நான் இந்து அல்ல!..

அன்பர்களுக்கு வணக்கம்.

கடந்த சில பதிவுகளைப்பார்த்துவிட்டு, பெரும்பான்மையான
அன்பர்கள் என்னைப்பற்றி தவறான் தகவல்களைக்
கொண்டிருக்கின்றனர் என் அறிய வருகிறேன்.

நான் சிறுவயதிலிருந்தே, என் பார்வையில், விடாது,
சந்தித்து வரும் மன உளைச்சல்களுக்கு ஒரு வடிகாலாகவும்,
தன்னிலை விளக்கமாகவும் அமையும் என நம்புகிறேன்.

காரிரு ளுள்ளக் கயவரன்ன மாந்தர்
மாரியை தாயை மழையை - பாரினில்
ஆரியப் பாவையாம் ரேணுகா தன்முகம்
மாறியென்றனர் எதுகை கெடுத்து.....



இருட்டரையில்
உள்ளதையா உலகம்
எனையும்
இந்து என்பவர்
இருக்கின்றாரே!

மாய்ந்து மாய்ந்து,
ஆயிரம்பேர் அரற்றினாலும்
பொய்யுரைகளை புகுத்தினாலும்
அல்லன அகற்றி
நல்லன நிலைநாட்ட
உண்மையை உரத்துச்சொல்ல
வேண்டியிருக்கிறது.

இன்றுவரை,
"நீ இந்துதானே?" என
வினவியவரிடமெலாம்
"இல்லை" என்றே
பதிலிருத்திருக்கிறேன்.
இனிமேலும் அப்படியே...

எனை கட்டிவைத்து
அடித்தாலும்
எட்டி உதைத்தாலும்,
கண்ணைக் கட்டி
கழுவிலேற்றினாலும்
எனது நிலைப்பாடு
"நான் இந்து அல்ல" என்பதே...

ஆம், இந்து எனது
சித்தி மகள்....
கல்லூரியில் பயில்கிறாள்....

சான்றோரே... சிந்தியுங்கள்...
படித்தோரே எனது
பதைக்கும் மனதை
புரிந்துகொள்ளுங்கள்.


கேளுங்கள் என் கதையை...
என்னதான் நான் வயதில்
மூத்தவளாயினும்...
அவளுக்கும்,
அவள் குடும்பத்திற்குமுள்ள
"பவிசு" காரணமாக
பெரும்பாலான நேரங்களில்
அவளைக்கொண்டே நான்
அறியப்பட்டிருக்கிறேன்.

சற்றே உருவ ஒற்றுமை
இருக்கிறது
என்பதற்காக
எனது தனித்தன்மையை
இழக்கவேண்டுமா என்ன?



உங்களின் நிலைப்பாட்டை, உங்களின் பதிவிலோ அல்லது
இந்த பதிவிலோ தெரியப்படுத்தலாம்.

நன்றி..

0 பின்னூட்டங்கள்: