அகப்பட்டேன் கிடந்துழல அகப்பட்டேன்...
தினம் ஒரு பதிவு போடாவிட்டால் கைகள் நடுங்குதல், பின்னூட்டங்களை படிக்க பயப்படுதல்,காலை எழுந்ததும் தமிழ்மணத்தில் முழித்தல், அரைத்தூக்கத்தில் பின்னூட்டங்களை மாற்றியிடல், பதிவிட்டு 1 மணி நேரமாகியும் பின்னூட்டம் வராமல் திகிலடைதல், ஆபீஸ் கணினியில் Alt+Tab ம், வீட்டுக்கணினியில் F5 பட்டன்களும் தேய்ந்திருத்தல், விளக்கப்பதிவென வெளங்காப்பதிவிடல், IP அட்ரசை அடிவரை தோண்டுதல், பார்க்குமிடமெல்லாம் +/- தேடுதல் போன்ற அனைத்து வியாதிகளும், மேலும் பதிவுகளைப் படிக்கும்போதே ஏற்படும் மடக்கிட்டானோ என்ற வயிறு கலக்கும் பயம், தெரிஞ்சிருக்குமோ என்ற வெட்கம், கண்டுபிடிச்சுட்டாங்களோ என கூனிக்குறுகும் அவமானம், கேட்டுட்டானே என தலைக்கேறும் கோபம், ஒத்துக்கவே மாட்டேங்கறானே என வரும் வெறுப்பு, சொன்னதை மாத்தி சொல்லறானே என மூக்கு நுனியில் எரிச்சல், அடக்கமாட்டாமல் வரும் அகப்பாவச் சிரிப்பு போன்ற அனைத்து தொந்தரவுகளை ஏற்கனவே பெற்றிருக்கும் எனக்கு தமிழினியின் சங்கிலிப் பதிவை படித்தவுடன், கானுழைத்துக்கொண்டே ஆப்பதனை அசைத்துவிட்ட குரங்கதனைப் போலானேன்.
விரும்பிக்கேட்கும் பாடல்கள்.
ரோஜாவைத்தாலாட்டும் தென்றல்...
"வசந்தங்கள் வாழ்த்தும்பொழுது உனது கிளையில் பூவாவேன்
இலையுதிர் காலம் முழுதும் மகிழ்ந்து உனக்கு வேராவேன்" என்ற வரிகளுக்காகவே..
மயிலிறகாய் மயிலிறகாய்... நிஜமாகவே நெஞ்சை வருடுகின்றது. ஒருவேளை எம்பெருமானின் மயிலிறகாய் இருக்குமோ?
வசிகரா என் நெஞ்சினிக்க..
இந்த பச்சைக்கிளிக்கொரு செவ்வந்திப்பூவில்...
உயிர்/உடல் வாழிடங்கள்..
தாயின் கருவறை
அம்மா அப்பாவின் இதயங்கள்
பொதுகே
சென்னைப்பட்டினம்
(இருந்தது இரண்டே இடம்,
இப்படித்தான் சொல்லமுடியும்)
முன்மாதிரியாய் நான் எடுத்துக்கொள்பவர்கள்.
அன்னை தெரசா
முத்துலட்சுமி
அன்னை (ஆரோ)
ஜெயலலிதா - ஆனால் ஓட்டு யாருக்கு என்று சொல்லமாட்டேன்.
சான்றோர்
காமராசர்
அப்துல் கலாம்
அவ்வையார்
உ.வே.சா
என் நெஞ்சில் குடிகொண்டுள்ளோர்..
மயிலம் முருகன்
திருவகீந்தபுரம் தேவநாத சுவாமி
இவர்கள் இருவரும் எனது தாய் தந்தை மூலம் அறிமுகமானார்கள்.
இவர்களைஅடிக்கடி இல்லாவிட்டாலும் பூசம், உத்திரம் மற்றும் சித்திரை முழுநிலவுகளில் பார்த்துவிடவேண்டும்.என்னதான் தேவநாதன் குலதெய்வமானாலும், முருகனே என் உள்ளங்கவர் கள்வன்
திருவள்ளுவர்
பாரதி
இவர்களைப் பற்றிய அறிமுகம் தேவையில்லை.
கலையுலகில் பிடித்தவர்கள்.
இளையராஜா
நந்தா சூர்யா
ச்ரிதேவி - மூன்றாம் பிறையில் படம் முழுக்க நன்றாக நடித்த இவரை மிகப் பிடிக்கும்
விவேக் நகைச்சுவை
பிடித்த படங்கள்
மூன்றாம் பிறை
மகாநதி -முக்கியமாய் நாயகன் தன் பெண்ணை மீட்டெடுக்கும் காட்சி, மற்றும் அப்பெண்ணின் தூக்க உளரல் என்னை பாதித்தது. கொலைவெறி என்று சொல்லமுடியாது, பார்த்த ஓரிரு நாட்களுக்கு கைப்பையில் பேனாக்கத்தியை வைத்துக்கொண்டு அலைந்ததென்னவோ உண்மை.
