மதுமிதா அவர்களின் ஆய்விற்காக...

வலைப்பதிவர் பெயர்: பூங்குழலி

வலைப்பூ பெயர் : குழப்பம்

உரல் : http://kuzhappam.blogspot.com/

ஊர்: புதுச்சேரி மற்றும் சென்னை.

நாடு: இந்தியக் குடியரசு

வலைப்பூ அறிமுகம் செய்தவர்:
தான் தோன்றி தனமாய் வலைமேய்ந்து கொண்டிருந்தபோது, எதேச்சையாய் கண்ணில்பட்டது.... நம்மிடையே பெரிய அளவிலே பேசப்பட்ட கற்பு விவகாரம், அதற்காக தனி பதிவு பதியப்போய், தமிழ்மணம் அறிமுகமாகி வெகுவிரைவிலே தமிழ்மண விவாதங்களைக் கண்டவுடன், தற்போதைய முக்கியத்தேவை எதுவெனக் குழம்பி குவியம் மாறி, அலையில் அடித்துச் செல்லப்பட்டு....ம்ம்...
வலைப்பூ அமைப்பு, அதன் தொழில்நுட்பம் மற்றும் நல் அறிமுகம் கொடுத்தவர்கள் என்று பார்த்தால் முத்து(தமிழினி), குமரன், இராகவன் மற்றும் முத்துக்குமரன் ஆகியோரை இங்கே குறிப்பிட விரும்புகிறேன்.

முதல் பதிவு ஆரம்பித்த நாள்,வருடம் :

நவம்பர் திங்கள் 2005

இது எத்தனையாவது பதிவு: 21

இப்பதிவின் உரல்: http://kuzhappam.blogspot.com/2006/05/blog-post.html

வலைப்பூ ஏன் ஆரம்பித்தீர்கள்:
புதிதாய் ஒன்றைக் கண்டுபிடித்த விஞ்ஞானி, வரம் வாங்கிய பூசாரி, ஒலிவாங்கி (அதாங்க மைக்) கிடைத்த அரசியல்வாதி ஆகியோர்போல் தனக்கென ஒரு கருத்து ஏற்பட்டு அதைக்கேட்க ஆளில்லாதபோழ்து வசமாய்க் கிடைத்தது வலைப்பூ.
எத்தனை பேர் விசனப்பட்டார்களோ...

சந்தித்த அனுபவங்கள்:
அடு(ட)க்குமுறை நிறைந்த நமது சமுதாயத்தில், இவளென்ன சொல்வது, நாமென்ன கேட்பது என்றல்லாமல் மதித்து பதிலாற்றக்கூடியவர்கள் உள்ளாரென கண்டறிந்தது, இது பிஞ்சிலே பழுத்தது இல்லை இல்லை வெம்பியது என்ற நற்பெயர் பெற்றது..

பெற்ற நண்பர்கள்:
நிறைய பேர், வலைப்பூ பதியும் அனைவரையுமே நான் தோழர்/தோழிகளாகவே கருதுகிறேன், இது நழுவுவதற்காக சொல்லப்பட்ட கருத்தல்ல....

கற்றவை:
தன் கட்டுப்பாடில்லாத சுதந்திரம், அடிமைத்தனத்தை விட மோசமானது, நடைமுறையில் உணர்ந்தது...
ஒரு மூளை சிந்தித்து எழுதுவதை, படிக்கும் மூளை எவ்விதமெல்லாம் வெவ்வேறு கோணங்களில் சிந்திக்கமுடியும் என்பது பின்னூட்டகளின் மூலம் அறிந்தது...
மனமாற்றத்திற்கும், அழித்தொழிப்பதற்கும் உள்ள வேறுபாடு...


எழுத்தில் கிடைத்த சுதந்திரம்:
politically correct எனப்படுகிற வகையில் எந்தக்கருத்தை எழுதினாலும் அது ஏற்றுக்கொள்ளப்படும், சற்றே தவறினால் தனிமனித தாக்குதல் நிச்சயம்.

இனி செய்ய நினைப்பவை:
என் கடன் ஊதுகிற சங்கை ஊதிக்கொண்டிருப்பதே....

