தொல்காப்பியம் வருணபேதத்தின் ஊற்றுக்கண்ணா?

குறிப்பு : இது ஓர் எதிர்வினைப் பதிவானாலும் விவாதப் பதிவல்ல, இது ஒரு விழிப்புணர்வுப் பதிவு.
மேற்கோள்கள் போன்றவற்றில் முடிந்தமட்டும் தமிழ் சொற்களை கொடுத்துள்ளேன்.

எச்சரிக்கை: இப்பதிவில் சாதிப்பெயர்கள் வெகுவான இடங்களில் பயன்படுத்தப்பட்டுள்ளன.
உண்மையை சொல்லப்புகும் நோக்கத்தோடு மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளன. யார் மனதையும் புண்படுத்தும்
நோக்கம் கடுகளவும் இல்லை. நடுநிலைவாதிகள், அப்பாவிகள் மனதை தேற்றிக்கொண்டு இப்பதிவை படிக்க வேண்டுகிறேன்.

தொடர்பான பதிவுகள்.
http://vittudhusigappu.blogspot.com/2006/09/blog-post_16.html
http://karuppupaiyan.blogspot.com/2006/09/blog-post_18.html
http://karuppupaiyan.blogspot.com/2006/09/blog-post_20.html


வருணபேதத்தின் ஊற்றுக்கண் தொல்காப்பியம், என்று பல இடங்களில் இருந்தும் மேற்கோள் எடுத்துக்காட்டி,
தொல்காப்பியத்தில் இருந்துதான் மநுநீதி தோண்றியது என்பது போன்ற பற்பல மாயா உலகத்தைக் காட்டி,
தமிழின்மீதும் தமிழரின் மீதும் பழியைச் சுமத்தும் வகையில் ஒரு பதிவை இட்டுள்ளார் அன்பர் விசி அவர்கள்.

தமிழ்ச்சொல் இருக்கிறதா?

அவர் சொல்லிய செய்தியிலேயே/தலைப்பிலேயே அவரின் சொன்ன செய்தியின் உண்மை/தரம் பல்லை இளித்துவிட்டதாக நினைக்கிறேன்..
ஊற்றுக்கண் சரி, தொல்காப்பியம்சரி, ஆனால் வருணபேதம் என்பது தமிழ்ச் சொல்லா?
தொல்காப்பியம்தான் ஊற்றுக்கண் என்றால், வருணம், ஜாதி போன்ற சொற்களுக்கு சரியான தமிழ் சொற்கள் இருக்கிறதா என சிந்தித்துப் பாருங்கள்.


வகுப்பு மற்றும் சாதி.

அப்பதிவின் ஆரம்பம் முதல் பின்னூட்டங்களின் முடிபு வரை, ஒரு சிலரைத் தவிர, சமுகம் என்று ஒன்று இருந்தால் அதில் பல்வேறு பிரிவினைகள் இருக்கச் செய்யும் என்ற செய்தியுடன் சாதியையும் சேர்த்து நியாயப்படுத்த முயற்சித்திருக்கிறார்கள்.

அவர்களுக்கு சாதிக்கும், வகுப்பிற்கும் இடையேயான வேறுபாடு தெரியவில்லையா என்ன? அல்லது கண்ணிருந்தும் குருடராய், மூளையிருந்தும் மூடராய் கடைசி வரை இருக்க போகிறார்களா?

இங்கே பகுத்தறிவு வெங்காயம், வைக்கம் வீரர், தந்தை பெரியார். அவர்களின் கூற்றை மேற்கோள் கொடுக்க விரும்புகிறேன்.

"ஆங்கிலத்தில் "கேஸ்ட்', "கிளாஸ்' என்ற இரண்டு வார்த்தைகள் உள்ளன.
அதாவது, சாதி வகுப்பு என்று சொல்லப்படுவனவாகும்.
சாதி பிறப்பினால் உள்ளது; வகுப்பு தொழில் தன்மையினால் ஏற்படுவது.
தொழிலும், தன்மையும் யாருக்கும் ஏற்படலாம். சாதி நிலை,
அந்தந்தச் சாதியில் பிறந்தவனுக்குத்தான் உண்டு; பிறக்காதவனுக்குக் கிடையவே கிடையாது."

