நாம் அனைவரும் இந்துவே - 2

சென்ற நாம் அனைவரும் இந்துவே பதிவிலே கூறியிருந்ததைப் படித்துப் பார்த்த பெருமக்கள் பலர், கீதையை சொல்லியுள்ளதை பின்பற்றியே ஆகவேண்டுமா?

அல்லது வேதங்கள் மற்றும் உள்ள சாஸ்திரங்களை பின்பற்றவேண்டுமா என புத்தி தடுமாற்றமடைந்ததாக கூறியுள்ளனர்.
விதிவழுவிய முறையில் வணங்கும் இந்துக்களான, கிருத்துவர்கள், இசுலாமியர்கள் போன்றோர் கேட்ட"வேதத்தில் இப்படி சொல்லப்பட்டிருக்கிறதா?

பகவத்கீதைதான் உயரியதா?கீதையில் சொல்லிவிட்டால் நாம் எல்லாம் அதை பின்பற்ற வேண்டுமா?இதுபற்றி ஏதேனும் தெளிவான கருத்து கிடைக்குமா?வேதங்களைவிட பகவத் கீதை முக்கியமா?எதற்கு எப்படிப்பட்ட முக்கியத்துவம் தரவேண்டும்? என்று பற்பல கேள்விகளுக்கு இப்பதிவுஉபயோகப்படும் என நம்புகிறேன்.


"அனைத்து அறநூல்களினின்றும் பிழிந்தெடுக்கப்பட்ட ஒப்பற்ற சிறந்த கருப்பஞ்சாறு ஸ்ரீமத்பகவத்கீதை.எண்ணற்ற அறநெறி நூல்களின் ஒரு கருவூலம் இதுவே எனினும் மிகையன்று.கீதையை ஒருவன் நன்கு தெளிவாகப் புரிந்துகொள்வாயானேயானால் அவனுக்கு எல்லா அறநூல்களின் அறிவும் தானேவந்தமையும்.வேறு ஒரு முயற்சி தேவையில்லை."


"ஸர்வ ஸாஸ்த்ரம்யீ கீதா (பீஷ்ம - 43/2) - அனைத்து அறநூல்களையும் தன்னுள் கொண்டது கீதை என்றல்லவா ஸ்ரீமகாபாரதம் பகரும். இங்ஙனம் கூறுவதும் போதாது.ஏனெனில் அனைத்து நூல்களும் வேதங்களின்றும் தோன்றியவை; வேதங்களோ ப்ரும்மதேவனின் முகத்தினின்றும் வெளிவந்தவை. ப்ரும்மதேவனோ பகவானின் உந்தித்தாமரையிலே உதித்தவர். இவ்வாறு ஸாஸ்த்ரங்கட்கும், ஸ்ரீபகவானுக்கும் இடையே பெருத்த இடைவெளி உள்ளது.

ஆனால் கீதையோ பகவானின் திருமுகத்தாமரையினின்றும் வெளிப்போந்தது. ஆகவே இது அனைத்து சாஸ்திரங்களிலும் மேம்பட்டது எனின்மிகையாகாது.


ஸ்ரீபகவான் வேதவ்யாஸரே கூறுகிறார்---

கீதா ஸூகீதா கர்தவ்யா கிமத்யை ஸாஸ்த்ரங்க்ரஹை:யா ஸ்வம் பத்மநாபஸ்ய முகபத்மாத் விநி: ஸ்ருதா
(மஹா. பீஷ்ம. 43/1)


"கீதையை நன்கு கேட்டு, படித்து, பாடி பிறருக்குக் கூறி மனதில் தேக்கி வைத்துக்கொள்ளவேண்டும்.பிற நூல்கள் எதற்கு?ஏனெனில் இது பகவான் ஸ்ரீபத்மநாபனின் திருமுகத் தாமரையிலிருந்து வெளிவந்ததல்லவா?