உங்களைப் பற்றிய முழுமையான குறிப்பு:
வீட்டில் கடைகுட்டி
படிப்ப(த்த)து : இளங்கலை அறிவியல் (வேதியியல் துறை).
மதுரை தமிழ்சங்கத்தின் தேர்வில் பள்ளியில் முதல் ஆளாய் வரப்போய், தமிழார்வமும் தொற்றிக்கொண்டது.
நாளையென்று தள்ளிப்போடும் சோம்பேரி..
இலட்சியக் கனவுகளின் தொழிற்சாலை


இன்னும் நீங்கள் சொல்ல நினைக்கும் ஒன்றைச் சேர்க்கலாம்:
எந்த பிரச்சினைக்கும் தீர்வுகள் கறுப்பு அல்லது வெள்ளை என்ற விளிம்பு நிலையில் தேடும் நிலையே பெரும்பாலான இடங்களில் நிலவுகிறது. சாம்பல் நிற யானை பற்றிய விவாதங்கள் நிறைய வருவது தமிழ்மணத்தில் அதிகரித்துள்ளது. அடுத்தவர் தன்மானத்தை பாதிக்காத வகையில் விவாதங்கள் செய்ய முயற்சி செய்கிறேன்.

அனைவரின் ஆதரவைத் தேடி
பூங்குழலி.

8 பின்னூட்டங்கள்:

Anonymous said...

உங்களைப்பற்றி அறிந்து கொள்ள முடிந்தது . நன்றி! வாழ்த்துக்கள்!


Anonymous said...

அம்மனி, எதோ நடந்தது, பகிர்ந்துகொள்கிறேன்னு எழுதியிருந்தீங்களே என்ன விஷயம்?

சும்மா ஒரு ஆர்வக்கோளாருதான்...:-)


அருள் குமார் said...

இவ்வளவு நாட்களாய் எங்கே போயிருந்தீர்கள் என கேட்க நினைத்தேன். ஆனால் உங்கள் பதிவிலேயே பதில் கிடைத்துவிட்டது.

//நாளையென்று தள்ளிப்போடும் சோம்பேரி..// சரிதானே!


மஞ்சூர் ராசா said...

இன்று தான் இந்தப் பக்கம் வர வாய்ப்பு கிடைத்தது. உங்கள் சுயத்தினை படித்தபோது மேலும் உங்கள் பதிவுகளை படிக்கும் எண்ணம் ஏற்பட்டுள்ளது படித்துவிட்டு சொல்கிறேன்.

எனக்கு தோன்றுவது என்னவென்றால் நாம் அனைவரும் தமிழர்கள் என்ற நிலையில் யார் மனதையும் புண்படுத்தாவண்ணம் நமக்கு கிடைத்திருக்கும் இந்த அறிய வலைப்பதிவு வாய்ப்பை பயன்படுத்தி நமது தமிழை வளர்ப்போம், ஆரோக்கியமான முறையில் விவாதிப்போம் என்பதே.

மிகவும் நன்றி. வாழ்த்துக்கள்.
மஞ்சூர் ராசா
http://manjoorraja.blogspot.com/
http://muththamiz.blogspot.com/
குழுமம்:http://groups.google.com/group/muththamiz


Anonymous said...

Are you the one who wrote about reservation issue in Keetru.com ?


Uma Nedumaran said...

தோழி...
உங்களுக்கும் எனக்கும் நிறைய ஒற்றுமைகள்.. பெயர் உட்பட...
என் பெயரை வலையில் தேடப் போய் .. உங்கள் வலைப் பக்கத்தை வந்தடைந்தேன்..
பார்ப்போம்..
பிறவற்றையும் படித்துவிட்டு வருகிறேன்..
பேசுவோம்...


பொன்ஸ்~~Poorna said...

பூங்குழலி,
உங்க பதிவெல்லாம் இப்போ தான் ஒவ்வொண்ணா படிச்சி பார்த்தேன்.. நல்லா எழுதறீங்களே, சமீபத்துல ஏன் உங்க பதிவுகள் அதிகமில்லை?

பை த பை,
//சாம்பல் நிற யானை பற்றிய விவாதங்கள் நிறைய வருவது தமிழ்மணத்தில் அதிகரித்துள்ளது.//
இதுக்கு என்ன அர்த்தம்? (அதுக்கு முந்தின வரி புரிஞ்சது. இது நல்லதுன்னு சொல்றீங்களா, இல்லைன்னு சொல்றீங்களான்னு தான்... )


Raghavan alias Saravanan M said...

பூங்குழலி,
சில மாத இடைவெளிக்குப் பின் தங்கள் வலைப்பூவைப் பார்வையிடுகிறேன்.

நானும் இதே போன்று ஒரு பங்களிப்பினை அனுப்பியிருக்கிறேன்...

நீங்கள் குறிப்பிட்டுள்ள இராகவன் யார்? டோண்டு ராகவன் என்றொருவர் இருக்கிறார்.. அவரா? அல்லது gragavan என்ற நண்பரா?


வாழ்த்துக்கள்..
நன்றாக நிறைய சங்குகளை ஊதுங்கள்...
சத்தத்தில் நாங்கள் திளைக்கிறோம்.

இராகவன் என்ற சரவணன் மு.