தொல்காப்பிய தொழில்முறை வகுப்புகள்
கைக்கோளர், தச்சர், கொல்லர், கம்மாளர், தட்டார், கன்னார், செக்கார், மருத்துவர், குயவர், வண்ணார், துன்னர், ஓவியர், பாணர், கூத்தர், நாவிதர், சங்கறுப்பர், பாகர், பறையர் என்ற வகுப்புகளை பிறப்பின் அடிப்படையில் எங்கேனும் வகுக்கப்பட்டுள்ளனரா?

தொல்காப்பியத்தில் கூறப்பட்டுள்ள அத்தனை வகை பெயர்களும் தொழில் தன்மையால் ஏற்பட்ட குறியீட்டு பெயர்களாகும். எங்காவது இந்த தொழில் செய்பவன் மற்றதொழில்களை செய்யக்கூடாது என்று தமிழில் கூறப்பட்டுள்ளதா? குயவர் முதல் மன்னன் வரை கற்றறிந்தோர் இருந்த இத்தமிழ்ச் சமுதாயத்தில், ஏதேனும் உளறல்/வசவு உச்சரிக்கும் போது மற்றவன் அதைக் கேட்டால் அவன் காதில் ஈயம் காய்ச்சி ஊற்றவேண்டும்
என்று சொல்லியிருக்கிறதா? சற்றே சிந்தித்துப் பாருங்கள்.


மநு (அ)தர்ம சாதி முறைகள்.
சரி, இப்போது மநுதர்மத்தில் என்ன சொல்லியிருக்கிறது என்று பார்ப்போம்.

விராத்ய பார்ப்பனனும் பெண்ணும் பெறும் பிள்ளை பூர்ஜ கண்டன், ஆவந்தியன், வாடதானன், புட்பதன், சைகன் என்று நாட்டுக்கேற்றவாறு பெயர்.
விராத்ய சத்ரியன் பெறும் பிள்ளை = மல்லன், நிச் விடயன், கரணகசன்
விராத்ய வைசியன் = சுதன்வா, ஆச்சாரி, காசேன், விசன்மா, மைத்திரன், சாத்தவன்.

அநுலோமர் - பிரதிலோமர்.
தம் வருணத்திற்கடுத்த, அடுத்த வருணத்துப் பெண்ணிடம் பெறும் பிள்ளைகள் அநுலோமர்.
பார்ப்பன + வைசியப் பெண் = அம்பட்டன்
பார்ப்பன ஆண் + சூத்திர பெண் = நிடாதன்/பாரசவன்
சத்ரிய + சூத்திர = உத்கிரன்.

சத்ரிய, வைசிய சூத்திரன் தம் மேல் வருணத்துப் பெண்ணை மனைவியாகக் கொண்டு பெறும் பிள்ளை - பிரதிலோமர்.

சத்ரிய + பார்ப்பன = சூதன்
வைசிய + பார்ப்பன = வைதேகன் (வைதேகி என்ற பெயருக்கு இதனுடன் தொடர்புண்டா எனத் தெரியவில்லை)
வைசிய + சத்ரிய = மாகதன்
சூத்திரன் + பார்ப்பன = சண்டாளன்.
சூத்திரன் + சத்ரிய = சாத்தா
சூத்திரன் + வைசிய = அயோகவன்

பார்ப்பன + அம்பட்ட = ஆபிடன்
பார்ப்பன + உத்கிர = ஆவிரதன்
பார்ப்பன + அயோகவப் = திக்வணன்
சூத்திரன் + நிடாத = குக்குடகன்.

அநுலோமர் உயர்வு, பிரதிலோமர் தாழ்வு
அநுலோமர் தாயின் சாதி, அவர்கானவை தாய்சாதி சமஸ்காரங்கள்.
பிரதிலோமர் சண்டாளன், சாத்தா, அயோகவன் ஆகியோர் அறப்பணி ஆற்றுதல் கூடாது.
பார்ப்பனனின் அநுலோமப் பிள்ளை வேள்வித் தவங்களால் சிறப்புப் பெறுவான்.
பார்ப்பனனின் சந்திரிய, வைசிய அநுலோமர் உபநயன உரிமையுள்ளவர், சூத்திரப் பெண்
பெறும் அநுலோமர்க்கு அவ்வுரிமை இல்லை.
பார்ப்பனன் மணம் புரியாது சூத்திரச்சியுடன் பெறும் அநுலோமர், பார்பனத்தியை மணம் புரியாது சூத்திரன் பெறும் பிள்ளை இருவருக்கும் உபநயன நற்கருமங்கள் ஆற்றும் உரிமை இல்லை.