கீதை கங்கையைக் காட்டிலும் சிறந்தது. சாஸ்திரங்களோ கங்கையில் நீராடுவதன் பயன் முக்தி என்கின்றன.கங்கையில் நீராடுபவன் என்னவோ முக்திபெறலாம். பிறரை கரையேற்ற இயலாது.

ஆனால் கீதையாகிய கங்கையில் மூழ்கி எழுபவன் தானும் முக்திபெற்று பிறரையும் முக்தி பெறவைக்கிறான். கங்கை பகவானின் திருவடித்தாமரையிலே தோண்றினாள்.ஆனால் கீதையோ பகவானின் திருமுகத்தாமரையினின்றும் தோன்றியது.

கங்கையோ தன்னைத் தேடிவந்து நீராடுபவனையே முக்திபெறச்செய்கிறது. ஆனால் கீதையோ வீடுதோறும் சென்று அங்குள்ளோர்க்கு முக்தி வழியைக் காட்டுகிறது. ஆகவே கீதை கங்கையைக் காட்டிலும் சிறப்புடைத்து.
கீதை காயத்ரியை விடவும் சிறந்தது. காயத்ரியை ஜபிப்பவன் முக்திபெறுகிறான். உண்மைதான்.அவன் மட்டுந்தானே?

ஆனால் கீதையைப் பாராயணம் செய்வோன் தானும் வீடுபேறு பெற்று பிறனும் வீடுபேறு பெற அருளுகிறான்.
முக்தியளிக்கும் பகவானே அவனைச் சார்ந்தவனாகும் போது முக்தியைப் பற்றிக்கூற என்ன உளது?
அவனுடைய திருவடிகளிலே கிடக்கிறது முக்தி.முக்தியெனும் சத்திரத்தையே திறந்துவைக்கிறான். பகவானைவிட கீதையே பெருமையுடைத்து என்பது சரிதான்.

பகவான் கூறுவதையே கேட்போமே...
லீதாஸ்ரயேஹம் திஷ்டாமி கீதா மே சோத்தமம் க்ருஹம்கீதாஜ்ஞாநமுபாஸ்த்ரிய த்ரிலோகத் பாலயாம்யஹம் (வாயுபுராணம்)

"கீதையை அண்டித்தானே நானே இருக்கிறேன்!அதுதான் எனது உயரிய மாளிகை. அதன் துணைகொண்டுதானே மூவுலகையும் காக்கிறேன்"


அன்பர்களே..
கீதையின் முக்கியத்துவம் புரிந்ததா?.....
நன்றி - 273005

17 பின்னூட்டங்கள்:

கோவி.கண்ணன் [GK] said...

காப்புரிமை வாங்குங்க முதலில் !
பின்னே அவுங்க கூட இப்படி சிறப்பாக விளக்கியிருக்க முடியாது போல இருக்கே !
:)


பூங்குழலி said...

வருகைக்கு நன்றி naathigan அவர்களே.

//Thamilzhan hindu illai.

hindu enbavan aryan mattum thaan. avan thaan shathriyan, shuthiran enru varnam vaithu pirithavan//

இப்பூவுலகில் பிறந்த அனைவரும் இந்து என்கிறேன்.

நீங்கள் தமிழன் இந்து அல்ல என்ற திராவிட ஜல்லியடிப்பை மறுபடிமறுபடி செய்கிறீர்களே...

உங்களுக்கே இது நியாயமாய் படுகிறதா?


பூங்குழலி said...

வருகைக்கு நன்றி கோவி.கண்ணன் [GK] அவர்களே.

நான் எங்கே காப்புரிமை வாங்குவது.
இது எனது சொந்த சிந்தனையல்லவே!

எல்லாம் பகவான் செயல். நான் வெறும் கருவி மட்டுமே.
எல்லா சிந்தனைகளும் இரவல் சிந்தனைகளே..

