நாம் அனைவரும் இந்துவே...
அரசியல் திரா'விடப்'ப் பெத்தடினாக ஊசியில் அடிக்கடி ஏற்றி தமிழர்களிடத்தில் பகவத் கீதையில் சொல்லப் பட்ட கருத்துக்கள் சூத்திரனான(!?) திராவிடனுக்கில்லை ஆரிய வந்தேறி பார்ப்பனக்கூட்டம் தமிழன் மேல் திணித்தது என்று ஜல்லியடித்து நடுநடுவே அவர்களுக்கு வசதியாக ஒன்றிரண்டு வரிகளை தங்களுக்கு வசதியாக உண்மையான context ஐ மறைத்து கும்மியடிகிறது
இத்தகைய திராவிடப் பெத்தடினை அடிக்கடி தமிழர்களிடத்தில் ஏற்றிவிடுவதால் தேசிய கஞ்சாவை அவர்கள் கண்டுகொள்ளவே மாட்டேன் என்கிறார்கள் என்பது கசப்பான உண்மை.
ஆனாலும் வேலைகள் பல இருந்தாலும் நாம் சில மணித்துளிகளையாவது செலவழித்து பகவத் கீதையினை பரப்பவேண்டியது கடமையாகும்.
இந்துமதத்தினை, அதன் நோக்கத்தினை முழுதாக புரிந்துகொள்ளாத அரைகுறைகள், இந்துமதம் எனபது என்னவோ நால்வகை வருணத்திற்கும் மற்றும் பஞ்சமர் என்று திரிக்கப்பட்ட தாழ்த்தப்பட்டவர்களுக்குமானது என்ற எல்லைகளுடன் நின்றுவிடுகிறார்கள்..
ஆனால் உண்மையில் இந்து என்பவர்கள் உலகிலேயே உயர் பிறப்பாகிய, உழைத்து வாழும், அடுத்தவன் வயிற்றை அடித்துப்பிழைக்காத, தகுதியின் மொத்த இருப்பிடமான பிராமணர்கள், எந்நேரமும் ரத்த வெறியோடு வெட்டு குத்து, போர் என்று இருக்கும் ஷத்ரியர்கள், அருளை நாடாது, இவ்வுலக வாழ்க்கைக்கு பயன்படுகிற பொருளை நாடும், அப்படி ஜடப்பொருலையே நினைத்ததால், ஜடபுத்தியே வலுத்து இருக்கும் வைசியர்கள், மற்றும் அடிமைத்தொழில் ஒன்றையே செய்ய இயலும் சூத்திரர்கள், பஞ்சமர்கள், கிருத்துவர்கள், இசுலாமியர்கள், சீக்கியர்கள், புத்த, சமண மற்றும் இன்னபிற மதங்களை பின்பற்றுபவர்கள் எல்லாரும் இந்துக்களே என்று ஆணித்தரமாக கூறிச்சென்றுள்ளனர் நம் முன்னோர்கள்.
**** இல்லாத காரணத்தினால் சிலர் இதை வெளியிட/ஏற்றுக்கொள்ள மறுக்கலாம்.
ஆனால் உண்மையைச் சொல்வதுதானே நமது கடமை...
சிலர் ஈசன் என்பார், சிலர் ஈசா நபி என்பார் சிலரோ இயேசு என்பார்.
பெயரில் என்ன இருக்கிறது. நாம் அனைவரும் வணங்குவது பரம்பொருளைத்தானே...
பகவான் என்ன சொல்லியுள்ளார் என்று பார்த்தோமானால்.....
கீதையின் ஒன்பதாவது அத்யாயமான "ராஜவித்யா ராஜகுஹ்யயோகம்"ல் 23ம் பாடலில்
யேsப்யன்யதேவதா பக்தா யஜந்தே ஸ்ரத்தயாsந்விதா:தேsபி மாமேவ கௌந்தேய யஜந்த்யவிதிபூர்வகம்
வரிக்கு வரி அருஞ்சொற்ப்பொருள்
கௌந்தேய - குந்தியின் மைந்தா - அர்ஜூன!