சண்டாளச் சாதிகள்.
நிடாதன் + சூத்திர = புற்கசன்
நிடாதன் + வைதேக = ஆகிண்டிகன்
நிடாதன் + அயோகவ = மார்க்கவன் (இவன் ஆர்யவர்த்ததில் செம்படவன் எனப்படுவான்)

வைதேகன் + அம்பட்ட = வேணன்
வைதேகன் + அயோகவ = மைத்திரேயன்(குடும்பாண்டி எனவும் அழைக்கப்படுவான்)
சாத்தா + உத்கிர = சுவபாகன்.

சண்டாளன் + நிடாத = அந்தியாவசாயி

சண்டாளன் + வைதேக = பாண்டு

சண்டாளன் + புற்கவ = சோபாகன்

தஸ்யூ(திருடன்) + அயோவக = சைந்திரன்

ஆபீரன், ஆவிரதன், திக்வணன், புற்கசன், குக்குடகன், சுவபாகன், வேனன் ஆகியோர் அந்தராளர் சாதியார்.

அம்பட்டன், உக்கிரன் ஆகிய அநுலோமர், சாத்தா வைதேகன் ஆகிய பிரதிலோமர்
அனைவரும் பாகியர்(தீண்டத்தகாதவர்) அநுலோமர், பிரதிலோமர் கூடிப் பெறுவசரும் அவ்வாறே.

சண்டாளர் தொழில்:

இழிபிறப்பாளன் ஒருவன் பார்ப்பனப் பணியைப் புரியும் போதும் அவன் இழிபிறப்பாளன் தான்,
இழிதொழில் யாது புரிந்தாலும் பார்ப்பனன் எப்போதும் இழிபிறப்பாளன் ஆகான். அவன்
பிறப்பு உயர்பிறப்புதான் பிரம்மனின் ஆணை அவ்வாறு.

என்று பிறப்பின் அடிப்படையில் சாதியை சொல்லியுள்ளார்கள். இது மட்டுமா,
இன்னும் சண்டாளர் குணம், சண்டாளர் வாழ்க்கை, மொழி, நாடு போன்ற சமத்துவ கொள்கைகள் மநுவில் இருக்கின்றன.


தமிழகத்தில் இளவரசரைத் தாக்க வரும் மத யானையை வேலெறிந்து, இளவரசரைக் காப்பாற்றும் ஒருவன், கைக்கோளப் படையில் சேர வாய்ப்புண்டு. அதில் பணிபுரிவதால் கைக்கோளராவான். இதே போன்று முத்திரையர் என்ற படைப்பிரிவும் உண்டு
ஆனால் மநு அப்படியா சொல்கிறது.


தொல்காப்பியத்திலிருந்து மநு தழுவப்பட்டிருந்த்தால்...
இந்த பதிணென் வகுப்புக்களுக்கு ஈடாக ஏதேனும் சாதிப்பெயரை எடுத்துக்கூறுங்களேன்.

பொய்யும் புரட்டும்:
இத்தகைய புரட்டுக்கள் ஒன்றும் தமிழர்க்குப் புதிதல்ல
இந்த பதிணென் வகுப்புகளை பலபட்டடை சாதிகள் என்று அதற்கு பொருளும் கொடுத்து, பொய்யும் புரட்டும் பனவனுக் குரிய என்பதை மெய்யாக்கும் விதமாக நெடுங்காலந்தொட்டே இத்தகைய திரித்தல் வேலைகளை (சமிபத்திய சீனிவாச ***** காலத்தில்கூட) செய்துகொண்டு வருகின்றனர்.

இங்கே அன்பர் விசி அவர்களின் பதிவில் செல்வகுமார் என்ற அன்பர் இட்ட
பின்னூட்டக் கருத்தையும் மேற்கோள் காட்ட விரும்புகிறேன்.