இவ்வுலகின் அனைத்து நெறி நூல்களும் வேதத்திலிருந்து வந்தவை.
வேதத்தில் சொல்லாதது என்று ஒன்று இல்லவே இல்லை.
அனைத்தும் வேதத்தில் உள்ளது.
வேதம் உயர்ந்ததென்று வேதமே சொல்கிறது. பிறகு மறுபேச்சேது...

அனாலும் உங்கள் அக்கரைக்கு நன்றி...

:))


பூங்குழலி said...

ம், சொல்ல மறந்துவிட்டேனே..

இதில் உள்ள தகவல்கள் எங்கே இருந்து எடுக்கப்பட்டவை என்ற செய்தி
நான் நன்றி கூறியுள்ள அந்த எண்ணிலே இருக்கிறது.
:)


Sivabalan said...

நல்ல பதிவு..

நன்றி


VSK said...

மிக அருமையான நடையில் விளக்கம்!

வாழ்த்துகள்.

[முந்தைய பதிவையும் சேர்த்தே சொல்லுகிறேன்!]

:))


பூங்குழலி said...

வருகைக்கு நன்றி சிவபாலன் அவர்களே..


பூங்குழலி said...

/மிக அருமையான நடையில் விளக்கம்!
வாழ்த்துகள்.
[முந்தைய பதிவையும் சேர்த்தே சொல்லுகிறேன்!]//

வருகைக்கும், புரிதலுக்கும் நன்றி SK அவர்களே..


பூங்குழலி said...

வருகைக்கு நன்றி நிர்மல் அவர்களே..
நம் முன்னோர்கள் நாம் சிரித்து மகிழ்வதற்காக நிறைய மெனக்கெட்டு உழைத்துள்ளனர்.
:))


பூங்குழலி said...

வருகைக்கு நன்றி மதுரா அவர்களே..
உங்களுடைய பின்னூட்டம், என் மனதில் பல்வகை நினைவுகளை சுழலச் செய்கிறது.
நம்து சமூகம் சேனம் பூட்டிய குதிரையாகவே நம்மை பயணிக்கவிரும்புகிறது.

மாற்றுப்பார்வை என்பதையே தீண்டாமையாகப் பார்க்கும் சமுகம் இது.

ஆனாலும், மற்றவர் முயற்சியில் கிடைத்த பொருளைவிட(அது மாணிக்கக் கல்லானாலும்),
தன் சுய முயற்சியில் கிடைத்த பொருளே (அது உப்புக்கல்லே ஆயினும்) மிக்க மன மகிழ்ச்சியைத் தரவல்லது.

தேடல் தொடரும்.


பூங்குழலி said...

மறுவருகைக்கு நன்றி நாத்திகன் அவர்களே..

ஆத்திகம் பலவேளைகளில் "இதைச் செய்யாதே சாமி கண்ணைக் குத்திவிடும்" என்று குழந்தைகளை பணியவைக்கும் அளவிலே உபயோகமாய் இருக்கிறது.

மானுடம் வளர்ந்தப்பின் அதையே பிடித்து தொங்கிக்கொண்டிருந்தால், அது அறிவுக்குகந்த செயல் அல்ல...

நன்றி..


bala said...

//தேடல் தொடரும்//

பூங்குழலி அம்மா,

தொடருங்க..தொடருங்க..

அதுக்கு முன்னாடி தொல்காப்பியம் காமெடி வகையைச் சேர்ந்ததா அல்லது ட்ரஜிடி வகையைச் சேர்ந்ததா என்ற ஐயத்துக்கு விடை சொன்னீங்கன்னா நல்லது.

பாலா


பூங்குழலி said...

வருகைக்கு நன்றி பாலா அவர்களே...

///அதுக்கு முன்னாடி தொல்காப்பியம் காமெடி வகையைச் சேர்ந்ததா அல்லது ட்ரஜிடி வகையைச் சேர்ந்ததா என்ற ஐயத்துக்கு விடை சொன்னீங்கன்னா நல்லது.
///


தொல்காப்பிய பதிவு உங்களிடன் பெரிய தாக்கத்தினை ஏற்படுத்தியிருக்கிறது என நினைக்கிறேன்.
:))

என்ன இப்படி கேட்டுவிட்டீர்கள்...