ஸ்ரத்தயா அன்விதா - சிரத்தையோடுகூடிய
யே பக்தா - எந்த பக்தர்கள்
அன்ய தேவதா: அபி - மற்ற தேவதைகளையும்
யஜந்தே - வணங்குகிறார்களோ
தே அபி - அவர்களும்
அவிதி பூர்வகம் - விதி வழுவியர்களாய்
மாம் ஏவ - என்னையே
யஜந்தி - வணங்குகிறார்கள்.
சரி இதன் முழுமையான விளக்கப் பொருள் என்ன என்று பார்க்கலாம்.
சிரத்தையோடு கூடிய பக்தர்கள் மற்ற தேவதைகளை வணங்குங்கால், விதி வழுவியவர்களாய் என்னையே வணங்குகிறார்கள்.
விரிவாக்கம்:
சிரத்தையோடு இருத்தல் என்பது ஆஸ்தீக புத்தியுடையவராயிருத்தல் அல்லது தெய்வம் துனைபுரியும் என்ற நம்பிக்கையுடனிருத்தலாம்.
அக்ஞானத்தால் விதிவழுவிச் செய்யும் செயல் அவிதிபூர்வகம் எனப்படுகிறது.
அதாகப்பட்டது,
தெய்வம் உள்ளது, அது நமக்கு துணைபுரியும் என்ற நம்பிக்கை
இருக்கும்எந்த ஆத்திகரும் தன்னையே வணங்குவதாக கூறுகிறார் பகவான்.
பின்பற்றும் விதிகள் எதுவாய் இருந்தால் என்ன?
பொங்குபல சமயமெனும் நதிகள் எல்லாம் புகுந்து கலந்திட நிறைவாய்ப் பொங்கியோங்கும் கரைகானாத கடல் அல்லவா இறைவன்.
புண்ணிய நதி, சாக்கடை ஆகிய அனைத்தும் கடலில் ஒரே பதவியைப் பெறுகின்றன.அங்ஙனம் கடவுளைக் கருதும் மனிதர்களெல்லாம் கடவுள் மயம் ஆகின்றனர். ஆகவே கடவுளை அடையத்தகாதவர் எவருமில்லை..
ஆகவே மனிதர்கள் ஜாதி மதம் என்று வித்யாஸங்கள் பல இருந்தாலும் அனைவரும் இந்துவே.அனைவரும் வணங்குவது பகவான் கிருஷ்ணனையே.
பகவான் சொன்ன வழியில் நடக்காதவர்கள் கூறும் குற்றச்சாட்டு என்னவென்றால்..
9:11
அவஜானந்தி மாம் மூடா மானுஷீம் தனுமாச்ரிதம்பரம்
பாவம ஜானந்தோ மம பூதமஹேச்வரம்.
அதாவது...
என்னுடைய பர சொரூபத்தையும், நான் உயிர்களுக்கெல்லாம் ஈசனாய்யிருப்பதையும் அறியாதமூடர்கள், ஒரு மானுட வடிவம் எடுத்தவன் என்றெண்ணி என்னை அவமதிக்கின்றனர்.
அதாவது...
என்னுடைய பர சொரூபத்தையும், நான் உயிர்களுக்கெல்லாம் ஈசனாய்யிருப்பதையும் அறியாதமூடர்கள், ஒரு மானுட வடிவம் எடுத்தவன் என்றெண்ணி என்னை அவமதிக்கின்றனர்.
அடுத்த பாடலிலே(9:12) அவர்களது இயல்பையும் கூறுகின்றார்.அது..
வீண் ஆசையுடையவர்கள், பயன்ப்டாச் செயலாளர்கள், கோணலறிவுடையவர்கள், விவேகவில்லாதவர்கள்மயலூட்டுகின்ற ராக்ஷச அசுர இயல்புடையவர் ஆவர்.
இறைவன் என்பவன் அனைத்தையும் கடந்தவன்.அதாவது
கர்மத்தில் கட்டுப்படாதவன் வடிவத்திலும் கட்டுப்படுவதில்லை.
ஜடாகாசத்தை எப்பொருளும்சிதைப்பதில்லை.
பின்பு, அதற்கப்பாலுள்ள சிதாகாசம் சிதைவுபடுகிறது என்பது பொருந்தாது.