//வி.சி அவர்களே,
கீழ்க்காணும் கருத்தை நான் ஓரிடத்தில் எழுதியுள்ளேன். பேர் எழுதாத ஒருவர் ஆங்கிலத்தில்
உங்களுக்கு எழுதியுள்ளதைப் பாருங்கள். அவருடைய கூற்றுதான் உண்மைக்கு நெருக்கமாக இருப்பது.
தொல்காப்பியத்தில் இடைச்செருகல்கள் உள்ளன என்பது மிகத்தெளிவாக உணரப்படுவது (இரா. இளங்குமரன் அவர்கள் தெளிவாக ஒரு சிலவற்றை எடுத்துக் காடியுள்ளார்.). தொல்காப்பியத்திலே உயிர்களின் பகுப்பு என்னும் பகுதி மிகச் சிறப்பானது. அதிலேயே இடைச்செருகல்
இருப்பதை இரா.இளங்குமரன் ஐயம் திரிபற விளக்கியுள்ளார். அவர்போல் ஆழமான அறிவு இல்லாதவரும் மிக எளிதாக இடைச்செருகல்களை அறியலாம். தொல்காப்பியம் உங்களிடம் இருந்தால்
நூற்பாக்கள் 571 முதல் 613 வரை படித்துப் பாருங்கள். அவைகளில் உயிர்ப்பிரிவுகள், விலங்குகளில் ஆண் பெண் பெயர்கள் பற்றியெல்லாம் கூறிவந்தவர், திடீர் என்று 614-615 ஆம் நூற்பாக்களில் அந்தணர்க்குரியன, அரசர்க்குரியன என்கிறார். இன்னும் நூற்பா 631 வரையிலும்
சில தொழிற்குலங்களுக்கு உண்டான சில செய்திகளைக் கூறுகின்றார். பின்னர் திடீர் என்று மீண்டும் 630 ஆம் நூற்பாவில் புறக்காழெனவே புல்லென்ப என்றும் 632 ஆம் நூற்பாவில் தோடே மடலே
என்று புல் வகையின் உறுப்புகள் பற்றியும் மர வகை உறுப்புகள் பற்றியும் கூறி 635 ஆம் நூற்பாவில் அப்பகுதியை முடிக்கின்றார். 615-629 முடிய உள்ளன இடைச்செருகல்கள் என்பன தெள்ளத்தெளிவாக
உணரலாம் (மொழி நடையும், கருத்துக்கள் அமைப்பும் முறையின்றி இருப்பதும் உணரலாம்). தமிழர்களிடையே தொழில்வழி இனங்களும் குலங்களும் இருந்திருக்க வேண்டும், ஆனால், பிறப்படிப்படையில் சாதிகளும், அவைகளுக்கிடையே ஏற்றத்தாழ்வுகளும் இருந்ததில்லை
என்பது நான் புரிந்து வைத்துள்ளது. மாற்றுக் கருத்துக்கள் வலுவாக இருந்தால் என் கருத்துக்களை மாற்றிக் கொள்வேன். இடைச்செருகலாக உள்ள தொல்காப்பிய நூற்பாக்களிலும் (இவை 9-10 ஆம் நூற்றாண்டினதாக இருக்கலாம் என்று படித்த நினைவு) பிறப்படிப்படையில்
சாதிகள் பற்றிக் கூறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மனு நீதி நூலையும்
பிற பல ஸ்ம்ருதி நூல்களையும் படித்துப்பாருங்கள், பின்னர் அது போல தமிழில் ஏதேனும் நூல்கள் உள்ளனவா என்று காட்டுங்கள. ஊற்றுகண் தொல்காப்பியமா? இல்லை என்பதை ஊன்றிப் படித்தீர்களானால் உணரலாம். இடைச்செருகல் நூற்பாக்களைக் கொண்டு உண்மையைத் திரிக்காதீர்கள்.
C.R.Selvakumar //


இத்தகைய திரித்தல் செயல்களைக் கண்டு, அயர்ச்சியடையாமல் ,
உண்மைகளை உலகுக்கு தெரிவிப்பது நம் கடமையாகும்.

"இருட்டினில் வாழும் இதயங்களே, கொஞ்சம் வெளிச்சத்தில் வாருங்கள்."
நன்றி,

22 பின்னூட்டங்கள்:

பொன்ஸ்~~Poorna said...

//பொய்யும் புரட்டும் பனவனுக் குரிய//
பனவன் = அப்டீன்னா என்னங்க?


nayanan said...

