திராவிடர்களும் ஆரியர்களே!...
என்ன தலைப்பைப் பார்த்தவுடன் ஆச்சரியமாய் இருக்கிறதா?
எனக்குக் கூட இத்தகவலை கண்டவுடன் மிகவும் மலைப்பாய் இருந்தது.
இந்நாள் வரை வலைப்பதிவர்களின் உண்மைத்தேடல் மூலம் நான் அறிந்திருந்தவை....
* - திராவிடம் என்பதே பொய், ஆனால் ஆரியம் என்பது இருந்தது
*- திராவிடம் என்பதே திராவிட(?) மொழிகளின் சொல் அல்ல..
*- இன்னும் கேட்டால் மிலேச்சர்கள் என்று ஒன்றும் கிடையாது. வடமொழியைக் கேட்டால் காதில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்ற வேண்டும் என்ற விதியால் பாதிக்கப்பட்ட எவனோ ஒருவன் செய்த இடைசெருகல்தான் மிலேச்சர்கள், அசுரர்,மிலேச்சபாஷை போன்ற சொற்கள்.
அனால் இந்த பொழிப்புரையாசிரியரின் விளக்கத்தைக் கண்டவுடன் ஆரியர்கள் என்போர் யார் என்ற சந்தேகம் தீர்ந்தது.
கீதையின் முதல் அத்தியாயமான அர்ஜுன விஷாத யோகத்தில் வில்லவனின் மனத்தடுமாற்றத்தையும், அவனது போலி வேதாந்தத்தையும் பற்றி விவரிக்கப்படுகிறது.
அதுவரை வாளாவிருந்த பகவான், இரண்டாம் அத்தியாயமான சாங்கிய யோகத்தில், இரண்டாம் பாடலாக வில்லவனை பார்த்து சொல்கிறார்.
ஸ்ரீபகவானுவாச...குதஸ்வா கச்மலமிதம் விஷமே
ஸ்முபஸ்திகம் அநார்யஜூஷ்டம ஸ்வர்க்யம கீர்திகரமர்ஜூன
அதாவது,
அர்ஜுன - அர்ஜூனா...
விஷமே- நெருக்கடியில்
குத- எங்கிருந்து
இதம்- இந்த
அநார்ய ஜூஷ்டம் - ஆரியனுக்கு அடாதது
அஸ்வர்க்யம்- சுவர்கத்திற்கு தடையாவது
அகீர்த்திகரம் -புகழைப் போக்குவது
கச்மலம்- மோகம்
(பொறாமை - இதுவும் பாடம், சில புத்தகங்களில் இவ்வார்த்தைக்கு பொறாமை என பொருள் கூறப்பட்டுள்ளது,
இது இடத்திற்கு தகுந்தவாறு மாறுமா எனத் தெரியவில்ல,
அறிந்தோர் தெரிவிக்கவும்..)
த்வா -உன்னிடத்து
ஸமுபஸ்திகம் - அடைந்தது?
ஸ்ரீபகவான் சொன்னது..
அர்ஜூனா, ஆரியனுக்கு அடாததும், சுவர்க்கத்தைத் தடுப்பதும், புகழைப்போக்குவதுமான
இவ்வளவுச் சோர்வு இந்நெருக்கடியில் எங்கிருந்து
உன்னை வந்தடைந்தது?
என்று கேள்வி எழுப்புகிறார்..
(நடுநடுவே எனக்கு தோன்றிய சந்தேகங்களை தனித்து காட்டியிருக்கிறேன்.)
பகவான் அனைத்தும் அறிந்தவர்,
ஆனால் இத்தைய கேள்வியை ஏன் அறியாத மானுடத்தன்மை
கொண்ட வில்லவனை பார்த்து கேட்டார் எனத்
தெரியவில்லை...ஒருக்கால் அறிவினாவாக இருக்கக்கூடும். :))
கேள்வியை விட்டுத்தள்ளுங்கள்...
நம் விவாதப் பொருளுக்குத் தேவைப்படும் அநார்ய ஜூஷ்டம் என்ற சொல்லை எடுத்துக்கொள்வோம்.
இச்சொல்லுக்கு பொழிப்புரையாசிரியர் கூறும் விளக்கத்தைக் காண்போம்.
ஆரியன் என்னும் பதம் நம் சாத்திரங்களில் வந்தமைவது
ஒரு தேசம் அல்லது ஒரு ஜாதிக்கு உரியவனைக் குறிப்பதற்கன்று.
