நாம் அனைவரும் இந்துவே தொடர் தொடர்பாக...

அன்பர்களே!..

அன்பர் ஹரிஹரன் அவர்களின் பதிவைப் பார்க்கும்போது, அவர் கூறியுள்ள கருத்துகளில் சில ஏற்புடையவனாக உள்ளன. தீராத விளையாட்டுப் பிள்ளையாய் இருக்கும்போது, கீதையைப் படித்தால், நம் பகவான் கூறும் சில கருத்துக்கள் நமக்கு புரியாமற் போகலாம்.

ஆகையால் கீதை என்பது "அனைவருக்கும் அல்ல". அது "வயது வந்தோர்க்கு மட்டும்" என்பது போல குடும்பிகள்/மனமுதிர்ந்தவர்(முறிந்தவர் அல்ல)/குறிப்பிட்ட வயது வந்தவர்க்ளுக்கானது அல்லது சாமியார்களுக்கானது என தெளிந்தேன்.

ஏற்கனவே, "திராவிடர்களும் ஆரியர்களே", "பகவானின் தன்முரண்பாடு" போன்ற பதிவுகளை எழுதி சேமித்து வைத்திருந்தாலும், அன்பர் ஹரிஹரன் அவர்கள் கூறியுள்ள கருத்துக்கள் சரியென இருத்தலாலும், இப்பதிவுகளை மேற்கொண்டு வெளியிடலாமா என்ற மனக்குழப்பம் ஏற்பட்டுள்ளது.

நம்மில் ஒவ்வொருவருக்கும் தற்போதைய உருப்படியானவை/முக்கியத்துவமானவை என்ற பல்வேறு கோணங்கள் இருக்கும். அதில் இந்த கீதை அவ்வளவு முக்கியத்துவம் இல்லாததாய் இருக்கலாம்.

ஆகவே,
இங்களின் மேலான கருத்துக்களை சார்ந்து, நாம் அனைவரும் இந்துவே தொடரின் தொடர்ச்சி இருக்கும் என தெரிவித்துக்கொள்கிறேன்.

ஆதரவுக்கு நன்றி..

5 பின்னூட்டங்கள்:

Hariharan # 03985177737685368452 said...

//ஆகையால் கீதை என்பது "அனைவருக்கும் அல்ல". அது "வயது வந்தோர்க்கு மட்டும்" என்பது போல குடும்பிகள்/மனமுதிர்ந்தவர்(முறிந்தவர் அல்ல)/குறிப்பிட்ட வயது வந்தவர்க்ளுக்கானது அல்லது சாமியார்களுக்கானது என தெளிந்தேன்.//

அடடா! அடடா! என்ன தெளிவு! :-))


பூங்குழலி said...

வருகைக்கு நன்றி Hariharan # 26491540 அவர்களே...


//அடடா! அடடா! என்ன தெளிவு! :-)) //

எல்லாம் தாங்கள் காட்டிய பாதை..
:)


பூங்குழலி said...

பதிவில் ஹரிஹரன் என்று பெயர் திருத்தம் செய்யப்பட்டுள்ளது..


Hariharan # 03985177737685368452 said...

பூங்குழலி,

நான் உணர்ந்த உண்மையை உண்மையாகப் பதிந்ததைப் படித்த நீங்களும் ஆமாம் அதில் இருப்பது உண்மை என்ற உண்மையைச் உளமாரச் சொல்லி இப்பதிவிட,
உண்மையாகவே இங்கு
உங்களையும் என்னையும் தவிர்த்து வழக்கமாய் உங்கள் பதிவில் பின்னூட்டமிடுவோர் வராமலே தவிர்த்துவிட்டார்கள்.

என்ன ஆகப்போகிறது உங்களின் அனைவரும் இந்துவே தொடர் தொடர்ச்சியாகத் தொடர்வது?

உங்களுக்குப் பின்னூட்டம் பிச்சுக்கிட்டு போகணும், ஹிட் கவுண்டர் எகிறணும் என்கிற ஆசையே இல்லையா?

ஹரிஹரனின் உலகங்களில் காணக்கிடைப்பது அண்டப்புளுகுன்னு ஒரு பதிவைப் போடுங்க... உங்களுக்கு உடனடியாக பின்நவீனத்துவ, முற்போக்கு சிந்தனையாளர், பரந்த பகுத்தறிவாளர்னு பல பட்டங்களை வந்து சேர்ந்திருக்குமே! எல்லாத்தையும் ஒரு உண்மைக்காக இழந்துட்டீங்களே பூங்குழலி! :-((


பூங்குழலி said...

வணக்கம் Hariharan # 26491540 அவர்களே..

///நான் உணர்ந்த உண்மையை உண்மையாகப் பதிந்ததைப் படித்த நீங்களும் ஆமாம் அதில் இருப்பது உண்மை என்ற உண்மையைச் உளமாரச் சொல்லி இப்பதிவிட,
உண்மையாகவே இங்கு
உங்களையும் என்னையும் தவிர்த்து வழக்கமாய் உங்கள் பதிவில் பின்னூட்டமிடுவோர் வராமலே தவிர்த்துவிட்டார்கள்.

///


பார்த்தீர்களா....

சந்தடி சாக்கில் நாம் இருவரும் உண்மையைச் சொல்கிறோம் என்று சொல்லிவிட்டீர்கள்.


//என்ன ஆகப்போகிறது உங்களின் அனைவரும் இந்துவே தொடர் தொடர்ச்சியாகத் தொடர்வது?//

தொடர் பற்றிய கவலையே வேண்டாம்..

நம்மை என்ன வெற்றிலை பாக்கு வைத்தா அழைத்தார்கள் பதிவுலகிற்கு..

அதுபோல நமக்கு நாமே திட்டத்தின் படி..

"வெளியிட அல்லாமல் என்ற குறிப்புடனும், தனிமயில்களிலும், பதிவைத் தொடரக் கெஞ்சிய கோடானுகோடி அன்பு உள்ளங்களுக்கு நன்றி கூறிக்கொண்டு இத்தொடரை தொடர்கிறேன்.."

என்று சொல்லி போய்க்கொண்டே இருக்க வேண்டியதுதானே..

இதற்கெல்லாம் கவலைப்பட்டுக்கொண்டு..

//ஹிட் கவுண்டர் எகிறணும்

கவுண்டர் மட்டுமல்ல மற்றவர்களும் எகிறலாம்..
இதிலென்ன வேறுபாடு...



//ஹரிஹரனின் உலகங்களில் காணக்கிடைப்பது அண்டப்புளுகுன்னு ஒரு பதிவைப் போடுங்க... உங்களுக்கு உடனடியாக பின்நவீனத்துவ, முற்போக்கு சிந்தனையாளர், பரந்த பகுத்தறிவாளர்னு பல பட்டங்களை வந்து சேர்ந்திருக்குமே!//

சமிபத்தில்தான் குற்றம் கண்டுபிடித்து பெயர் வாங்கினேன்..
அதற்குள்ளாகவா..

சற்று பொறுமையாக போடலாம் என்றிருக்கிறேன்.

அதற்கு முன் உங்களைப் போன்ற பெரியோர்களிடம் பெயர் வாங்கிக்கொள்ளலாம் என்ற நப்பாசைதான்...
வேறொன்றுமில்லை..
ஆசை யாரை விட்டது..

ஹி ஹி (ஆகா "ஹ" வந்துவிட்டது.)