தொலகாப்பியத்தை சிறுமைப் படுத்தி தம் சிற்றறிவோடு ஆகாகாரம் போட்டு கூத்தடிக்கும் பழைய, மிகப் பழைய பாணியாலான எழுத்துக்கள் அவை.

இம் மேற்கோள்களுக்கு, தாளம் போடும் விரல்கள் என்றாவது தொல்காப்பியத்தில் ஒரு நாலு பக்கங்களை உருப்படியாக படித்திருப்பார்களா என்பது அய்யம்.

கம்பராமாயணம் என்பது ஒரு கடல் போன்ற இலக்கியம். ஆனால் அதில் "அண்ணலும் நோக்கினான் அவளும் நோக்கிணாள்" என்ற ஒற்றை வரியை வைத்துக் கொண்டே கம்பராமாயண வித்தகர்கள் போல் எழுதுவதைப் போன்றது தொல்காப்பியத்தின் மேல் ஆன விமர்சனம்.

சரியாக சொல்லப்போனால்,
உரித்த தேங்காயை உடைக்க முடியாமல்,
உருட்டிக் கொண்டே திரிபவர்கள் அதன் மேல் இருக்கும் ஒரு நாறை பிடுங்கிக் கொண்டு வந்து கூத்தாட்டம் போடுவது போன்றது அது.

நாலு வரி படித்த உடனே குதிக்கும் குறைமதிகளுக்கு ஒன்றும் சொல்லிப் புரியப் போவதிவில்லை.


1) தொல்காப்பியம் என்பது ஒரு இலக்கண நூல்! அப்போதைய வாழ்வியல், மொழியி
ியல், போன்றவற்றை வரைந்து வைத்த நூல
்தொல்காப்பியம்! அதனால் தான் அது இலக்கண நூல். மநுநீதி படித்தவர்கள், அவர்கள் காட்டியிருக்கும் மேற்கோள்களை தூசி உதைப்பது போல உதைத்து விட்டெறிவார்களே தவிர, தொல்காப்பியத்தை வருண நூல் என்று எண்ணக் கூட மாட்டார்கள்.

Simply, it is documentation of facts!

ஆனால், வாழ்வியலைத் தோற்றுவித்தது யார்?
எது?

2) தொல்காப்பியம்தான் சாதீய ஊற்றுக்கண்
என்றால், மகாபாரதத்தில் காணக் கிடக்கும்
சாதிய வருண வேறுபாடுகளுக்கு எது காரணம்?

மகாபாரதக் காலத்தையும் முந்தைய நூல் தொல்காப்பியம் என்றால் நக்கலடிக்கவேண்டியது! ஆனால் தமக்கு
உகப்பு எனும்போது நாவை மாற்றிக் கொள்வது.

தொல்காப்பியத்தை அரைகுறைகளோடு நெருங்கக் கூட முடியாது. அதனால் அதன் புகழும் தொன்மையும் எதுவும் கெட்டுவிடாது.
ஏதோ உளறி விட்டுப் போகட்டும் என்று விட்டு விடுவது நல்லது.

அன்புடன்
நாக.இளங்கோவன்


doondu said...

நல்ல பதிவு.


அருள் குமார் said...

நல்ல விளக்கம்.

எங்கே போயிருந்தீங்க இவ்வளவு நாளா?


பூங்குழலி said...

வருகைக்கு நன்றி பொன்ஸ் அவர்களே...

பனவன் என்றால் பார்ப்பனன் என்று பொருள் சொல்கிறது இப்பக்கம்.

நன்றி,
பூங்குழலி.


Muthu said...

தமிழ் மரபுன்னு ஒரு ஒரு மரபே இல்லைன்னு சொன்னாங்க.எல்லாரும் சம்ஸ்கிருதத்திற்கு ஜால்ரா தட்டணும்னு சொன்னாங்க.இப்ப தமிழிலும் சாதி இருக்குன்றாங்க.. என்ன மாயமோ?முடிவா என்ன சொல்றாங்கன்னு கேட்டீங்களா?


பூங்குழலி said...

வருகைக்கு நன்றி tamilreber , nayanan, Doondu & அருள் குமார் அவர்களே,

கருத்துக்கு நன்றி nayanan அவர்களே..
உன்மையை சொல்லப்போனால் நான் கூட தொல்காப்பியத்தை எழுத்து சொல் போன்ற இலக்கண தொடர்புடைய சில பகுதிகளையே படித்திருக்கிறேன்.