பண்பட்ட மனதும் சிறந்த வாழ்க்கை முறையும்,
எவனிடத்துளதோ அவன் ஆரியன்.
(போட்டாரையா ஒரு போடு)
இது போன்று துரை, gentleman, அந்தணன், சாஹிப் முதலிய (முதலியார் அல்ல) சொற்கள் மேன்மக்களது பண்பைக் குறிப்பனவாம்.
தவம் புரிந்து (பாயசம் பெற்று?) பெறும் பிள்ளைகள்
ஆரியர் ஆகின்றனர் என்பதும்,(பிறந்தாலே போதுமா?, பண்பட்ட மனது
தேவையில்லையா?) காம வசப்பட்டவர் பெற்ற பிள்ளைகள் ஆரியர் ஆவதில்லை
என்பதும் மனுஸ்மிருதியின் கோட்பாடாகும்.
மக்கள் அனைவரையும் ஆரியன் ஆக்குவது வேதாந்ததின்
நோக்கமாகும். (இது இன/மத மாற்றம்/அழிக்கப்படும்
பன்முகத்தண்மை கீழ்
வருமா?)மேன்மகனாகிய வில்லவன் கீழ்மகன் போன்று
நடந்துகொள்வதை பகவான் நிராகரிக்கிறார்.(வெட்டு குத்து, குருதி
என்று போரிட்டு உறவினரை ஒழிப்பதுதான் மேன்மக்களின் பண்பு போலும்)
நெருக்கடியில் மனக்கலக்கமடைபவன் ஆரியன் இல்லை.அத்தகையவனுக்கு இவ்வுலகும்
இல்லை, அவ்வுலகும் இல்லை.
என்பதாக கருத்து சொல்கிறார்.
அன்பர்களே....
திராவிடர்கள் பண்பட்ட வாழ்க்கை வாழ்பவர்கள் என்றே கருதுகிறேன்.
ஆகவே அவர்களும் ஆரியரே..
ஆரியரின் மதம் இந்து மதம் (இதில் சாஹிப்களும் அடக்கம்).
இந்துமதமே கீழ்மக்களை நல்வழிப்படுத்தி ஆரியராக்குகிறது.
இக்கருத்துகள் நாம் அனைவரும் இந்துவே பதிவுகளுக்கு
மேலும் வலு சேர்ப்பது மிகவும் மகிழ்ச்சியாய் இருக்கிறது.
இது தொடர்பான முதல் இரண்டு பதிவுகளைக்காண...
குறிப்பு:
என்னதான் இப்பதிவு நாம் அனைவரும் இந்துவே என்ற
கருத்திற்கு பொருந்த்தமாய் இருந்தாலும்,"நாம் அனைவரும் இந்துவே"
என்ற தலைப்பு வைக்கமுடியாத அளவுக்கு சில இடைஞ்சல்கள் நேர்ந்துள்ளன.
அதுபற்றி எதிர்வரும் பதிவில் சொல்வேன்...
நன்றி.
22 பின்னூட்டங்கள்:
நல்ல பதிவு.
நன்றி.
அனார்யம் என்பதற்கு Ignoble என்று பொருள். ஆர்யம் இருந்தது என்றால் அது இன்று உள்ள அர்த்தத்தில் இருந்ததில்லை. அதே தான் திராவிடமும்.
ஆர்யம் என்பதையும் திராவிடம் என்பதையும் இன்று உள்ள அர்த்தங்களில் கொண்டு கீதையைப் பார்த்தால் உங்கள் வலைப்பதிவின் தலைப்பு தான் மிஞ்சும்.
வருகைக்கு நன்றி சிவபாலன் அவர்களே..
///அனார்யம் என்பதற்கு Ignoble என்று பொருள். ஆர்யம் இருந்தது என்றால் அது இன்று உள்ள அர்த்தத்தில் இருந்ததில்லை. அதே தான் திராவிடமும்.///
முதல் வருகைக்கு நன்றி Vajra அவர்களே..
ஆர்யம் = noble
அனார்யம் = Ignoble
இருக்கலாம், ஆனால் இந்நாள் வரை இது மாதிரியான
// அநார்ய ஜூஷ்டம் - ஆரியனுக்கு அடாதது//
கருத்துக்களையே விளக்கவுரையாளர்கள்
சொல்லிவந்திருக்கின்றனர்.
உண்மைப் பொருளை நம் போன்றோர்தான் சொல்லவேண்டியிருக்கிறது.