அன்று "வானத்தில் வெள்ளைக் காகம் பறக்கிறது பார்" என்று ஒருவன் சொல்ல, அதை மற்ற அடிபொடிகளும் வழிமொழிய, அக்கருத்து இன்று வரை கொடிகட்டிப் பறக்கிறது.

எனது நோக்கம் நான் மட்டும் தேடுவதல்ல, அனவரும் தேட/தேடும் அளவு விழிப்புணர்வு ஏற்ற வகை செய்வதே..

நான் "அக்காகம் வெள்ளை அல்ல நீல நிறம் " என்று சொன்னால் நம்பிவிடுவீர் போலுள்ளதே...
இது சரியல்ல...
நீங்களும் தேடுங்கள்.. நல்வழி பிறக்கும்..

:)

(எதற்கும் சிரிப்பான் போட்டுக்கொள்கிறேன்)


bala said...

//அன்று "வானத்தில் வெள்ளைக் காகம் பறக்கிறது பார்" என்று ஒருவன் சொல்ல, அதை மற்ற அடிபொடிகளும் வழிமொழிய//

பூங்குழலி அம்மா,

உங்களுக்கு தந்தை பெரியார் மற்றும் திராவிட கட்சிகள் மீது ஒரு மட்டமான அபிப்ராயம் இருக்கலாம்..அது சரியான கருத்தாகவும் இருக்கலாம்..
அதுக்காக இப்படி கிண்டல் செய்வது கொஞ்சம் ஒவர்.

பாலா


பூங்குழலி said...

//உங்களுக்கு தந்தை பெரியார் மற்றும் திராவிட கட்சிகள் மீது ஒரு மட்டமான அபிப்ராயம் இருக்கலாம்..அது சரியான கருத்தாகவும் இருக்கலாம்..
அதுக்காக இப்படி கிண்டல் செய்வது கொஞ்சம் ஒவர்.//

இல்லையா பின்னே..

"இந்த வெங்காயம் சொல்வதை எந்த வெங்காயமும், அப்படியே நம்பிவிட வேண்டாம்,
உன் அறிவுக்குகந்ததை செய்",

இப்படி சொல்கிற வெங்காயம் உருப்படுமா என்ன?

மற்றபடி...


//பூங்குழலி அம்மா,//

என்று மனதுக்குள் தான் படித்தேன், உடனே எனது தாயார் "கூப்பிட்டாயா?" என்று கேட்கிறார்.

என்னத்த சொல்ல...

:))

கருத்துக்கும் மறுவருகைக்கும் நன்றி பாலா அவர்களே..


பூங்குழலி said...

///பூங்குழலி, ஏன் பேரை செந்தமிழ்குழல்வாய்மொழி என மாத்தி வச்சக்கூடாது???///

வருகைக்கு நன்றி,
எனக்கு தற்போது இருக்கும் பெயரே போதும்.
:)

மற்றபடி,

செந்தமிழ்க்குழல்வாய்மொழி - பெயர் நன்றாய் இருக்கிறது.


பூங்குழலி said...

//அரைச்ச மாவை அரைக்காம சும்மா போங்கடீ//

வாருங்கள் புலிப்பாண்டி,

கேள்வி சரி,
அதென்ன போங்கடீ..

மரியாதையுடனான அவமதிப்பா?, "போங்கள் + டீ"- ஆ
அல்லது போங்கடீ என்று பன்மையிலா?

முதலாவது என்றால், இந்த ஆட்டத்திற்கு நான் வரவில்லை...
பிந்தையது என்றால், பெண்களில், யார் வேண்டுமானாலும் உங்களை, போடா என்றோ அல்லது போங்கடா என்றோ பதில் தர நீங்களே உரிமையை தந்துள்ளீர்.