இன்னும் கேட்டால் இவ்வுலகில் இருக்கும் அனைத்திலும் இறைவன் இருக்கிறான்.அவனுக்கு எல்லாம் ஒன்றே..
ராமஸாமி செருப்புஸாமியால் கல்ஸாமியை அடித்துவிட்டதாக சில அறிவிலிகள் பிதற்றவும் செய்கின்றனர்.ஆனால் பகவான் அனைத்தையும் கடந்தவராயிற்றே..அவர் கருணைக்கடலல்லவா?
தலையில் நர்த்தனம் ஆடியே கொன்றாலும், காளிங்கன் கேட்டவரத்தைக் கொடுத்தவராயிற்றே..
அவர் புஷ்பத்திற்கும் செருப்புக்கும் வித்யாஸம் பார்ப்பாரா என்ன?
அதனேலேயே ராமஸாமிக்கு சொர்க்கத்தைக் கொடுத்து, மேலும் பூலோகத்திலே மானுடர் மூலமாக சந்தன அபிஷேகம் அணிவித்த கருணைக்கடலல்லவா அவர்.
பகவானே கூறிவிட்டால் அதற்கு மறுபேச்சேது.
ஆகவே பாவிகளே..மனந்திரும்புங்கள்.
உங்கள் பிரிவைச் சேர்ந்தவர்கள் ஏதேனும் சொல்வார்கள் என்ற அச்சமா?கவலைவேண்டாம்.
"பகவான் இப்படி சொல்லியிருக்கிறார், ஆகையால் நீங்களும் இந்துதான், இதை நீங்கள்
ஏற்றுக்கொள்வீர்கள் என்ற நம்பிக்கை உள்ளது.ஆனால் மதிமயக்கத்தின் காரணமாக இதை
நீங்கள் ஏற்க மறுத்தாலோ அல்லது ஏதேனும் சந்தேஹம் இருந்தால் மட்டும் பதில் கடிதம்
அனுப்பவும்".
என்று அனானி கடிதத்தை எழுதி இரண்டு மாதங்களுக்கு முன் போப் முதலான மதத் தலைவர்களுக்கு அனுப்பியுள்ளேன். அவர்கள் அனைவரும் இந்த கருத்தினை ஏற்றுக்கொண்டதாகத் தெரிகிறது.
ஒரு பதில் கடிதம் கூட கானோம்.
நீங்கள் எந்த வழியினைப் பின்பற்றினால்தான் என்ன?
புயற்காற்று அடிக்கும்போது அரசமரம் இன்னது, ஆலமரம் இன்னது என்று வித்யாஸம் கண்டுபிடிக்கமுடியாது.
அதுபோல பக்தி எனும் புயற்காற்று அடிக்கும்போது அவனிடம் ஜாதிமத பேதம் இருக்கமுடியாது.
உலகையே கொள்ளையடித்து , ஏமாற்றி, அடிமைப்படுத்திய வெள்ளைக்காரன் வழுவிய விதியைக் கொண்ட கிருத்துவம் மற்றும் அவனின் எதிரியாய் நினைக்கும் இசுலாம் போன்ற முறையை பின்பற்றாமல்,
நாகரீகமாக, நெறியோடு , மனுதர்மத்தோடு சிக்கல்கள் இன்றி சீராக வாழும் இந்திய வாழ்க்கை அமைப்பினைப் பார்த்து திருந்தவேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்.
நன்றி,
நன்றி,
22 பின்னூட்டங்கள்:
//மனுதர்மத்தோடு சிக்கல்கள் இன்றி சீராக வாழும் இந்திய வாழ்க்கை அமைப்பினைப் பார்த்து திருந்தவேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்.
நன்றி,//
:)
இப்பதிவில் சக பதிவர்கள் சிலரின் கருத்துக்கள் மற்றும் சொற்கள் அவர்களின் நடையிலேயே எடுத்தாளப்பெற்றுள்ளன.
அவர்களுக்கு எனது நன்றி.
இது கட்டாய மத மாற்றத்தில் சேருமா?
:))
நீங்க பலரது மனநிலையை "மேனிபுலேட்" பன்றாப்ல இருக்கு.
