் என்பது வாழும் நம்பிக்கையாக உள்ளது.
சில சமயங்களில்,
அறவாழி அந்தணன் தாள் சேர்ந்தார் கல்லால்
பிறவாழி நீந்தல் அறிது
என்ற குறள், அனைவரும் அறிந்த சமய நம்பிக்கையான 'பிராமணர்களை தொழ வேண்டும்' என்பதை வலியுறுத்துவதாகவும் திருவள்ளுவர் பிராமண்யத்திற்கு சப்போர்ட் செய்வதாகவும் கூறுவர். அவ்வாறு இல்லை என்று நிறுவவே, "அந்தணன் என்போன் அறவோன்" என்னும் குறள் இருக்கிறது.
இதில் முற்றும் உங்களுடன் ஒத்துக்கொள்கிறேன்
மடியிலா மன்னவன் எனும் குறளுக்ககான (குறள் எண் 610) பொருளில் சுஜாதா, மு.வ. உள்ளிட்டோர் எப்படி விளையாடினார்கள் என்றால் சோம்பலற்ற மன்னன் மகாவிஷ்ணு இவ்வுலகங்களை தன் அடியால் அளந்தது போல் நிலங்களைப் பெறுவான் என பொருள் கூறியுள்ளனர். ஆனால் மற்ற உரையாசிரியர்கள் இவ்வாறு பொருள் கூறுவதில்லை.
சில சமயங்களில்,
மலர்மிசை ஏகினான் மானடி சேர்ந்தார்
.. எனும் குறளுக்கும் வைணவர்கள் தங்களுக்கு உகந்த பொருள் கூறுகின்றனர். ஆனால் மற்ற உரையாசிரியர்கள் மனதினை மலராக உருவகிக்கும் விளக்கத்தினைப் பயன்படுத்துகிறார்கள். (இதே உருவகிப்பில் தான் பெளத்த சமய காட்சியான புத்தர் மலரின் மீது வீற்றிருப்பது விளக்கப்படுகிறது)
//சொல்வதில் தயக்கமில்லை. எல்லோருக்கும் தெரியத்தான் வேண்டும்.
அவ்வைப்பாட்டி = அவ் வைப்பாட்டி //
ஆகா, நானும் அவ்விதத்தில் தான் யோசித்தேன்.
தற்போது தெளிவுபெற்றேன்.
அவ்வையார் என்பதில் அவருக்கு ஏதும் அவப்பெயர் வராது என நம்புகிறேன்.
நான் அவ்வையாரை அகரத்தில் முன்னிருத்த முனைகிறேன்.
ஒள என்ற எழுத்தால் அவர் பின்னுக்குப் போய்விட வாய்ப்புண்டு. வேறெந்த எண்ணமும் இல்லை.
தெளிவுக்கு நன்றி திரு இராகவன்.
நன்றி.
// ஒள என்ற எழுத்தால் அவர் பின்னுக்குப் போய்விட வாய்ப்புண்டு. வேறெந்த எண்ணமும் இல்லை.
தெளிவுக்கு நன்றி திரு இராகவன். //
குழலி நீங்கள் விரும்பிய படி எழுதுக் கொள்ளுங்கள். ஆனால் இலக்கணப்படி அது தவறு. பிறகு உங்கள் விருப்பம். :-)
// மலர்மிசை ஏகினான் மானடி சேர்ந்தார்
.. எனும் குறளுக்கும் வைணவர்கள் தங்களுக்கு உகந்த பொருள் கூறுகின்றனர். ஆனால் மற்ற உரையாசிரியர்கள் மனதினை மலராக உருவகிக்கும் விளக்கத்தினைப் பயன்படுத்துகிறார்கள். //
மாலிக் இங்கு ஒரு சின்ன சுவாரசியமான தகவல். மலர் மிசை என்று சொன்னவுடன் எனக்கு பழைய பாடல் வரி ஒன்று நினைவிற்கு வருகின்றது. ஐயோ...பாட்டு நினைவுக்கு வரலையே. எங்கையோ படிச்சது. "மலர்மிசை ஏகியா மாண்பு" என்று முருகனைப் பற்றி எங்கேயோ படித்திருக்கிறேன். கண்டிப்பாக திருப்புகழிலோ அநுபூதியிலோ அலங்காரத்திலோ இல்லை. ஏதோ ஒரு பழைய பாடல். தேடிப் பார்க்க வேண்டும்.
///நீங்கள் விரும்பிய படி எழுதுக் கொள்ளுங்கள். ஆனால் இலக்கணப்படி அது தவறு. பிறகு உங்கள் விருப்பம். :-)///
நன்றி, நிச்சயம் மாற்றிக்கொள்ள விரும்புகிறேன்.
என்ன இலக்கண பிழை என்று சொன்னால் மகிழ்வேன்.
மற்றபடி, ஐ, ஔ போன்ற எழுத்துக்கள், பிற்காலத்தில் தமிழில் சேர்ந்தவையோ என்ற சந்தேகமும் எனக்குண்டு.
நீங்கள் சொன்ன பாடலையும் தேடிப்பார்க்க முயற்சிக்கிறேன்.
நன்றி.
Post a Comment