நல்லவேளை, மனதிற்குள் வைத்திருக்காமல் வெளியே சொல்லியதால் எனக்கு மாற்றுப்பொருள் கிடைத்தது.
விளக்கத்திற்கு நன்றி..
///ஆர்யம் என்பதையும் திராவிடம் என்பதையும் இன்று உள்ள அர்த்தங்களில் கொண்டு கீதையைப் பார்த்தால் உங்கள் வலைப்பதிவின் தலைப்பு தான் மிஞ்சும்.///
நாம் சிக்கியிருக்கும் இன்றைய நிலையைப் பார்த்தால் தலையே மிஞ்சாது போலிருக்கிறது.
தலைப்பாவது மிஞ்சினால் சரி..
"எப்படி வகையா சிக்கியிருக்கோம் பாருங்க"...
//"நாம் அனைவரும் இந்துவே"
என்ற தலைப்பு வைக்கமுடியாத அளவுக்கு சில இடைஞ்சல்கள் நேர்ந்துள்ளன.
அதுபற்றி எதிர்வரும் பதிவில் சொல்வேன்...
நன்றி.//
அடுத்தபதிவு 'உலகமக்கள் யாவரும் ஓர் குலம், அதாவது உலகமக்கள் அனைவரும் ஆரியாரே ?'
:)
அய்யா...
யாரவர் இப்பதிவை நகைச்சுவை நையாண்டி வகையில் சேர்த்தது..
சிறிதே மறந்தேன் அதற்குள் இப்படியா?
வருகைக்கு நன்றி கோவி.கண்ணன் [GK] அவர்களே...
///அடுத்தபதிவு 'உலகமக்கள் யாவரும் ஓர் குலம், அதாவது உலகமக்கள் அனைவரும் ஆரியரே ?'
:) ///
:))
நல்ல விளக்கங்கள் பூங்குழலி.
அடுத்த பதிவையும் வாசிக்க காத்திருக்கிறேன்
வணக்கம் முத்துகுமரன் அவர்களே..
உங்கள் வருகைக்கான நன்றி நவிலல் காலை வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
"அண்மையில் மறுமொழியப்பட்ட பதிவுகள்" பட்டியலில் வரவேண்டுமல்லவா..
:))
கால தாமதத்திற்கு மன்னிக்கவும்.
(என்னவெல்லாம் செய்யவேண்டியிருக்கு பாருங்கள்)
பூங்குழலி, நல்ல பதிவு! பகவான் கண்ணனை பற்றி அறிய ஆவலை தூண்டுகிறது உங்கள் பதிவுகள். இப்போ தான் எல்லா பதிவுகளையும் படிக்க ஆரம்பித்துள்ளேன்! :)
இந்தப் பதிவைப் படித்தால் **** பசங்களுக்கு புடுங்கிக்குமே?!
(பின்னூட்டம் சிறு திருத்தம் செய்யப்பட்டுள்ளது..)
//
"அண்மையில் மறுமொழியப்பட்ட பதிவுகள்" பட்டியலில் வரவேண்டுமல்லவா..
:))
//
:-))))
அப்படியே நம்ம வீட்டுப்பக்கம் வந்து பாக்கிறது:-)
வருகைக்கு நன்றி முத்துகுமரன் அவர்களே..
///அப்படியே நம்ம வீட்டுப்பக்கம் வந்து பாக்கிறது:-) ///
முதலில் நன்றி சொல்லிவிடவேண்டும்..
பிறகு என் வீட்டுக்கு சென்று மதிய உணவை முடித்துக்கொண்டு, உங்கள் வீட்டுக்கு இதோ வந்துகொண்டே இருக்கிறேன்.
//
இருக்கலாம், ஆனால் இந்நாள் வரை இது மாதிரியான
// அநார்ய ஜூஷ்டம் - ஆரியனுக்கு அடாதது//
கருத்துக்களையே விளக்கவுரையாளர்கள்
சொல்லிவந்திருக்கின்றனர்.
//
http://www.asitis.com/2/2.html
"ஆரியனுக்கு அடாத" என்று யாருமே சொன்னதில்லை. திராவிட குஞ்சுக்கள் தவிர.
பிரபுபாதா அவர்கள் கூட அதை A man who does not know the values of life என்று பொருள் தருகிறார். பிரபுபாதா அவர்கள் வியாசரின் சீடர்களின் வரிசையில் வருபவர். (I am not a big fan of ISKON).
வருகைக்கு நன்றி திரு அவர்களே..