அவர்கள் செய்கையினால் மேலும் கொஞ்சம் படிக்க முடிந்தது,
அவர்களுக்கு இதற்காக நன்றி சொல்லவேண்டும்


தருமி said...

ரொம்ப நாளாச்சே..எங்கே போயிருந்தீங்க இவ்வளவு நாளா?


குமரன் (Kumaran) said...

வெகு நாட்களுக்குப் பின் மீண்டும் வந்த பூங்குழலியே வருக வருக.


பூங்குழலி said...

வருகைக்கு நன்றி முத்து அவர்களே...

//தமிழ் மரபுன்னு ஒரு ஒரு மரபே இல்லைன்னு சொன்னாங்க.எல்லாரும் சம்ஸ்கிருதத்திற்கு ஜால்ரா தட்டணும்னு சொன்னாங்க.இப்ப தமிழிலும் சாதி இருக்குன்றாங்க.. என்ன மாயமோ?முடிவா என்ன சொல்றாங்கன்னு கேட்டீங்களா?//


இதற்கு நேர்மையான பதில் கிடைக்குமா எனத் தெரியவில்லை..
வேண்டுமானால் "மநு என்பவர் வேதம் படித்தவர் அல்ல.
அவர் ஒரு மருத்துவர், உண்மையை சொல்லப்போனால் அவர் ஒரு போலி மருத்துவர்.ஏனென்றால் படுக்கையில் 'உச்சா' போகும் சிறுவயதுப் பழக்கம் அவருக்கு சாகும் வரை இருந்தது
". என்பது போன்ற பதில்கள் வேண்டுமானால் வரக்கூடும். :)


பூங்குழலி said...

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி Desirobot அவர்களே....


வருகைக்கும், குசல விசாரிப்புக்கும் நன்றி தருமி,குமரன் மற்றும் அருள் குமார் அவர்களே..


fhygfhghg said...

சம்மந்தப்பட்ட பதிவில், புரட்டல்களைப் புரட்டப் போகிறேன்னு ஒரே காமெடி. Class-க்கும் Caste-க்கும் வித்தியாசம் தெரியாத அம்மிக்கள், ஒரு கோடி திம்மிக்களின் அறிவை ஒருசேரப் பெற்றிருக்கிறார்களாமே?

Louis Dumont(லூயி டியூமோ) என்ற சமூகவியல் அறிஞர் இதற்காக ஒரு பெரிய புத்தகமே எழுதியிருக்கிறார். அதாவது, Caste-க்கும் Class-க்கும் உள்ள முக்கியமான வித்தியாசம் என்னவென்றால் - Hierarchy, immobility & inbreeding. (அந்தப் புத்தகத்தின் பெயரே Homo Hierarchicus)

இந்த அடிப்படைகள்தான் ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக ஆடிய சாதியின் கோரதாண்டவங்கள். இவற்றின் அடிப்படையில், எந்த சாதி எந்த உணவு உண்ணவேண்டும்,எந்த வழியில் நடக்க வேண்டும் என்பது முதற்கொண்டு எல்லா வக்கிரங்களும்......வந்தேறி ருத்ர தாண்டவங்களும்.....

இவை ஒருபுறம் இருக்க,

அந்தப் பதிவிலே கொடுக்கப் பட்டிருந்த இதைப் படித்தீர்களா?

பொய்யும் வழுவும் தோன்றிய பின்னர்
ஐயர் யாத்தனர் கரணம் என்ப. 4

'பொய்மையும் குற்றமும் தோன்றிய பின்னர் அந்தணர் (அல்லது பெரியோர்) விதிமுறைகளுடன் கூடிய திருமணத்தை உருவாக்கினர் என்று சொல்வார்கள்'

அதான் "ஐயர் யாத்தனர்"னு தொல்காப்பியமே சொல்லிடுச்சே, அப்புறம் எந்த மூஞ்ச வெச்சிகிட்டு பனவு அடிக்கிறார்களோ தெரியவில்லை.

பொய்மையும் குற்றமும் தோன்றிய பின்னர் - அதாவது, "சூத்திரன் கருணாநிதியின் ஆட்சியில்"போன்ற ஒரு காலகட்டத்தில் என்பதை நான் சொல்லவும் வேண்டுமா?


Sivabalan said...

நல்ல பதிவு.