வருகைக்கு நன்றி கோவி.கண்ணன் [GK] அவர்களே..,
நான் இவ்வளவு உழைத்து, அறிவுப்பூர்வமாக எழுதியிருக்கையில், உங்களின் நகைப்பு ஏன் என்று புரியவில்லை..
:)
//நான் இவ்வளவு உழைத்து, அறிவுப்பூர்வமாக எழுதியிருக்கையில், உங்களின் நகைப்பு ஏன் என்று புரியவில்லை..//
கண்ணன் என்று பெயர் வைத்துக் கொண்டு கீதையை பற்றி படிக்கும் போது நகைக்காமால் இருக்க முடியுமா ?
ஹி ஹி அந்த வரி நகைப்புக்கு இடம் என்று நான் சொல்ல மாட்டேன்
:)))
"உலகிலேயே உயர் பிறப்பாகிய, உழைத்து வாழும், அடுத்தவன் வயிற்றை அடித்துய்பிழைக்காத, தகுதியின் மொத்த இருப்பிடமான பிராமணர்கள்"
ஸரியாக சொன்னீர்கள்! என்ன அருமையான கணிப்பு!இந்த பிராமணர்களை நன்றாகப் புரிந்து எழுதியுள்ளீர்கள்.பகவத் கீதை போன்ற புத்தகங்களைப் படித்தாலே அருவருப்பாக உள்ளது.
அதைத்தான் "இதுகள்" ஆஹா,ஓஹோ என்கிறதுகள்.கிருஷ்ணர் ஆரிய கஞ்சாவை அடிப்பாரோ?ஏனென்றால் கிருஷ்ணர் சொன்னதாக உள்ளது அனைத்தும் ஸரியான உளரலாகவே உள்ளது.
வருகைக்கு நன்றி Pot"tea" kadai அவர்களே..,
மதமாற்றம் என்பதே, ஒரு மோசடி சொல்.
//இது கட்டாய மத மாற்றத்தில் சேருமா?//
வழி(பாட்டில்)முறை மாற்றம் என்பதே சரி.
பகவானின் அருள் பார்வையில் இருந்து யாராலும் தப்ப முடியாது என்றிருக்கையில்
அவர்கள் மதம் மாறி தப்பித்து சென்றுவிட முடியுமா என்ன?
//நீங்க பலரது மனநிலையை "மேனிபுலேட்" பன்றாப்ல இருக்கு.//
அதெல்லாம் ஒன்றுமில்லை, உண்மையை மட்டுமே எடுத்துரைக்கிறேன்.
மற்றவை அவர்களின் மனப்பார்வையைப் பொருத்தது.
:)
விளக்கத்திற்கு நன்றி கோவி.கண்ணன் [GK] அவர்களே...
///கண்ணன் என்று பெயர் வைத்துக் கொண்டு கீதையை பற்றி படிக்கும் போது நகைக்காமால் இருக்க முடியுமா ?//
கீதையைப் படிப்பது நிச்சயம் உவகை தரும் செயல்தான்.
அதில் சந்தேகமில்லை...
///ஹி ஹி அந்த வரி நகைப்புக்கு இடம் என்று நான் சொல்ல மாட்டேன் //
நல்லவேளை....
பயந்திருந்தேன்...
வெளியில் சொல்லாதது எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது.
:))
//உலகையே கொள்ளையடித்து , ஏமாற்றி, அடிமைப்படுத்திய வெள்ளைக்காரன் வழுவிய விதியைக் கொண்ட கிருத்துவம் மற்றும் அவனின் எதிரியாய் நினைக்கும் இசுலாம் போன்ற முறையை பின்பற்றாமல்,
நாகரீகமாக, நெறியோடு , மனுதர்மத்தோடு சிக்கல்கள் இன்றி சீராக வாழும் இந்திய வாழ்க்கை அமைப்பினைப் பார்த்து திருந்தவேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்.
நன்றி,
//
இன்னா கும்மி இது? ஒரு மண்ணும் புரியலையே?
வருகைக்கும், பாராட்டுகளுக்கும் நன்றி இராவணன் அவர்களே..
///பகவத் கீதை போன்ற புத்தகங்களைப் படித்தாலே அருவருப்பாக உள்ளது.
//
பகவத் கீதையை சில பேர்களுக்கு சொல்லக்கூடாது என்று போட்டிருக்கிறது.