// பகவான் கண்ணனை பற்றி அறிய ஆவலை தூண்டுகிறது உங்கள் பதிவுகள்.//
இதுவரை வந்த பதிவுகள் கடலின் ஒரு துளி மட்டுமே..
மற்ற பதிவுகளையும் படித்து பார்த்து தங்களின் கருத்தைச் சொல்லவும்.
நன்றி..
வருகைக்கு நன்றி தமாஷ் பாண்டி அவர்களே..
//காமேஸ்வரா! எங்குழலியை நீ காப்பாற்று!//
தங்களின் அக்கரைக்கு நன்றி..
:))
வருகைக்கு நன்றி doondu அவர்களே..
//"ஆரியனுக்கு அடாத" என்று யாருமே சொன்னதில்லை. திராவிட குஞ்சுக்கள் தவிர.
பிரபுபாதா அவர்கள் கூட அதை A man who does not know the values of life என்று பொருள் தருகிறார். பிரபுபாதா அவர்கள் வியாசரின் சீடர்களின் வரிசையில் வருபவர். (I am not a big fan of ISKON).//
மறு வருகைக்கு நன்றி Vajra அவர்களே..
நீங்கள் கூறிய வலையகத்திற்கு சென்று பார்த்தேன்.
நீங்கள் மேலே கொடுத்துள்ள கருத்தே உள்ளது.
எனது பக்க விளக்கங்கள் கூற, நாளைவரை எனக்கு அவகாசம் தேவை.
மற்றபடி, நான் எடுத்தாண்டுள்ள பொழிப்புரை கொடுத்தவர் ஒரு "திராவிட சிசு"வா என்று எனக்குத் தெரியாது.
நான் வெளியிட்டபின்பு, "திராவிட குஞ்சு" என அழைத்திருக்கலாம்.
தங்களின் கருத்துக்கு நன்றி..
அதுவரை கீதை விளையாட்டு பற்றி சற்றே கோடிட்டுக்காட்டவேண்டி...
URL:http://www.gitasupersite.iitk.ac.in/
************************************
English Translation - Dr. S Sankaranarayan
2.2. The Bhagavat said -- O Arjuna ! At a critical moment, whence did this sinful act come to you which is practised by men of ignoble (low) birth and which is leading to the hell and is inglorious ?
***********************************
English Translation of Sri Abhinavagupta's Sanskrit Commentary - Dr. S Sankaranarayan
2.2 Kutah etc. To commence with, the Bhagavat exhorts Arjuna just by following the worldly (common) practice; but, in due course, He will impart knowledge. Hence He says 'practised by men of low birth'. Uttering words of rebuke such as 'unmanliness' etc., the Bhagavat causes [Arjuna] to know that he misconceives demerit as meritorious :
**********************************
அன்பர் Vajra அவர்களுக்கு..
இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ள பொழிப்புரை சுவாமி சித்பவானந்தா அவர்களுடையது.
அவர் திராவிட சிசுவா அல்லது ஆரிய சிசுவா என்று நீங்கள் வேன்டுமானால் ஆராய்ச்சி செய்துகொள்ளுங்கள்.
பகவான் அவர்களின் திருமுகத்தினின்று உதித்த இந்த கீதையை தூக்கிப்பிடிக்கவேண்டிய அவசியமென்ன என்பதை தற்கால பொழிப்புரைகளையும், சற்றே சமீபத்தில் அதாவது 75க்கு முன்பு வந்தவைகளையும் ஒப்பிட்டு பார்த்தால் உங்களுக்கு உண்மை புரியலாம்.
ஒன்றுக்கு இரண்டு புத்தகங்களை ஒப்பிட்டே இப்பதிவுகளைப் பதிகின்றேன்.
தங்களின் பார்வைக்கு.
http://i44.photobucket.com/albums/f12/poonguzhali85/cover.jpg
http://i44.photobucket.com/albums/f12/poonguzhali85/content.jpg
வருகைக்கு நன்றி desirobot அவர்களே..
வெகு நாட்களுக்கு பிறகான உங்களின் வருகை மகிழ்ச்சியளிக்கிறது..
நீங்கள் கொடுத்த சுட்டியில் சென்று பார்த்தேன்.
மாளிகையின் முகப்பு அறிமுகம் பார்த்ததுமே வயிறு புகைய ஆரம்பித்துவிட்டது.
வயிற்றெரிச்சல் அதிகமாகும் முன்பு வெளியே வந்துவிட்டேன்.
:))
Post a Comment