நல்ல விளக்கம்.


குமரன் (Kumaran) said...

//பொய்யும் வழுவும் தோன்றிய பின்னர்
ஐயர் யாத்தனர் கரணம் என்ப. 4

'பொய்மையும் குற்றமும் தோன்றிய பின்னர் அந்தணர் (அல்லது பெரியோர்) விதிமுறைகளுடன் கூடிய திருமணத்தை உருவாக்கினர் என்று சொல்வார்கள்'

அதான் "ஐயர் யாத்தனர்"னு தொல்காப்பியமே சொல்லிடுச்சே, அப்புறம் எந்த மூஞ்ச வெச்சிகிட்டு பனவு அடிக்கிறார்களோ தெரியவில்லை.
//

ஐயர் என்பதும் அந்தணர் என்பதும் இந்தக் காலத்தில் உள்ள பொருள் போல் தொல்காப்பிய/திருக்குறள்/ சங்ககாலத்திலும் இருந்ததா? அப்படியென்றால் ஐயன் திருவள்ளுவன் என்கிறார்களே. அது திருவள்ளுவர் ஒரு பிராமணர் என்ற பொருளிலா? ஐயனுக்கும் ஐயருக்கும் வேறுபாடு உண்டா? திருக்குறளிலும் ஐயர், அந்தணர் என்று வருகிற இடங்களில் எல்லாம் பிராமணர் என்று பொருள் கொள்ளலாமா?

பூங்குழலி. உங்கள் வலைப்பூவின் தலைப்புல சொல்லியிருக்கீங்களே - குழப்பம் - ஒன்றுமே புரியலை உலகத்துல - அது மிகச் சரி தான். எல்லாம் ஒரே குழப்பமா தான் இருக்கு. :-)


கோவி.கண்ணன் [GK] said...

கலக்கல் !

யார் எத்தனை முறை விளக்கினாலும், ஒன்றுமே தெரியாதாது போன்று அர்தப்பழசான வாதங்கள் புதியவர்களை வைத்து தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.

இருக்கட்டுமே ! ஆதங்கத்தின் மறுபிறப்பு எப்போதும் இருக்கும் வேறுவடிவங்களில். அதை தமிழர்கள் எப்போதும் வென்றே வந்திருக்கிறார்கள்!


பூங்குழலி said...

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி வழிப்போக்கன் அவர்களே..


பூங்குழலி said...

வருகைக்கு நன்றி சிவபாலன் அவர்களே..


பூங்குழலி said...

//பொய்யும் வழுவும் தோன்றிய பின்னர்
ஐயர் யாத்தனர் கரணம் என்ப. 4

'பொய்மையும் குற்றமும் தோன்றிய பின்னர் அந்தணர் (அல்லது பெரியோர்) விதிமுறைகளுடன் கூடிய திருமணத்தை உருவாக்கினர் என்று

சொல்வார்கள்'

அதான் "ஐயர் யாத்தனர்"னு தொல்காப்பியமே சொல்லிடுச்சே, அப்புறம் எந்த மூஞ்ச வெச்சிகிட்டு பனவு அடிக்கிறார்களோ தெரியவில்லை.
//

////ஐயர் என்பதும் அந்தணர் என்பதும் இந்தக் காலத்தில் உள்ள பொருள் போல் தொல்காப்பிய/திருக்குறள்/ சங்ககாலத்திலும் இருந்ததா?

அப்படியென்றால் ஐயன் திருவள்ளுவன் என்கிறார்களே. அது திருவள்ளுவர் ஒரு பிராமணர் என்ற பொருளிலா? ஐயனுக்கும் ஐயருக்கும்

வேறுபாடு உண்டா? திருக்குறளிலும் ஐயர், அந்தணர் என்று வருகிற இடங்களில் எல்லாம் பிராமணர் என்று பொருள் கொள்ளலாமா?

பூங்குழலி. உங்கள் வலைப்பூவின் தலைப்புல சொல்லியிருக்கீங்களே - குழப்பம் - ஒன்றுமே புரியலை உலகத்துல - அது மிகச் சரி தான்.

எல்லாம் ஒரே குழப்பமா தான் இருக்கு. :-) ////



குமரன்,
உங்களின் வினாவை அறிவினா என்றே எடுத்துக்கொள்கிறேன்.
எனது புரிதலை தரம்பார்த்து மதிப்பெண் போடவும்.