முள்ளும் மலரும்
அழகி - என்னை பொருத்திப் பார்த்துக்கொன்டதால் எனக்கு பிடித்ததில் ஒன்றாயின.
பிடித்த செயல்கள்.
சமையல் - (உண்மைதானுங்க).. மற்றும் காலி செய்தல்..
கவிதை என்ற பெயரில் கிறுக்குவது (மற்றவரின் கருத்து தெரியாததால் அடக்கி வாசிக்கிறேன்.)
தமிழ்மணத்தில் புலம்புவது.
அண்ணனின் பைக்கில் சற்றே ஊர் சுற்றுவது.
டிவி பார்க்க நேரிடின் பார்க்கும் நிகழ்ச்சிகள்
Pogo
இந்தியா விளையாடும் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகள் ( குளிக்காமல்?)
சன் மியூசிக்
எங்கள் வீட்டு டிவியின் 24ம் அலைவரிசை :)
பிடித்த உணவு..
இயற்கையின் படைப்பில் நிற்பதுவே, நடப்பதுவே, பறப்பதுவே என எந்த வேறுபாடும் பார்க்கமாட்டேனாக்கும்..
ஆனாலும்...
ஐஸ் பிரியாணி (அதானுங்க பழையது + சிறிது தயிருடன்..) + வறுத்த மோர் மிளகாய்
வத்தக் குழம்பு
கோழி65
மீன் எந்த விததிலும், முக்கியமாய் சங்கரா?
அடிக்கடி புரட்டும் புத்தகங்கள்
ஆங்கில அகராதி.
இட்லரின் சுயசரிதை - ஒண்ணுமே புரியமாட்டேங்குது.. ஆங்கில அகராதி கிழிந்தே விட்டது
பைபில்
பகவத் கீதை
கடையிரன்டும் ஆய்வு நோக்கில் தமிழில் படித்துக்கொன்டிருக்கிறேன்.
தமிழில் திருகுரான் கிடைக்குமா?
விரும்பும் நிகழ்வுகள்.
மயிலம் பயணம்.
முருகனின் மீதான ஒரு காதல் காவியம்..
கூர்க் சுற்றுலாப் பயணம்.
அண்ணனை மிரளவைக்கும் அளவிற்கு ECRல் பைக் பயணம்.
அடிக்கடி பார்க்கும் வலைத்தளங்கள் (தினமும் எல்லாம் முடியாதுங்க..)
ஜிமயில்
google தேடல்
தமிழ்மணம்
எனது பக்கம்
அழைக்க விரும்பும் நால்வர்
துளசி அவர்கள்
மதி அவர்கள்
உஷா அவர்கள்
"அவர்கள்" தான் போடனும், அப்புறம் என்னை யாராவது அக்கா என்று சொல்லிவிட்டால்..
மருள் நீக்கி -
தமிழ் பாடல்கள் எழுதும் இவருக்கு எனது வணக்கங்கள்.
நல்லவன் மருள்நீக்கி இருவரா ஒருவரா எனத் தெரியவில்ல.
வெகுசிக்கிரமே தினமலரில் பெயர் வந்துவிட்ட பெருமைக்குரியவர்.
(எனதெல்லாம் தினமலரில் போடும்படியாகவா இருக்கிறது..?)
இதோ என்னப் பற்றி சொல்லியாகிவிட்டது, இதெல்லாம் எனது உடனுறை மாமித் தோழிகள், உறவினர்கள் படிக்க நேரிடின் என்னாகுமோ, குட்டு வெளிப்பட்டுவிடுமோ, அடங்காப் பிடாரி என்ற அவச்சொல் ஏற்படுமோ, சமுகம் விட்டு ஒதுக்கி விடுவார்களோ? ஏதேனும் முகமூடி போட்டுக்கொண்டு ஆசிட் முட்டை வீசிவிடுவார்களோ என்ற பயம், மன நடுக்கம், கை கால் உதறல், என்னமாதிரியான பின்னூட்டக் கேள்விகள்/பதில்கள் வரும், அல்லது சென்ற பதிவிற்கு தமாஷ் பாண்டி மற்றும் குமரன் அவர்களின் வாக்கு வேண்டி வந்த பின்னூட்டங்களைத் தவிர ஒன்றுமே வராததால் ஏற்கனவே ஏற்பட்ட மனக்குழப்பம் போல் இப்போதும் ஏற்படுமோ? என்ற பயம் உள்ளது.
(பி.கு. எதையுமே நான் வரிசைப் படுத்தவில்லை, அதனால் வரிசை எண் போடவில்லை. அனைத்தும் ஒன்றே.)
உதறலுடன்,
பூங்குழலி