அதில் விருப்பம் இல்லாதவர்கள் என்ற பிரிவும் உண்டு.
அதனால் உங்களுக்கு அருவருக்கதக்கதாய் இருக்கலாம்.
இருப்பதிலேயே கடினம் மற்றவரை சிரிக்கச் செய்வது.
மனம் நொந்த சமயங்களில் நான் பகவத் கீதையைத்தான் விரும்பிப் படிப்பேன்.
உடனே எனக்கு சிரிப்பு வந்துவிடும். மனம் மகிழும். மற்ற உலக/லௌகீக விஷயங்கள் எனக்கு ஒரு
பொருட்டாய் இருக்காது.
வருகைக்கு நன்றி luckylook அவர்களே...
///இன்னா கும்மி இது? ஒரு மண்ணும் புரியலையே?
///
எனக்கும் புரியவில்லை.
கூகிளாண்டவரை கேட்டுப்பாருங்களேன்.
ஒருவேளை அவர் அருள் பாலிக்கக்கூடும்.
:)
"மனுதர்மத்தோடு சிக்கல்கள் இன்றி சீராக வாழும்"
இதை தேடினால் சீக்கிரம் வரம் கிடைக்கும்.
பதிவுக்கு நன்றி!
///பொங்குபல சமயமெனும் நதிகள் எல்லாம் புகுந்து கலந்திட நிறைவாய்ப் பொங்கியோங்கும் கரைகானாத கடல் அல்லவா இறைவன்.
புண்ணிய நதி, சாக்கடை ஆகிய அனைத்தும் கடலில் ஒரே பதவியைப் பெறுகின்றன.///
இயல்பாக மனித வாழ்வை வாழ்ந்தாலே நீ இறைவனை அடையலாம் என்று சொல்லியிருக்கிறார் கடவுள். ஆகவே நாங்கள் எல்லோரும் இந்துக்களே!
______
CAPital
http://1paarvai.wordpress.com/
http://1kavithai.wordpress.com/
//இருப்பதிலேயே கடினம் மற்றவரை சிரிக்கச் செய்வது.
மனம் நொந்த சமயங்களில் நான் பகவத் கீதையைத்தான் விரும்பிப் படிப்பேன்.//
அப்படியே ஒரு மாறுதலுக்காக ராமாயணம்,சிவபுராணம்,சிலப்பதிகாரம் இதையெல்லாமும் படிங்க..இன்னும் காமெடியா இருக்கும்.
பாலா
ahah:-)
வருகைக்கு நன்றி CAPitalZ அவர்களே..,
///இயல்பாக மனித வாழ்வை வாழ்ந்தாலே நீ இறைவனை அடையலாம் என்று சொல்லியிருக்கிறார் கடவுள். ஆகவே நாங்கள் எல்லோரும் இந்துக்களே!//
சரியாக சொன்னீர்கள்.
சிறு திருத்தம்.
நாம் அனைவரும் இந்துக்களே...
சரிதானே?
வருகைக்கு நன்றி பாலா அவர்களே..,
///அப்படியே ஒரு மாறுதலுக்காக ராமாயணம்,சிவபுராணம்,சிலப்பதிகாரம் இதையெல்லாமும் படிங்க..இன்னும் காமெடியா இருக்கும்.///
மாறுதலுக்காக என்ன?
அதையும் சேர்த்து படிப்பதுதானே நல்லது.
சரி எந்த ராமாயணத்தை சொன்னீர்கள்.
கம்பரையா? அல்லது வால்மீகியையா?
//ahah :-)//
ஹி... ஹி...
வருகைக்கு நன்றி இனியன் அவர்களே..
:)
//கம்பரையா? அல்லது வால்மீகியையா?//
அல்ல. வாலி எழுதிய "அவதார புருஷன்"; ராஜாஜி எழுதிய "சக்ரவர்த்தி திருமகன்"
பாலா
///அல்ல. வாலி எழுதிய "அவதார புருஷன்"; ராஜாஜி எழுதிய "சக்ரவர்த்தி திருமகன்"///
நிச்சயமாக படிக்க முயல்கிறேன்.
அறிமுகத்திற்கு நன்றி பாலா அவர்களே..
.
Post a Comment