இந்த அந்தணர் என்ற சொல் மிகவும் குழப்பமான பொருளையே தற்காலத்தில் தருகிறது. அய்யா, அய்யர் போன்ற சொற்கள் உயர்ந்த/சான்றோர் எனற பொருளில் புழங்கியது.

தற்போது கூட சில வட்டாரங்களில் தந்தையை அய்யா என்றும், தாத்தாவை(அப்பாவின் அப்பா) அப்பா என்றும் விளிக்கும் வழமை உண்டு.

இந்த அந்தணர் என்பவர் -கற்றோர்,தனக்கென குடும்பம் இல்லாதவர், இரந்துண்பவர், தனக்கென சொத்து சேர்த்துக்கொள்ளாதவர், தான்
மட்டும் வீடுபேறடையவேண்டும் என்று சுயநலமாய் இல்லாமல் தன்னைச் சுற்றியுள்ள சமுதாயத்திற்கும் நல்வழி காட்டுபவர்.முக்கியமாய்
அடுத்தவரை ஏய்த்துப் பிழைக்காதவர்.

இத்தகையவர்களுக்கு சமூகம் மிக மதிப்பளித்தது.ஆகவே இந்த அந்தணர் என்ற தகுதியை அடைய பலருக்கும் விருப்பமிருந்தது.

இதில் பறையர், பார்ப்பனர்,சித்தர்கள், சமண முனிவர் போன்ற பலரும் இத்தகைய தகுதியுடையோராய் இருந்துவந்துள்ளனர்.

ஆனால் ஆதிக்க சக்தியாய் இருந்த ஒரு குழு அது தனக்கே உரியதென திடீரென்று சொந்தம் கொண்டாடியது, அன்று வரை இருந்த மற்றவர்களுக்கும் தனது அடையாளங்களை கொடுத்தது.

அடையாளம் ஏற்க மறுத்தோர் அதோகதி...

சமுதாயத்தில் எதிர்ப்பு வராமல் இருக்க நற்காரியம் செய்ய வேண்டியிருந்தது, அவரவர் மயக்க தேவைக்கு தகுந்தார்ப்போல் வழிவகை

செய்யப்பட்டது, சிலருக்கு பழைய சோறை பிழிந்து அதில் போட்டிக்கறியுடன் குழப்பியடித்த உணவு அதைக்கொடுத்தது, சிலருக்கு கள் ஊறிய அப்பமும், தேங்காய்ப்பாலும் போதுமாய் இருந்தது.

யார் ஆண்டால் என்ன நாம்தானே ராஜகுரு. அதனால் கற்றோரே அந்தணர் என்பதால் கற்க முடிந்தவரே ஆக முடிந்தது. மீதி நாம் அனைவரும் அறிந்தது.

சில அந்தணர்கள் பார்ப்பனர்.
எல்லா பார்ப்பனரும் அந்தணர் அல்ல...

நான் தேறி விட்டேனா?
நன்றி.


பூங்குழலி said...

வருகைக்கு நன்றி கோவி.கண்ணன் அவர்களே..

// அதை தமிழர்கள் எப்போதும் வென்றே வந்திருக்கிறார்கள்!//
உண்மை,
தற்கால புரட்டுகளை, அயராமல், நிச்சயமாய் நாம் வென்றாகவேன்டும்.
நன்றி.


பூங்குழலி said...

வருகைக்கு நன்றி தமாஷ் பாண்டி.
என்ன கணகாலம் நம் பதிவுப்பக்கம் வருவதில்லை போல...

அடிதடியெல்லாம் ஒன்றுமில்லை.
உடல் முழுதும் தீரா வியாதி பிடித்தவன், அடுத்தவனைப் பார்த்து உன் உடலில் தேமலைப்பார் என்று மட்டையடி அடிக்கும்போது நாம் பதில்சொல்ல வேண்டியதாகிறது.


அசுரன் said...

//"இருட்டினில் வாழும் இதயங்களே, கொஞ்சம் வெளிச்சத்தில் வாருங்கள்."
நன்றி,//



நன்றி.... நாங்கள் உங்களுக்கு சொல்ல விரும்புகிறோம்,

வாழ்த்துக்கள்

அசுரன்


பூங்குழலி said...

வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி அசுரன் அவர்களே..